Today Rasi Palan 24 December 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பயணங்கள் சாத்தியமாகும்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 24 December 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. ஹஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். பண விஷயத்தில் இன்று நல்ல அறிகுறி தென்படும். முதலீடு போன்றவற்றை செய்ய விரும்பினால் அனுபவமிக்க நபரிடம் ஆலோசனை பெற வேண்டும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிச்சுமை அதிகரிக்கலாம். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவதில் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7:30 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று பேசும் போது, ​​நீங்கள் உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வியாபாரிகள் இன்று கடின உழைப்பிற்கு ஏற்ற சரியான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பணம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள். உங்கள் வாழ்க்கைத் துணையின் முரட்டுத்தனமான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 8:20 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்களின் சிரமங்கள் அதிகரிக்கலாம். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், சரியான திசையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் பழைய தொடர்புகளால் நீங்கள் பயனடையலாம். வணிகர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட உங்களின் சில வேலைகள் இன்று முடியும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, வியாபாரிகள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால் இன்று அனுபவம் வாய்ந்த ஒருவரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடும். நிதி பிரச்சனைகளால் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். பாதகமான சூழ்நிலைகளிலும் உங்கள் துணையின் அன்பும் ஆதரவும் உங்கள் தைரியத்தை அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் காரசாரமான உணவைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் செயல்திறனை மேம்படுத்த முயற்சித்தால், உங்களால் முடிந்ததைச் செய்யவும். இன்று தொழிலதிபர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. உங்களின் சில வேலைகள் திடீரென்று தடைபடலாம். முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். நிதி நிலையில் திடீர் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பலவீனமான உடல்நலம் காரணமாக உங்கள் தினசரி திட்டங்கள் தடைபடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 8:55 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்கவும். தொழிலதிபர்கள் ஏதாவது பெரிய காரியத்தைச் செய்யத் திட்டமிட்டால், உங்கள் நிதி நிலைமையை முதலில் கண்காணிக்கவும். நீங்கள் எதைச் செய்தாலும், விடாமுயற்சியுடன் செய்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று கடினமான நாளாக இருக்கும். நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்துவதில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வியாபாரிகள் பெரிய ஆதாயங்களைப் பெறலாம். வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், மாற்றத்திற்கான நேரமிது. இன்று உங்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். வருமானம் உயரும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனக்குறைவு உங்களுக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணும். உடல் நலத்துடன் ஒருபோதும் விளையாடாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று தொழிலதிபர்கள் வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய நேரிடும். இன்று நீங்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அவசரத்தில் சிறு தவறும் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், இன்று நீங்கள் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஏதாவது வேலை ஒதுக்கியிருந்தால், அதற்கு முன்னுரிமை கொடுங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் இன்று வாக்குவாதம் ஏற்படலாம். கூட்டாண்மையை முடிக்க முடிவு செய்யலாம். இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வது நல்லது. பிறர் பேச்சைக் கேட்டு எந்த நிதி முடிவையும் எடுக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 10 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். அலுவலக வேலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் கடின உழைப்பால் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்களின் நிதி நிலை வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன் வைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வணிகர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். நன்கு யோசித்து முடிவெடுக்காவிட்டால், நீங்கள் சில சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சில கடினமான வேலைகள் ஒதுக்கப்படலாம். இருப்பினும், உங்கள் வேலையை முழு நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் முடிப்பீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திடீர் செலவுகளால் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 9 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, வியாபாரிகள் சில புதிய யுக்திகளை கையாள வேண்டியிருக்கும். சிறு தவறு செய்தாலும் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். பொறுப்புகளின் சுமை அதிகரிக்கும். இன்று உயர் அதிகாரிகளின் அழுத்தம் உயரலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 3 மணி முதல் மாலை 7 மணி வரை

Story first published: Sunday, December 24, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion