Latest Updates
-
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்!
கொழுப்பு கல்லீரல் நோய் இயற்கையா சரியாகணுமா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற 'இத' குடிங்க..
Fatty Liver Disease In Tamil: சமீப காலமாக கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்து வருகிறது. இது ஒரு சுகாதார கவலையாக அதிகரித்து வருகிறது. பொதுவாக கொழுப்பு கல்லீரல் நோயானது கல்லீரலில் கொழுப்பு சேரும் போது ஏற்படுகிறது. இதை கண்டு கொள்ளாமல் விடும் போது, அது கல்லீரலில் தீவிர அழற்சியுடன், கல்லீரல் நோய்களுக்கும் வழிவகுக்கும்.

பெரும்பாலும் மது அருந்துவது கொழுப்பு கல்லீரல் நோய்க்கான காரணியாக இருந்தாலும், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அதில் முதன்மையானது உடல் பருமன். உடல் எடை அதிகரிப்பு என்பது கொழுப்பு தேக்கத்தினால் ஏற்படக்கூடியது.
அதுவும் அந்த கொழுப்பு வயிற்றுப் பகுதியில் தேங்கும் போது, கொழுப்பு கல்லீரல் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் போன்றவைகளும் கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
இருப்பினும், இந்த கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறையில் மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களை செய்வதன் மூலம் தடுக்கவும், சில சமயங்களில் குணப்படுத்தவும் முடியும். எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மருத்துவரான டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கான சக்தி வாய்ந்த 3 பானங்களை பகிர்ந்து கொண்டார். அந்த பானங்கள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் அவர் கூறியதாவது, "நான் ஒரு கல்லீரல் நிபுணர். கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட எனது நோயாளிகளுக்கு நான் அடிக்கடி பரிந்துரைக்கும் 3 பானங்கள் இவை தான்" என்று கூறினார்.
1. க்ரீன் டீ
"க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. அதுவும் EGCG போன்ற கேட்டசின்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைத்து கல்லீரல் நொதிகளை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுவும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கல்லீரலை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. இப்படிப்பட்ட க்ரீன் டீயை தொடர்ந்து குடித்து வரும் போது, அது கொழுப்பு கல்லீரலை நிர்வகிக்க உதவுகிறது." என்று டாக்டர் கூறினார்.
2. காபி
காபி கல்லீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் தொடர்புடையதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக "காபி கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஃபைப்ரோஸிஸ் அபாயத்தைக் குறைக்க உதவும். அதுவும் காபியில் வெள்ளை சர்க்கரை ஏதும் சேர்க்காமல் இயற்கை சுவையூட்டிகளான தேன், எரித்ரிட்டால் சேர்க்கப்படாத ஸ்டீவியா போன்றவற்றை சேர்த்து குடிக்கலாம்" என்று டாக்டர் சேத்தி கூறினார்.
3. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸில் நைட்ரேட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அதுவும் பீட்ரூட் கல்லீரலில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த பீட்ரூட்டின் ஜூஸை குடிக்கும் போது, அது நச்சு நீக்கும் செயல்முறையை ஊக்குவித்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த பெரிதுவும் உதவி புரியும்.
முக்கியமாக "பீட்ரூட் ஜூஸில் கல்லீரல் செல்களை பாதுகாத்து, கொழுப்பு சேர்வதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பீட்டாலைன்கள் உள்ளன. முக்கியமாக இதில் சர்க்கரை உள்ளதால், இந்த ஜூஸை மிதமான அளவில் குடிக்க வேண்டும்" என்று டாக்டர் சேத்தி கூறினார்.
எனவே நண்பர்களே! கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தாலும் சரி, வரக்கூடாதென்றாலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். அதோடு தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகள் போன்றவற்றை மேற்கொண்டு, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
