Latest Updates
-
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..
இந்த 5 ராசிக்காரங்க தப்பான நபரை காதலிச்சு கஷ்டப்படுவார்களாம்... இந்த பாவப்பட்ட ராசிகளில் நீங்க இருக்கீங்களா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் தனித்துவமானவர்கள், அவர்களின் ஆளுமை மற்றும் நடத்தையை தீர்மானிப்பதில் அவர்களின் பிறந்த ராசி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. அதில் அவர்களின் உறவு நிலைகளும் அதன் சிக்கல்களும் அடங்கும்.
உங்கள் வாழ்க்கையில் நாடகம் மற்றும் நச்சுத்தன்மையைக் கொண்டுவரும் சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால் நீங்கள் நன்கு கவனித்தால் அவர்கள் குறிப்பிட்ட ராசிகளில் மட்டுமே பிறந்தவர்களாக இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக சிலரின் வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்கள் அதிகம் குறுக்கிடுவார்கள்.

இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நச்சுத்தன்மை உடையவர்களை ஈர்ப்பார்கள் மற்றும் அதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உமிழும் மற்றும் உணர்ச்சிமிக்க இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். மனக்கிளர்ச்சியுடன் முடிவெடுப்பதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் மோசமான நபர்களை அவர்கள் வாழ்க்கைக்குள் ஈர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளர்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் உறவுகளில் குதிக்க முனைகிறார்கள், இதனால் நச்சுத்தன்மையுள்ளவர்கள் அவர்கள் வாழ்க்கையில் ஊடுருவுவதை எளிதாக்குகிறார்கள்.
காதலில் ஈடுபட ஆர்வமுள்ள மேஷ ராசிக்காரர்கள், ஆரம்பகட்டத்தில் வசீகரமாகத் தோன்றினாலும் பின்னர் கையாளும் பண்புகளை வெளிப்படுத்தும் ஒருவருடன் அவசரமாக உறவில் ஈடுபடலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் விசுவாசம் மற்றும் பிடிவாதத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புள்ள துணையை ஈர்க்க முயற்சிக்கும் போது, அவர்கள் தங்களை பயன்படுத்திக் கொள்ளும் நச்சு நபர்களை ஈர்க்கலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் ஒரு நச்சுத் துணையுடன் இணைந்திருக்கலாம், அது அவர்களுக்கு தீங்கு விளைவித்தாலும் கூட, அதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சமூகத்துடன் வலுவானத் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் பேச்சு மற்றும் அறிவார்ந்த தூண்டுதலின் தேவையைப் பயன்படுத்தும் நச்சு கூட்டாளர்களை ஈர்க்க முனைகிறார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் ஈர்க்கக்கூடியதாகத் தோன்றினாலும் பின்னர் ஒரு கையாளும் பக்கத்தை வெளிப்படுத்தும் ஒருவரிடம் எளிதில் காதலில் விழக்கூடும், அவர்களின் துணை அவர்களுடைய உணர்ச்சிகளைக் கையாள அவர்களின் கவர்ச்சியைப் பயன்படுத்திகே கொள்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் கவனத்தின் மையமாக இருப்பதை விரும்புகிறார்கள். அவர்களின் காந்த ஆளுமை அவர்களை நோக்கி மோசமான கூட்டாளர்களை எளிதில் ஈர்க்கும், ஆனால் நாளடைவில் அவர்கள் பொறாமை மற்றும் சந்தேகத்திற்கு ஆளாகலாம்.
ஒரு சிம்மம் ஆரம்பத்தில் அவர்களை விரும்பும் ஒரு துணையை ஈர்க்கக்கூடும், ஆனால் பின்னர் பொஸசிவாகவும், அவர்களை கட்டுப்படுத்தக்கூடியதாகவும் மாறி, அவர்களின் பிரகாசத்தை மங்கச் செய்ய முயற்சிப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள். உறவுகளில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான தங்கள் விருப்பத்தை சுரண்டும் நச்சு ஒருவரை அவர்கள் ஈர்க்க முனைகிறார்கள்.
அவர்களை நோக்கி வருபவர்கள் பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கையில் மோதல்களையும், நாடகத்தையும் ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் காதலை பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் மட்டுமே சுமக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

