For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா?...

|

செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்வதும் ஒரு கடினமான செயலாகும். உங்கள் செல்லப்பிராணி அசுத்தமாக இருந்தாலோ அல்லது சுகவீனமாக இருந்தாலோ, அதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சில பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

Removed From Womans Ear

அது போல் ஒரு நிகழ்வு தான் இப்போது நாம் காணவிருப்பது. ஒரு பெண்ணின் காதுக்குள் ஒரு உண்ணி ஒட்டிக் கொண்டு விட்டது. இந்த உண்ணி அவருடைய செல்ல நாய்க்குட்டி வழியாகவே அவர் காதுக்குள் சென்றிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காதுக்குள் ஒட்டிக் கொண்டிருந்த உண்ணியை அகற்றும் வீடியோவை இப்போது நீங்கள் காணலாம். அந்த பெண்ணின் காதுக்குள் ஆழமாக ஊடுருவிய உண்ணியை வெளியில் எடுக்கும் நேரடி காட்சி நம்மை நெளிய வைக்கும் விதமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காத்து இரைச்சல் மற்றும் ரீங்கார ஒலி

காத்து இரைச்சல் மற்றும் ரீங்கார ஒலி

இந்த சம்பவம் தாய்லாந்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய காதில் ஒரு வித இரைச்சல் உணர்வு இருப்பதை உணர்ந்திருக்கிறார். அந்தப் பெண் தாய்லாந்தின் பிட்சானுலோக்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். திடீரென இடது காதில் தொடர்ந்து ஒரு ஒலி உண்டாவது போல் ஒரு விசித்திரமான உணர்வை உணர ஆரம்பித்ததால் அந்தப் பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்று ஆதாரங்கள் கூறுகின்றன

எட்டுக்கால் வகை பூச்சி

எட்டுக்கால் வகை பூச்சி

மருத்துவர் அந்தப் பெண்ணின் காதுக்குள் பரிசோதித்துப் பார்த்தபோது, அவள் காது கால்வாயில் ஒரு சிறிய பூச்சி (சிலந்தி அல்லது தேள் போன்ற எட்டுக்கால் வகை சிறிய பூச்சி) இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் காதுக்குள் பரிசோதிக்க பயன்படுத்திய குழாயின் முடிவில் அந்தப் பூச்சி சுற்றி கொண்டிருப்பதை இந்த காட்சி வெளிப்படுத்துகிறது.

MOST READ: அடக்கொடுமையே! சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...

பூச்சி அகற்றப்பட்டது

பூச்சி அகற்றப்பட்டது

மைக்ரோ-உறிஞ்சும் குழாயைப் பயன்படுத்தி 6 மிமீ நீளமுள்ள டிக்கை வெற்றிகரமாக அகற்றியவர் பிராடி சன்மொன்டன் என்ற ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட் (ஒரு ENT நிபுணர்).

இதன் பின்னணி

இதன் பின்னணி

இவ்வளவு பெரிய உண்ணி அந்தப் பெண்ணின் காதுக்குள் எப்படி சென்றது என்பதை அறிய, மருத்துவர்கள் அவரது பின்னணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அந்தப் பெண்மணி தான் செல்லப் பிராணியாக பல நாய்களை வளர்ப்பதாகக் கூறினார். தனது செல்லப் பிராணிகளை மிகவும் நேசித்ததால், அவற்றை வயல்வெளிகளில் மற்றும் கால்வாய்களில் ஓடவும் விளையாடவும் அனுமதித்தாகத் தெரிவித்தார். இதன் காரணமாக அவருடைய பிராணிகளுக்கு உண்ணி தொற்று ஏற்பட்டு இதனால் இ ரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

MOST READ: உட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா? வலி உயிர் போகிறதா? என்ன பண்ணலாம்?

பெண்ணின் அதிர்ஷ்டம்

பெண்ணின் அதிர்ஷ்டம்

நீளமான புல்வெளிகள் மற்றும் மரங்கள் உள்ள இடத்தில் இந்த உண்ணிகள் வசிப்பதாக மருத்துவர்கள் கூறினர். இரத்தத்தை உறிஞ்சும் இத்தகைய பூச்சிகள் குதிப்பதோ நல்லது பறப்பதோ இல்லை. மாறாக, இவை தன்னுடன் தொடர்பில் உள்ள விலங்குகள் அல்லது மனிதர்கள் மேல் ஒட்டிக் கொள்கின்றன. நல்ல வேளை, இந்த உண்ணி அப்பெண்ணின் காதில் குஞ்சு பொரிக்காமல் இருந்தது அந்தப் பெண்ணுடைய அதிர்ஷ்டம் என்று மருத்துவர்கள் கூறினர். அப்படி நிகழ்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது மிகவும் கடினம் என்றும் அவர்கள் கூறினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Watch: Scary Footage Of Tick Being Removed From Woman's Ear

Having pets and keeping them in good health is quite a task. If your pet is unwell or is not clean, there are high chances of you and your family contracting an unexpected illness.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more