Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த காய்கறி-லாம் இந்தியாவை சேர்ந்தது இல்லையாம்...
இந்திய உணவுகளை நினைக்கும் போது முதலில் நினைவிற்கு வருவது மசாலா பொருட்கள், மூலிகைகள் மற்றும் நற்பதமான காய்கறிகள் நிறைந்த உணவுகள் தான். ஆனால் நாம் தினமும் சாப்பிடும் பல காய்கறிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல என்பது தெரியுமா?
ஆம், இந்திய உணவுகளில் அவசியம் சேர்க்கப்படும் பல காய்கறிகள் உண்மையில் மற்ற நாடுகளை பூர்வீகமாக கொண்டவை. மேலும் அந்த காய்கறிகள் இந்தியாவிற்கு வருவதற்கு பின் ஒரு கதையும் உள்ளது.

கீழே இந்தியர்களின் தினசரி உணவில் சேர்க்கப்படும் எந்த காய்கறிகள் இந்தியாவை சேர்ந்தது அல்ல மற்றும் எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த காய்கறிகளை பார்த்தால், நிச்சயம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
1. உருளைக்கிழங்கு
இந்தியாவில் உருளைக்கிழங்கைக் கொண்டு ஏராளமான உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமான காய்கறி உருளைக்கிழங்கு என்றே கூறலாம். ஆனால் இந்த உருளைக்கிழங்கு இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. உண்மையில் இது தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. தக்காளி
இந்திய சமையலில் முக்கிய பொருளாக கருதப்படும் தக்காளியும், இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல. இந்த தக்காளி முதலில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் தான் பயிரிடப்பட்டது. இந்த தக்காளியை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்கள் போர்ச்சுகீசியர்கள் தான்.
3. பச்சை மிளகாய்
காரத்திற்காக இந்திய சமையலில் முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு காய்கறி தான் பச்சை மிளகாய். இந்த பச்சை மிளகாயை நிறைய பேர் இந்தியாவை சேர்ந்ததாக நினைக்கலாம். ஆனால் இதுவும் போர்ச்சுகீசியர்களால் தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
4. வெண்டைக்காய்
வழுவழுப்பான வெண்டைக்காய் இந்திய சமையலில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த வெண்டைக்காய் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல. உண்மையில் இது ஆப்பிரிக்காவை சேர்ந்தது மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தனித்துவமான அமைப்பு மற்றும் சுவையினால், இந்தியாவில் இது பிரபலமானது.
5. காலிஃப்ளவர்
காலிஃப்ளவர் இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காலிஃப்ளவர் மத்திய தரைக்கடல் பகுதியை பூர்வீகமாக கொண்டது. இது காலனித்துவ காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தனித்துவமான சுவையினால், இந்திய சமையலில் இது முக்கிய இடத்தை பிடித்தது.
6. கேரட்
இந்தியாவில் செய்யப்படும் சாம்பாரில் சேர்க்கப்படும் கேரட், இந்தியாவைச் சேர்ந்தது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உண்மையில் இந்த கேரட் மத்திய ஆசியாவில் பயிரிடப்பட்டது மற்றும் வர்த்தகத்தின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் சுவை, நிறம் மற்றும் சத்துக்கள் போன்றவற்றால், தற்போது இந்தியாவில் பிரபலமான காய்கறியாக உள்ளது.
7. முட்டைக்கோஸ்
இந்தியாவை சேர்ந்தது என்று நினைக்கும் முட்டைக்கோஸ் கூட, வர்த்தகத்தின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது தான். உண்மையில் இந்த முட்டைக்கோஸ் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தோன்றியது. காலனித்துவ காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதன் பின் இது இந்திய சமையலில் முக்கிய பொருளாக இது மாறிவிட்டது.
8. சோளம்
இந்திய சமையலில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு பொருள் தான் சோளம். இது 16 ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
9. குடைமிளகாய்
குடைமிளகாய் பல இந்திய உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சுவையான காய்கறியாகும். வைட்டமின் சி அதிகம் கொண்ட இந்த அற்புதமான காய்கறி இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல. இது இரண்டாம் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
10. ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்றே தோற்றத்தைக் கொண்ட, ஆனால் வித்தியாசமான சுவையைக் கொண்டுள்ள பச்சை நிற காய்கறிக தான் ப்ராக்கோலி. சமீப காலமாக தான் இந்த ப்ராக்கோலி மக்களால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ப்ராக்கோலியும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல.



Click it and Unblock the Notifications
