Latest Updates
-
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம்
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். இன்றும் அவர் இந்தியாவின் சிறந்த வழிகாட்டிகளில் ஒருவராக கருதப்படுகிறார். மதம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் சாணக்கியர் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். இன்றும் மக்கள் அவருடைய கருத்துக்கள் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிகரமானதாக உள்ளது.

ஆச்சார்ய சாணக்கியரின் அறிவுரைகள் ஒருவர் வெற்றிகரமான வாழ்க்கையை வழிநடத்துகின்றன. ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான பல முக்கிய விஷயங்களைச் சாணக்கியர் தனது 'நீதி சாஸ்திரத்தில்' பகிர்ந்துள்ளார். நன்மை தீமைகளுக்கு இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள சாணக்கியர் பல வழிகளை கூறியுள்ளார்.
சாணக்கியரின் கருத்துப்படி, ஒரு தனிமனிதருக்குத் தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதேவேளையில், குறிப்பிட்ட ஐந்து வகையான நபர்களை அவர்களின் தூக்கத்திலிருந்து ஒருபோதும் எழுப்பக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். அவர்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது மிகப்பெரிய பாவமாகக் கருதப்படுகிறது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள்
குழந்தைகள் தூக்கத்திலிருந்து எளிதில் எழுந்து விடுவார்கள். குழந்தைகள் முழுமையடையாத தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர்களின் மனநிலை பாதிக்கப்படும். இதனால் அவர்கள் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருக்க நேரிடலாம். தூக்கம் முழுமையடையாத போது குழந்தைகளிடம் ஏற்படும் அதீத சுறுசுறுப்பு அல்லது அமைதியின்மையைக் கையாள்வது என்பது மிகவும் கடிமாகும், எனவே அவர்களைத் தூக்கத்திலிருந்து ஒருபோதும் பாதியிலேயே எழுப்பக்கூடாது. ஆரோக்கியரீதியாகவும் இது நல்லதல்ல.
ஆபத்தான மிருகங்கள்
தூங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான விலங்கை எழுப்பவோ அல்லது தொந்தரவு செய்யவோ எப்போதும் முயற்சிக்கக்கூடாது. ஆக்ரோஷமான விலங்கு கோபத்தில் ஒருவரைத் தாக்கக்கூடும், இதனால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். உண்மையில், அறிமுகமில்லாத ஒரு நாயை உறக்கத்திலிருந்து எழுப்புவது கூட உங்களைச் சிக்கலில் ஆழ்த்தக்கூடும் என்பதால், அவற்றின் தூக்கத்தைக் கலைக்காதீர்கள்; இல்லையெனில் அவை உங்களைத் தாக்கலாம்.
முட்டாள்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தூங்கும் ஒரு முட்டாளை எழுப்புவது என்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆபத்தை விலைக்கு வாங்கும் செயலாகும். ஒரு முட்டாளுக்குச் சூழ்நிலையை விளக்குவது என்பது, காது கேளாதவரிடம் வயலின் வாசிப்பதற்குச் சமம் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பினாலும், உங்களைத் தவறாகவே புரிந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படலாம்.
அரசர்
சாணக்கியரின் கூற்றுப்படி, பண்டைய காலத்தில் அரசரைத் தூக்கத்திலிருந்து எழுப்புவது ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. இந்தக் காலத்திலும் கூட, ஒரு உயர் அதிகாரியோ அல்லது ஆட்சியாளரோ, தூக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். எனவே, அதிகாரம் உள்ளவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பக்கூடாது என்று சாணக்கியர் தனது 'நீதி' நூலில் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
