Today Rasi Palan 04 January 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜனவரி 04ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 04 January 2024 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.30-11.30 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று மிகவும் முக்கியமான நாள். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் சில பழைய நினைவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தை ஏற்படுத்துவதை தவிர்க்கவும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:25 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்க முடியும். உங்கள் துணையின் அன்பான நடத்தை உங்களைச் சிறப்புற உணர வைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். இன்று, உயர் அதிகாரிகளுடன் உங்கள் வேலை தொடர்பான முக்கிய விவாதங்களும் நடைபெறலாம். சிறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை வளர்க்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், பண விஷயங்களில் எந்த தவறான முடியும் எடுக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. இன்று பண விஷயத்தில் கலவையான பலன்கள் உண்டாகும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. ஆனால் அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் பிரச்சனைகளும் அதிகரிக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், சோம்பலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலையை இன்றே முடிக்க முயற்சிக்கவும். நீங்கள் நீண்ட காலமாக ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டால், கவனக்குறைவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:25 மணி முதல் காலை 10:05 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் செய்த முதலீட்டீன் சரியான முடிவுகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் விரைவில் முன்னேறலாம். பண விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. சர்ச்சைக்குரிய விஷயத்தை பற்றி விவாதிப்பதைத் தவிர்த்தால் நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 7:15 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, வியாபாரிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பலன்களைப் பெறுவார்கள். இன்று உங்களின் தடைப்பட்ட சில வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி நன்மைகளைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். திருமணமானவர்களுக்கு இன்று காதல் நிறைந்த நாளாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவதற்கு நிறைய பணம் செலவழிக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சிந்திக்காமல் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். பணம் தொடர்பான ஏதேனும் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், அது இன்று தீர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம். இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடலாம். சிறு கவனக்குறைவும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். வியாபாரிகள் இன்று நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களை செய்ய இன்று ஏற்ற நாள் அல்ல. ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று ஏற்ற தாழ்வுகளால் நிறைந்திருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான மனகசப்பை பேசி தீர்க்க முயற்சிக்கவும். தேவையற்ற ஈகோ உங்கள் உறவை மேலும் பலவீனமாக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று எந்த ஒரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் நிலுவையில் உள்ள லாபத்தைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். திடீர் பண வரவைப் பெறலாம். தேவையற்ற விஷயங்களுக்கு பணத்தைச் செலவிடுவதை தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். ஓய்வில் அதிக கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள். அலுவலகத்தில் பொறாமை கொண்ட சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. இன்று அவர்கள் உங்களைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி உங்கள் நன்மதிப்பைக் கெடுக்க முயற்சிக்கலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்க விரும்பினால், புதிய உத்திகளை உருவாக்கவும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, ஆரோக்கியமாக இருக்க, முதலில் அதிகரித்து வரும் உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிர்ஷ்டத்தை மட்டுடே நம்பாமல், வெற்றியை அடைய கடினமாக உழைக்கவும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சிந்திக்காமல் தாராளமாகச் செலவு செய்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் காலை 10:20 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பெரிய நிம்மதியைத் தரும். உங்களின் பெரிய கவலைகள் நீங்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவருக்கு ஒரு ஆச்சரிய பரிசை வாங்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யவும். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால், இன்று அனுபவம் வாய்ந்த ஒருவரின் வழிகாட்டுதலைப் பெறலாம். இன்று உங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்கள் தொழிலில் வளர்ச்சி சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இன்று உங்கள் துணை மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மற்றவர்களை மகிழ்விக்க உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். திடீரென்று அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சில முக்கியமான வேலைகளை ஒதுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெற குறுக்குவழியில் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். அவர்களின் உதவியுடன், உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். அலுவலகத்தில் அதிகமாக கேலி செய்வதைத் தவிர்க்கவும். இன்று உங்கள் மேலதிகாரி உங்களுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:50 மணி முதல் காலை 11 மணி வரை

Story first published: Thursday, January 4, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion