நாம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகள் எல்லாம் தவறுதலா கண்டுபிடிக்கப்பட்டதாம்... எப்படி-ன்னு பாருங்க..

புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க நினைப்பவர்கள், அவற்றைக் கண்டுபிடிக்க நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பல சிரமங்களை சந்தித்திருப்பார்கள். எப்போதுமே ஒன்றை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளின் போது, ஒரே முயற்சியிலேயே இலக்கை அடைய முடியாது.

பல தோல்விகளை சந்தித்த பின்னரே வெற்றி அடைய முடியும். உதாரணமாக, ஐன்ஸ்டீன் மற்றும் எடிசன் ஆகியோர் தாங்கள் கண்டுபிடித்தது வெற்றி பெறுவதற்கு முன் பல தோல்விகளை சந்தித்திருப்பார்கள். தோல்விகள் தான் வெற்றிக்கான சரியான பாதையை உருவாக்கித் தரும்.

Top 8 Food Items Discovered by Mistake In Tamil

அந்த வகையில் மனிதன் உயிர் வாழ உணவுகள் மிகவும் இன்றியமையாதது. தற்போது பல்வேறு உணவுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படி புதிய உணவுகளை கண்டுபிடிக்கும் போது நடந்த தவறுகளால் பலவகையான உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது தெரியுமா? அந்த உணவுகள் உலகளவில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்பட்டும் வருகின்றன. இப்போது அப்படி தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்ட சில உணவுகளைக் காண்போம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸானது 1853 ஆம் ஆண்டு ஜார்ஜ் க்ரம் என்பவரால் முதல்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் சரடோகா ஸ்பிரிங்ஸில் உள்ள மூன் லேக் லாட்ஜில் தலைமை சமையல்காரராக பணியாற்றினார். இந்த ரெஸ்டாரண்ட் உருளைக்கிழங்கு ப்ரைஸ் வழங்குவதில் பிரபலமானது. ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் ப்ரைஸ் மிகவும் தடிமனாக இருப்பதாக புகார் அளித்தார்.

எனவே க்ரம் அந்த வாடிக்கையாளருக்காக மெல்லியதாக ப்ரைஸ் செய்து கொடுத்தார். ஆனால் இன்னமும் அது நன்றாக இல்லை. எனவே க்ரம் விரக்தியடைந்து, முடிந்தவரை மெல்லிய துண்டுகளாக்கி, அவற்றை எண்ணெயில் பொரிக்க முடிவு செய்தார். இப்படி பொரித்ததை அந்த வாடிக்கையாளர் விரும்பியது மட்டுமல்லாமல், தற்போது உலகமே விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அது தான் உருளைக்கிழங்கு சிப்ஸ்.

கோகோ கோலா

ஜான் பெம்பர்டன் என்பவர் கொக்கெயின் போதைக்கு மாற்றாக உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட பானம் தான் கோகோ கோலா. ஆரம்பத்தில் இவர் தனது காப்ஃபன் நிறைந்த கோலா கொட்டையுடன் சிறிது கொக்கெயினை கலந்து, ஒரு சிறிய டானிக்காக உருவாக்கினார். இதை மற்றொரு மருந்தாளரான ஆசா கேண்ட்லர் $2,300 க்கு வாங்கினார். இந்த டானிக்கில் இவர் சிறிது சோடா பானத்தை சேர்த்தார். பின் 1890-களில் அமெரிக்காவில் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானமாக கோகோ கோலா மாறியது.

குச்சி ஐஸ்

1905 ஆம் ஆண்டு குச்சி ஐஸானது 11 வயது சிறுவனால் தயாரிக்கப்பட்டது. இன்னும் குழநதைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகவும் உளளது. ஃபிராங்க் எப்பர்சன் தனது சோடா தயாரிக்கும் உபகரணத்தை ஒரே இரவில் தனது தாழ்வாரத்தில் ஒரு கலவை குச்சியை வைத்து விட்டுச் சென்றார். மறுநாள் காலையில் அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அதன் பின் 17 வயதில் வெவ்வேறு சுவையுடைய குச்சி ஐஸை தயாரித்து விற்கக்த் தொடங்கினார். தற்போது அந்த குச்சி ஐஸ் பெரும்பாலானோரின் பிரியமானாக இருக்குகிறது.

சாண்ட்விச்

சாண்ட்விச் குறித்து பல்வேறு கதைகள் உலாவி வருகின்றன. அதில் ஒருமுறை சாண்ட்விச்சின் 4 ஆவது ஏர்ல், ஜான் மாண்டேகு சூதாட்டத்தை தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தால், தனது மதிய உணவை எடுக்க மறந்துவிட்டார்.

அப்போது அவர் கட்லரி இல்லாமல் தனது கைகளால் சாப்பிடக்கூடிய உணவை கொடுக்குமாறு சமையல்காரரிடம் கேட்டார். அப்போது அவரது சமையல்காரர் அவருக்கு இறைச்சி மற்றும் காய்கறிகளை இரண்டு பிரட் துண்டுகளுக்கு நடுவே வைத்து கொடுத்தனர். மேலும் இதற்கு சாண்ட்சில் என்றும் பெயரிட்டனர். இப்படி தான் சாண்ட்விச் கண்டுபிடிக்கப்பட்டது.

ஷாம்பெயின்

ஷாம்பெயின் என்னும் பிரபலமான பானத்தை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஷாம்பெயின் 1490 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சாம்பெயின் ஒயினில் இருந்து உருவாக்கப்பட்டது. அதுவும் ஒயினை நொதிக்க வைக்கும் செயல்முறையின் போது, இது அதிகமான குமிழ்களை உருவாக்கத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் ஷாம்பெயின் பகுதியின் வெப்பநிலை உயரத் தொடங்கியது. வெப்பம் அதிகமானதால் நொதிக்கும் செயல்முறையானது இருமடங்கு அதிகரித்து, குமிழ்களும் இருமடங்கு அதிகமாக உருவாகத் தொடங்கியது. இப்படி குமிழ்கள் அதிகமாக உருவானதால் அது பாட்டில்களின் கார்க்குகளை வெளியே தள்ளி, பாட்டில்களை வெடிக்க செய்தது. அதன் பின் இந்த குமிழ்கள் கட்டுப்பாட்டுப்படுத்தப்பட்ட பிறகு, தடிமனான கண்ணாடி பாட்டிலில் இந்த பானம் நிரப்பப்பட்டு, ஷாம்பெயின் என்று பெயரில் விற்கப்பட்டது.

கார்ன் ப்ளேக்ஸ்

கெல்லாக்கின் சகோதரர்களில் ஒருவரான வில் கெல்லாக் 1900-களின் முற்பகுதியில் கார்ன் ப்ளேக்ஸை கண்டுபிடித்தார். நோயாளிகளுக்கு ஆரோக்கியமான கிரனோலாவை தயாரிக்க முயற்சிக்கும் போது, வில் மற்றும் ஹார்வி கெல்லாக் கோதுமை பெர்ரியிலிருந்து எதிர்பாராதவிதமாக செதில்களை உருவாக்கினர்.

எனவே வில் கெல்லாக் சோளத்தை உதிர்ப்பதில் வெற்றி பெறும் வரை இந்த பரிசோதனையை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அது வெற்றிகரமானது, அதன் பின் அதற்கு கார்ன் ப்ளேக்ஸ் என்று பெயரிட்டு விற்கப்பட்டது. இப்போது இந்த கார்ன் ப்ளேக்ஸ் உலகளவில் பிரபலமான காலை உணவாக உள்ளது.

டோஃபு

டோஃபு என்பது பழங்கால சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டோஃபு குறித்து 2 விதமான கதைகள் உள்ளன. ஒன்று ஒரு சமையல்காரர்கள் சோயா பாலில் நிகாரி என்ற ஒரு உறைப்பனியை போட்டதால் உருவானதாக கூறுகிறது. மற்றொன்று கொதிக்கும் சோயா பாலில் உப்பை சேர்க்கும் போது, அதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் இந்த சோயா பாலை உறையச் செய்து டோஃபுவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

யோகர்ட்

பாலில் பாக்டீரியா மற்றும் நொதிகளை சேர்க்கும் போது, யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. இப்படியான ஒன்றை கிமு ஆறாம் நூற்றாண்டில் மத்திய ஆசிய ஆடு மேய்ப்பவர்களால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆட்டின் பாலை விலங்குகளின் வயிற்றில் சேமித்து வைப்பார்கள். இப்படி வைக்கும் போது, அது பாலை கெட்டியாக மற்றும் புளிப்புச் சுவையுடன் மாற்ற தேவையான பாக்டீரியா மற்றும் நொதிகளை வழங்கும். மேலும் இது புதிய பாலை நீண்ட நேரம் பிரஷ்ஷாக வைத்திருக்கும். இறுதியில் உறைந்து தயிர் நிலையை அடையும்.

Story first published: Sunday, November 26, 2023, 17:59 [IST]
Desktop Bottom Promotion