Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை
Tamil Nadu Election Results 2026: தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் தேர்தல் முடிவை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவானது மே 04 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த வகையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன. இனி அடுத்த 5 ஆண்டுகள் எந்த கட்சி தமிழ்நாட்டை ஆளவுள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வமாய் உள்ளனர்.

இதுவரை தமிழ்நாட்டை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் ஆட்சி செய்து வந்தன. ஆனால் இந்த ஆண்டு திமுக, அதிமுகு, தவெக என மூன்று முனை போட்டியாக உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் முன்னணி நடிகரான விஜய் அவர் தவெக என்னும் கட்சியை தொடங்கி, எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தன்னிச்சையாக போட்டியிடுகிறார்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சினிமாவில் இருந்த உச்ச நடிகர்கள் பலர் அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அதில் பல நடிகர்கள் வெற்றிகரமாக அரசியலிலும் பயணித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் தொடங்கிய கட்சிகள் என்ன மற்றும் அந்த கட்சிகள் முதல் தேர்தலில் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்பது குறித்து இப்போது காண்போம்.
எம்ஜிஆர்
சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து முதன்முதலாக கட்சியைத் தொடங்கிய நடிகர் என்றால், அது எம்ஜிஆர் அவர்கள் தான். இவர் 1977 ஆம் ஆண்டு அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அப்போது நடத்த தேர்தலில் இவர் மாபெரும் வெற்றியை தழுவினார். அதுவும் அப்போது நடைபெற்ற தேர்தலில் இவரது கட்சியானது 51,94,876 வாக்குகளைப் பெற்றது. மேலும் அப்போது இருந்த 200 தொகுதிகளில் இக்கட்சி சுமார் 130 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்கு பின் நடிகை ஜெயலலிதா அவர்கள் இக்கட்சியை வெற்றிகரமாக நடத்தி, இன்னும் வலிமையான கட்சியாக்கினார். அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் அதிமுக கட்சி ஒரு வலிமையான கட்சியாக உள்ளது.
என்.டி.ஆர்
ஆந்திராவில் மிகவும் பிரபலமான நடிகர் தான் என்.டி.ஆர். இவர் 1985 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். அப்போது நடந்த தேர்தலில் இவரது கட்சி 1,06,25,508 வாக்குகள் பெற்று, சுமார் 250 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் தேர்தலிலேயே 46 சதவீம் வாக்குகளைப் பெற்று யாரும் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை என்.டி.ஆர் அவர்களின் கட்சி சாதனை புரிந்தது.
விஜயகாந்த்
கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2006 ஆம் ஆண்டு தேமுதிக என்னும் கட்சியை தொடங்கினார். மேலும் அப்போது நடந்த தேர்தலில் 27,64,223 வாக்குகள் பெற்றாலும், 232 தொகுதிகளில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முதல் தேர்தல் இவருக்கு பெரிய வெற்றியாக இல்லை. அதன் பின் நடந்த தேர்தலில் இந்த கட்சி எதிர்கட்சியாகும் அளவில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அப்போது ஆளும் கட்சியாக இருந்தது அதிமுக ஆகும்.
சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சிரஞ்சீவியும் கட்சியைத் தொடங்கினார். அதுவும் இவர் 2009 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்னும் கட்சியைத் தொடங்கி, முதல் தேர்தலில் 68,63,509 வாக்குகள் பெற்று, 288 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின் இவர் அரசியலை விட்டு வெளியேறிவிட்டார்.
பவன் கல்யாண்
தெலுங்கில் பிரபலமான மற்றொரு நடிகர் தான் பவன் கல்யாண். இவர் 2019 ஆம் ஆண்டு ஜனசேனா என்னும் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி முதல் தேர்தலில் 17,36,811 வாக்குகள் பெற்றாலும், 137 தொகுதிகளில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்லில் இக்கட்சியானது மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி, பவன் கல்யாண் அவர்கள் துணை முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கமல்ஹாசன்
திரையுலகில் பல ஆண்டுகளாக இருந்த உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அரசியலில் நுழைந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியானது 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 12,10,002 வாக்குகள் பெற்றது. இருப்பினும் 180 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியால் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு எதிராக நின்றார். ஆனால் தோல்வியைத் தழுவினார்.
விஜய்
தற்போது நடிகர் விஜய் தவெக என்னும் கட்சியை தொடங்கியதோடு, 2026 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்லில் சுயேட்சையாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அதுமட்மின்றி, இவர் திருச்சி, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் நின்று போட்டியிடுகிறார். இவ்விரு தொகுதிகளும் திமுக-வின் வலிமையான தொகுதிகளாகும். இதுவரை தமிழ்நாட்டில் தேர்தலில் நின்ற நடிகர்களின் கட்சிகளின் தரவுகளைப் பார்க்கும் போது, விஜய்க்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்தாலும், இந்த தேர்தலில் அவர் வெற்றியைப் பெறுவாரா என்பது இன்று தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



