Today Rasi Palan 26 March 2023: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வண்டி ஓட்டும்போது ரொம்ப கவனமா இருக்கணுமாம்!

தினமும் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை போல தினசரி ஜாதகத்தைப் படிக்கும் பழக்கம் பெரும்பலான மக்களுக்கு உள்ளது. அவர்கள் இன்றைய ராசிபலனை தெரிந்துகொண்டுதான் இன்றைய நாளைத் தொடங்குவார்கள். இன்றைய நாள் முழுவதும் நன்றாக இருக்கவும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கவும்தான் எல்லா மக்களும் விரும்புவார்கள்.

Today Rasi Palan - 26 March 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

அந்த வகையில், இன்றைய உங்கள் தினசரி ஜாதகத்தைப் படித்து, வரவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். காதல், வாழ்க்கை, வேலை, கல்வி மற்றும் பலவற்றைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இக்கட்டுரையில் பெறலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம், எண் மற்றும் நாள் பற்றி தெரிந்துகொள்வது உங்கள் சவால்களை கையாளவும், உங்கள் வாழ்க்கையை பொறுப்பேற்கவும் உதவும். உங்களுக்கான மார்ச் 26ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்கிறது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்: மார்ச் 21 - ஏப்ரல் 19

மேஷம்: மார்ச் 21 - ஏப்ரல் 19

மேஷ ராசிக்காரங்களுக்கு இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று வேலை செய்யும்போது, உங்களுக்கு வித்தியாசமான மகிழ்ச்சி கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் வரக்கூடும். மேலும், மனைவியுடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் ஒரு சிறிய விஷயம் உங்களுக்கு இடையே பெரிய சண்டைக்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 முதல் மாலை 6:00 மணி வரை

ரிஷபம்: 20 ஏப்ரல் - 20 மே

ரிஷபம்: 20 ஏப்ரல் - 20 மே

ரிஷப ராசி நேயர்களே! இன்று உங்கள் வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மிகவும் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலையை மேம்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். விரைவில் அதன் சரியான பலனைப் பெற வாய்ப்பு உள்ளது. வேலையில் எந்த வித அலட்சியமும் செய்ய வேண்டாம். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மிதுனம்: 21 மே - 20 ஜூன்

மிதுனம்: 21 மே - 20 ஜூன்

மிதுன ராசி நேயர்களே! மனதளவில் இன்று நீங்கள் நன்றாக உணரமாட்டீர்கள். மனதில் நிறைய குழப்பங்கள் இருக்கும். ஆதலால், இன்று எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். மறுபுறம், பணிபுரியும் வல்லுநர்கள் சோம்பலை விட்டுவிட்டு தங்கள் முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். பணத்தின் அடிப்படையில், இன்று வரவும் இருக்கும் செலவும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 முதல் மாலை 3:40 வரை

கடகம்: 21 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 21 ஜூன் - 22 ஜூலை

கடக ராசி நேயர்களான வியாபாரிகளுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். பெரிய வாடிக்கையாளர்களுடன் இணையும் வாய்ப்பைப் பெறுவீர்கள். விரைவில் உங்கள் வியாபாரத்தில் சில சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். வேலைக்கு செல்லும் இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் கோபமாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், அது உங்கள் வேலையையும் பெயரையும் கெடுக்க வாய்ப்புள்ளது. கடக ராசிக்காரர்கள் இன்று அதிக செலவுகள் செய்ய வேண்டிவரும். ஆதலால், உங்கள் செலவுகளின் பட்டியலை நீங்கள் குறைக்க வேண்டும். உங்கள் மனைவியின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். உங்கள் காதலியை அன்புடனும் மரியாதையுடனும் நடத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 முதல் மாலை 6:15 மணி வரை

சிம்மம்: 23 ஜூலை - 22 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை - 22 ஆகஸ்ட்

இன்று சிம்ம ராசி நேயர்களுக்கு பரம்பரையாக இருக்கும் சொத்து தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இன்று உங்கள் பெரிய கவலைகள் நீங்கும். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தால், உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்படுகிறது. விரைவில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு வேலையைச் செய்து, கடினமாக உழைத்தாலும், நீங்கள் முன்னேறவில்லை என்றால், பொறுமையாக இருங்கள். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். இன்றைய நாள் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 முதல் இரவு 9:20 வரை

கன்னி: 23 ஆகஸ்ட் - 22 செப்டம்பர்

கன்னி: 23 ஆகஸ்ட் - 22 செப்டம்பர்

கன்னி ராசி நேயர்களே! இன்றைய நாளை பொறுத்தவரை நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்ய விரும்ப மாட்டீர்கள், மேலும் உங்களின் முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் போகலாம். இதுபோன்ற அலட்சியத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து, உங்கள் தொழிலை மேம்படுத்த வங்கியில் கடன் வாங்க நினைத்தால், பெரிய கடனைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இன்று மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாக இருக்கும் மற்றும் உங்கள் காதலியின் நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யலாம். பணத்தைப் பொறுத்தவரை, நாள் சராசரியாக இருக்கும். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை இன்று உங்களுக்கு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை

துலாம்: 23 செப்டம்பர் - 22 அக்டோபர்

துலாம்: 23 செப்டம்பர் - 22 அக்டோபர்

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான எந்தவொரு பெரிய பிரச்சனையும் இன்று தீர்க்கப்படும். இன்று நீங்கள் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். சிறுதொழில் செய்பவராக இருந்தால் அரசின் திட்டங்களில் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்ய வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் நேரத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்று உங்களுக்கு வேலை சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:50 மணி வரை

விருச்சிகம்: 23 அக்டோபர் - 21 நவம்பர்

விருச்சிகம்: 23 அக்டோபர் - 21 நவம்பர்

விருச்சிக ராசி நேயர்களே! இன்று நீங்கள் வாகனத்தைப் பயன்படுத்தும் போது முழு கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். வேலையைப் பற்றி இன்று மிகவும் கவலைப்படலாம். குறிப்பாக வியாபாரிகளுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்காது. வியாபாரத்தில் நிலவும் மந்தநிலை உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். பணத்தின் அடிப்படையில் நாள் சராசரியாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். கஷ்டமான சூழ்நிலைகளில், உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 முதல் இரவு 9:05 வரை

தனுசு: 22 நவம்பர் - 21 டிசம்பர்

தனுசு: 22 நவம்பர் - 21 டிசம்பர்

தனுசு ராசி நேயர்களே! இன்று நீங்கள் ஒரு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும். பணத்தின் அடிப்படையில், இன்று செலவு அதிகமாக இருக்கும். ஆனால் எந்த பிரச்சனையும் இருக்காது. நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் தடைப்பட்ட பணத்தையும் பெறலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற ஆணவம் உங்களுக்கு நல்லதல்ல. இன்று, கூட்டாண்மையில் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் குடும்பத்தில் வயதானவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 முதல் மாலை 3:00 மணி வரை

மகரம்: 22 டிசம்பர் - 19 ஜனவரி

மகரம்: 22 டிசம்பர் - 19 ஜனவரி

மகர ராசி நேயர்களே! உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். இன்று நீங்கள் உங்கள் மனைவியுடன் மிகவும் ரொமான்டிக் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் அன்பானவர்கள் உங்களுக்காக விலையுயர்ந்த பரிசை வாங்கலாம். வேலை செய்பவர்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். மறுபுறம், வணிகர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் தடைபட்ட திட்டத்தை மீண்டும் தொடங்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் நாள் நன்றாக இருக்கும். பொருளாதார நிலையில் வரவு பலமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 1:30 வரை

கும்பம்: 20 ஜனவரி - 18 பிப்ரவரி

கும்பம்: 20 ஜனவரி - 18 பிப்ரவரி

கும்ப ராசி நேயர்கள், மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுப்பீர்கள். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். கடினமான காரியத்தை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் அழகான திருப்பம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 முதல் மதியம் 12:55 வரை

மீனம்: 19 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 19 பிப்ரவரி - 20 மார்ச்

மீன ராசி நேயர்களே! இன்று நாளின் ஆரம்பம் நன்றாக இருக்கும், ஆனால் பிற்பகலில் திடீர் உடல்நலக் குறைவால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால், இன்று நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாளாதீர்கள், இல்லையெனில், நீங்கள் பல சிறிய தவறுகளைச் செய்யலாம். வணிகர்கள் இன்று எந்த முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பண விஷயத்தில் இன்று நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது. மேலும், உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 முதல் மாலை 3:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, March 26, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion