Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
2023-ல் இந்த 4 ராசிக்காரங்க அதிக எச்சரிக்கையுடன் இருக்கணுமாம்.. உங்க ராசி இதுல இருக்கா-ன்னு பாருங்க..
2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2023 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பலருக்கும் வரக்கூடிய 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். ஜோதிடத்தில் 2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என ஏற்கனவே கணித்து கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், யாரெல்லாம் 2023 ஆம் ஆண்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கேள்வி மனதில் எழுந்திருக்கும்.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சனி பகவான் ராசியை மாற்றுகிறார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் ராசியை மாற்றவுள்ளார். இது தவிர, ராகு, கேது பெயர்ச்சிகளும் நிகழவிருக்கின்றன. இப்படி வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளதால், பலருக்கு 2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு இந்த ஆண்டு பிரச்சனைகள் நிறைந்ததாக மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆண்டாக உள்ளது. இப்போது 2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
2023 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் ராகு-கேதுவின் தாக்கம் அதிகம் இருப்பதால், மோசமானதாக இருக்கக்கூடும். இந்த ஆண்டில் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிக்க சிரமப்படுவார்கள் மற்றும் படிப்பில் இருந்து திசைதிருப்பப்படுவார்கள். இந்த ஆண்டு நீங்கள் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது பல கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கிவிடும். உங்கள் வேலைகளில் வெற்றி பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருகும். ஆரோக்கியம் ஓரளவாகவே இருக்கும். இந்த ஆண்டில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடாதீர்கள்.

சிம்மம்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பெயர்ச்சி நடைபெறுவதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டகச் சனி தொடங்குகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக சற்று மோசமாகவே இருக்கும். திருமண வாழ்க்கையிலும் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டில் தேவையற்ற செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர்கள். ஏனெனில் இந்த ஆண்டில் உங்களை நம்ப வைத்து நிறைய பேர் மோசம் செய்ய முயற்சிப்பார்கள். எந்த ஒரு முக்கியமான முடிவுகையும் எடுப்பதாக இருந்தால் பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த புதிய ஆண்டில் நிறைய எதிரிகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பொருளாதார ரீதியாகவும் சிக்கல்களை சந்திக்கலாம். இந்த ஆண்டில் உங்களின் செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனவே செலவுகளை பார்த்து செய்யுங்கள். சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்
2023 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்கள் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். இதனால் பணப் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குழந்தைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். தேவையற்ற செலவுகள் உங்களை கலங்க வைக்கும். 2023 ஆம் ஆண்டு நிறைய தடைகளை சந்திப்பதோடு, வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications