Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 17 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 18 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 21 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- Finance
இந்த ஒரு செயலி இருந்தால் போதும்.. விமான நிலையத்தில் செக்-இன் ரொம்ப ஈஸி!
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்... இதனாலேயே தோல்வி இவங்கள துரத்துமாம்!
இழப்பு, அவநம்பிக்கை, நஷ்டம், கைவிடுதல் மற்றும் புண்படுத்தும் பல விஷயங்களால் நம்பிக்கையற்ற உணர்வு எழுகிறது. நம்மீது நமக்கு நம்பிக்கை இல்லாதபோது, வாழ்க்கையில் நம்மை மெதுவாக்கும் மற்றும் தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும் பாதுகாப்பின்மை உணர்வுகளை நம் மனதில் வளர்க்கத் தொடங்குகிறோம்.
இது பொதுவானது மற்றும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக நடக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது அதிகமாகவே நடக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் குறைந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கடகம்
நீங்கள் மிகவும் உணர்திறன் உடையவராக இருப்பதால் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள முனைகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால் நீங்கள் மிகவும் அரிதாகவே நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களை நன்றாக உணர நீங்கள் மற்றவர்களை நம்பியிருக்கிறீர்கள், இதுவே மிகவும் அக்கறையுடன் இருப்பது மட்டுமின்றி, நீங்கள் மிகவும் பாதுகாப்பற்றவராகவும், தன்னம்பிக்கை இலலதவராகவும் இருக்கிறீர்கள் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாகும்.

கன்னி
நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு பரிபூரணவாதி. உங்களுடைய இந்த குணம் போற்றத்தக்கது ஆனால் இது உங்கள் தன்னம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்கிறது. நீங்கள் உங்களை மிகவும் விமர்சிக்கிறீர்கள், உங்களிடம் இருக்கும் நேர்மறையான குணங்களை பார்க்கத் தவறிவிடுவீர்கள். இந்த மிக முக்கியமான அம்சம் உங்கள் மீது உங்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, உங்கள் சொந்த திறன்களைப் பற்றிய உங்களின் தன்னம்பிக்கையை இழக்க வைக்கும்.

துலாம்
எந்தச் சூழ்நிலையிலும் பிரச்சனையை ஏற்படுத்துவதைத் தவிர்க்கிறீர்கள், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் என்றும் உங்களுக்காக ஒருபோதும் நீங்கள் நிற்கவில்லை என்றால், அப்படியே ஆகட்டும். நீங்கள் இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ளவர் மற்றும் ஒரு பெரிய கூட்டத்தில் உங்கள் கருத்துக்களைக் கூற விரும்ப மாட்டீர்கள். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் நீங்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளீர்கள். இதனால் நீங்கள் தன்னம்பிக்கை இல்லாதவராக மற்றவர்களால் அறியப்படுவீர்கள்.

மீனம்
மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியே நீங்கள் சிந்திப்பீர்கள், ஆனால் உங்கள் தேவைகள் மற்றும் ஆசைகளுக்கு இடமளிக்கத் தவறுகிறீர்கள். நீங்கள் விரைவாக 'இல்லை' என்று சொல்ல முடியாது மற்றும் உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு முன் வைக்க முடியாது. நீங்கள் உண்மையிலேயே மிகவும் அக்கறையுள்ளவர், ஆனால் இது உங்களைப் பற்றி உங்களைப் பாதுகாப்பற்றதாக உணர வைக்கிறது. மற்றவர்களை கவனித்துக்கொள்வதில் நீங்கள் சோர்வடைகிறீர்கள், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை கவனித்துக்கொள்வதுதான்.

மகரம்
உங்கள் தொழில் வாழ்க்கை என்று வரும்போது நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்க முடியும், ஆனால் உங்கள் உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்று போது, நீங்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்றதாக இருக்க முடியும். யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்க மறுக்கும் நீங்கள் உங்களால் கட்டப்பட்ட சுவரின் பின்னால் உங்கள் உணர்வுகளை மறைக்கிறீர்கள், நீங்கள் காயப்படுவீர்கள் என்ற பயத்தில். உங்கள் சமூகத் திறன்களைப் பற்றி நீங்கள் மிகவும் தன்னம்பிக்கை இல்லாதவராக இருக்கிறீர்கள்.