Just In
- 1 hr ago
வார ராசிபலன் (29 January to 04 February 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- 2 hrs ago
Today Rasi Palan 29 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்...
- 11 hrs ago
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- 13 hrs ago
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
Don't Miss
- News
நெருங்கிய காலக்கெடு.. தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு.. ஆதாரை இணைச்சிட்டீங்களா? ரொம்ப முக்கியம்
- Technology
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
உங்க ராசிப்படி 2023-ல் எந்த மாதம் ஆபத்தான மாதமாக இருக்கப்போகுது தெரியுமா? இந்த மாதத்துல பத்திரமா இருங்க!
வரப்போகிற புது வருடம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆனால் இந்த மாற்றங்கள் அனைவருக்கும் நேர்மறையானதாக இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். 2023 அனைத்து ராசிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வருடமாக இருக்கும். அதன்படி வருடத்தின் சில மாதங்கள் அதிர்ஷ்டமானதாகவும், சில மாதங்கள் துரதிர்ஷ்டமானதாகவும் இருக்கும்.
2023- ஆம் ஆண்டு ஜோதிட கணிப்புகளின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மிக அதிர்ஷ்டமான மாதமும், குறைந்தது ஒரு துரதிர்ஷ்டமான மாதமும் இருக்கும். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி 2023-ல் எந்த மாதம் உங்களுக்கு துரதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
2023-ல் மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் ஒரு சவாலான மாதமாக இருக்கும். குறிப்பாக மாதத்தின் தொடக்கத்தில் ஆபத்துகள் உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயரும். சுருக்கமாக, பதட்டங்கள் அதிகரிக்கும் மற்றும் மோதல்கள் உங்கள் வழியில் செல்லலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் எல்லாம் தவறாக நடக்கும், குறிப்பாக உங்கள் தொழில் வாழ்க்கையில் பல சறுக்கல்கள் ஏற்படலாம். மன அழுத்தம் அதிகரிக்கும், நல்ல முடிவுகளை எடுக்க நீங்கள் போராடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதமே மிகவும் மோசமான மாதமாக இருக்கும். எதுவும் சரியாக நடக்காது, நட்சத்திரங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால் நீங்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

கடகம்
மே மாதத்தில் நீங்கள் சிங்கிளாக இருந்தாலும் அல்லது உறவில் இருந்தாலும், காதல் விஷயத்தில் பல தவறான புரிதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெளிப்படையான உறவு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலையில் தங்கள் பொறுமையை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் உங்கள் நாக்கை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம். நீங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் மற்றும் அதிகமாக உணரலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துகள் நிறைந்திருக்கும். உங்கள் திட்டங்கள் தோல்வியடையும், மேலும் முன்னேற்றம் இல்லாததால் நீங்கள் விரக்தியடைவீர்கள்.

துலாம்
ஆகஸ்ட் மாதத்தில் யுரேனஸ் மற்றும் புளூட்டோவின் தொடர்ச்சியான இருப்பு மற்றும் செல்வாக்கு உங்கள் மீது உறுதியற்றத் தன்மையை ஏற்படுத்தும். இந்த காலக்கட்டத்தில் எதுவும் நீங்கள் நினைத்தபடி நடக்காது, மேலும் நீங்கள் நிதி சிக்கலில் சிக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோசமாக இருக்கும். இது சூரிய ஒளி மற்றும் ஓய்வின் மாதம் என்றாலும், இந்த மாதம் ஆபத்தை தவிர வேறெதுவும் உங்களுக்கு கிடைக்காது. முக்கிய விஷயமாக, உங்கள் உறவிலும் பதற்றம் தோன்றும்.

தனுசு
அக்டோபர் மாதத்தில் உங்கள் காதல் வாழ்க்கையிலோ அல்லது வேலையிலோ ஒரு சிக்கலான முடிவை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். பிரச்சனை என்னவென்றால், என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாது. பல்வேறு சிந்தனைகள் உங்களை குழப்பும்.

மகரம்
ஜூலை மாதத்தில் உங்கள் செலவினங்கள் கட்டுப்பாட்டை மீறலாம், மேலும் விடுமுறை நாட்களின் அதிகப்படியான உங்கள் கிரெடிட் கார்டுகளை நீங்கள் அதிகம் பயன்படுத்தலாம். நீங்களே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

கும்பம்
நீங்கள் சிறிது காலமாக உறவில் இருந்தாலோ அல்லது டேட்டிங் செய்யத் தொடங்கியிருந்தாலோ, ஜூலை மாதம் ஒரு சிக்கலான பருவமாக இருக்கும். உங்கள் காதல் சிறிது நேரம் இடைநிறுத்தப்படுவதைக் கூட பார்க்க முடியும்.

மீனம்
அக்டோபரில் எல்லாம் தவறாக நடக்கும், மேலும் நீங்கள் அனைத்து ஸ்லிப்-அப்களின் எண்ணிக்கையையும் இழக்க நேரிடும். நீங்கள் நேர்மறையாக இருக்க போராடுவீர்கள், மேலும் நீங்கள் தொலைந்து போவதாக கூட உணரலாம்.