Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? ஜோதிடம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?
World Cup 2023: உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி வந்துவிட்டது.
ராட்சத வலிமையுடன் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்கள் பலத்தை அகமதாபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சோதிக்க தயாராக இருக்கிறார்கள்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் இப்போதே பலமடங்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்தியர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் எப்போதுமே வெறும் விளையாட்டாக மட்டும் இருந்ததில்லை.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், 46 விறுவிறுப்பான போட்டிகளுக்குப் பிறகு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள உள்ளன. ஆஸ்திரேலியா, தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து, தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, அதே நேரத்தில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்காமல் உள்ளது.
அனைத்திற்கும் ஜோதிடக் கணிப்புகள் பார்க்கும் வழக்கம் நமக்கு உள்ளது. அது இந்த உலகக்கோப்பைக்கும் அடங்கும். அதன்படி கிரகநிலைகளின் படி இந்த இறுதிப்போட்டி யாருக்கு அனுகூலமானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புகள் என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அணி
இந்த உலகக்கோப்பையின் தொடக்கத்தில் இருந்தே விராட் கோலி, முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவின் உத்திகள் 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இருக்க வழிவகுத்தது. ஒரு அணி வெற்றி பெறுவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம், அவை பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங். இந்த மூன்று பிரிவுகளிலுமே இந்திய அணி இந்த உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டது.
ஆஸ்திரேலிய அணி
நாக் அவுட் ஆட்டங்களில் எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு நன்கு தெரியும், மேலும் அவர்கள் இதுவரை ஐந்து உலகக் கோப்பை கோப்பைகளை வென்றுள்ளார்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஆறாவது உலகக் கோப்பை வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணி மும்முரமாக தயாராகி வருவதை மறந்துவிடக்கூடாது.
ரன்களை குவித்தது மட்டுமின்றி தங்களது பந்துவீச்சுத் திறமையாலும் மேஜிக் காட்டிய பன்முகத் திறமையாளர்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.
இந்திய அணிக்கான கணிப்புகள்
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கணிப்புகளில் நாம் கவனிக்க வேண்டியது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கிரக நிலைகளைத்தான். அதிர்ஷ்டவசமாக, வியாழன் மற்றும் செவ்வாய் கிரக இரட்டையர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையின் போது சரியான முடிவுகளை எடுக்க ரோஹித் சர்மாவுக்கு உதவும்.
அவரது தலைமைப் பண்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மங்களகரமான ராஜயோகத்தை அவரது ஜாதகம் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஜோதிட காரணிகளான ராஜயோகம் மற்றும் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் கலவையானது, இந்திய அணிக்கு சிறந்த விளையாட்டு உத்திகளைக் கொண்டு வரவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை அமைக்கவும் உதவும்.
ஆஸ்திரேலிய அணிக்கான கணிப்புகள்
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் கிரகமான வியாழன், பேட் கம்மின்ஸின் ஜாதகத்தில் மைய இடத்தைப் பெறுகிறது. இப்போது, நிலவும் கிரக சூழல், அது கம்மின்ஸின் முடிவெடுக்கும் திறனை வலிமையாக்குவது மட்டுமல்லாமல், அழுத்தமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்க உதவுகிறது.
அனைத்திற்கும் மேலாக விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார். இதனால் இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் ஒரு சிறப்பான தந்திரத்தைக் கொண்டு வர இந்தப் போக்குவரத்து உதவும். இது மட்டுமின்றி பேட் கம்மின்ஸின் ஜாதகத்தில் கேதுவின் வலுவான செல்வாக்கு இந்தியா vs ஆஸ்திரேலியா உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியின் போது சில எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு வரலாம்.
கோப்பையை வெல்லப்போவது யார்?
இரு அணிகளின் கணிப்புகளின் படி, இரு அணிகளும் 250 முதல் 315 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. ஒருபுறம், ஆஸ்திரேலிய அணியில் விருச்சிகத்தில் வியாழன் மற்றும் புதன் பெயர்ச்சி பலன்களைக் கொண்டுள்ளது, இது உத்திகள் மற்றும் திறன்களை அதிகரிக்க போதுமானது. அதே நேரத்தில், செவ்வாய் மற்றும் ராஜயோகாவின் வலுவான செல்வாக்கு இந்திய அணியின் ஆட்டத்தை வலுப்படுத்துகிறது. ஆனால் கேதுவின் நுழைவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆடடத்தைக் கெடுக்கும்.
எனவே, ஐந்து முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 3வது முறையாக கோப்பையை வெல்லும் என்று 2023 உலகக் கோப்பை கணிப்பு கூறுகிறது. கிரக நிலைகள் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது என்பது தெளிவாகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
