Latest Updates
-
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்!
Today Rasi Palan 25 December 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 25ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.15-7.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்தைச் செலவிடுவீர்கள். அலுவலகத்தில், சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கவும். தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும். வியாபாரிகள் இன்று லாபம் ஈட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 9:45 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்துவதில் இன்று வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். இல்லையெனில் உங்கள் கடன் சுமை அதிகரிக்கலாம். வீட்டு பிரச்சனைகளை மிகவும் புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும். இன்று வேலையில் கலவையான முடிவுகள் தரும். நீங்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் உடற்சோர்வு அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:35 மணி முதல் காலை 11:05 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் விரும்பிய வேலையைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். இன்று பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் பழைய கடனை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்கள் வீட்டுச் சூழல் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடனான பிரச்சனை உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால் தீர்க்க முடியும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இன்று பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் தவறான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உணவுப் பழக்கத்தைக் கட்டுப்பாடு தேவை. இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:55 மணி முதல் இரவு 8:45 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் முக்கியமான கோப்புகளை பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனால் உங்கள் முதலாளியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். இன்று நீங்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் காலை 9:50 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று படிப்பில் ஆர்வம் குறையலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் வணிகத் திட்டங்களில் செய்த புதிய மாற்றங்களால் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் உடன்பிறப்புடன் சிறப்பாக நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வீட்டின் சூழலை மேம்படுத்த, முதலில் உங்கள் நடத்தையில் மாற்றம் தேவை. பண விஷயத்தில் இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் தவறான நடத்தை உங்கள் திருமண வாழ்க்கையில் முரண்பாடுகளை அதிகரிக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3:15 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். எதிர்காலத்தில் நிதிக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும். அவர்களின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். சிறு வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:20 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில பருவகால நோய்களால் சிரமப்பட நேரிடலாம். இதனால் உங்கள் அன்றாட திட்டங்கள் தடைபடலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். உங்கள் மேலதிகாரி உங்களுக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலைகளை ஒப்படைத்திருந்தால், அது தொடர்பாக அதிகம் விவாதிப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். சட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். இன்று உங்கள் அன்புக்குரியவர்களை அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 12 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் இன்று சில பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பெரும் மரியாதையைப் பெறலாம். இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறியும் தென்படும். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கும் உங்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வேலை அடிப்படையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வெளியூர் சென்று வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு திடீரென்று பெரிய லாபம் கிடைக்கும். நீங்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். இன்று கடவுளின் அருளால் தடைப்பட்ட பண வரவை மீட்க முடியும். பழைய நோய்களில் இருந்து விடுபட, நீங்கள் உங்கள் வழக்கத்தில் சீரான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிபவர்களின் நடத்தை கண்ணியமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்கவும். போக்குவரத்தில் பணிபுரிபவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து வேலைகள் சுமூகமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11:20 மணி வரை



Click it and Unblock the Notifications











