For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020-ன் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் இவைதான்... இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

|

21 ஆம் நூற்றாண்டில் பெண்களின் பிம்பமானது நம்பிக்கை நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும், தைரியமானதாகவும், அழகானதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை அவர்கள் உண்மையில் உணர்கிறீர்களா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏனெனில் பெண்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் சுதந்திரமும், பாதுகாப்பும் வெறும் எழுத்தளவில்தான் உள்ளது.

நமது பூமியில் கிட்டதட்ட 330 கோடி பெண்கள் உள்ளனர், ஆனால் அவர்களில் எவ்வளவு பேர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று கேட்டால் அதில் பாதி அளவு கூட இருப்பதில்லை. இதில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில் பத்து பெண்களில் ஏழு பெண்கள் ஏதாவது ஒரு வகையில் வன்முறைக்கு ஆளாகின்றனர். உலகில் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த பாலியல் வன்முறைகள் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. இந்த பதிவில் பெண்கள் மீது அதிக வன்முறைகள் நிகழ்த்தப்படும் டாப் 10 நாடுகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்கா

அமெரிக்கா

முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்காதான். இங்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கற்பழிப்பு வழக்கிற்கு நீதி தாமதப்படுத்தப்படுவது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு #MeToo பிரச்சாரம் வைரலாகிய பின்னர், ஆயிரக்கணக்கான பெண்கள் சமூக ஊடக இயக்கத்தைப் பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் பற்றிய தங்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தாலும் கற்பழிப்பு குற்றங்களில் உலகிலேயே அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது.

நைஜீரியா

நைஜீரியா

போகோ ஹராம் போராளிகளுக்கு எதிரான ஒன்பது ஆண்டுகால போராட்டத்தின் போது நாட்டின் இராணுவம் சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் பொதுமக்களைக் கொன்றது என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பெண்கள் வாழ்வதற்கு ஒன்பதாவது மோசமான நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது. நைஜீரியா மனித கடத்தலுக்கு வரும்போது உலகின் மிகவும் ஆபத்தான நாடு என்றும் பெயரிடப்பட்டது மற்றும் இங்கிருக்கும் பாரம்பரிய நடைமுறைகளிலும் பல செயல்கள் பெண்களுக்கு எதிரானவையாக உள்ளது.

ஏமன்

ஏமன்

மோசமான சுகாதாரம், பொருளாதார வளமின்மை, கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து வரும் ஆபத்து மற்றும் பாலியல் அல்லாத வன்முறை காரணமாக பெண்களுக்கான மோசமான நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது ஏமன். ஏமனில் நடந்து வரும் ஆயுத மோதல் காரணமாக, ஏமன் உலகளவில் ஒரு மனிதாபிமானமற்ற நெருக்கடிக்கு ஆளாகி வருகிறது, இதில் 22 மில்லியன் மக்களுக்கு முக்கிய உதவி தேவைப்படுகிது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மனிதாபிமானமற்ற வன்முறை, உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஈரானின் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின்னர் யேமன் மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இங்கே உண்மையிலேயே முக்கியமான மற்றொரு விஷயம் என்னவெனில் உலகின் பசி நிறைந்த இடங்களிலும் ஏமன் ஒன்றாகும்.

MOST READ: முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் என்ன உள்ளது? முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?

காங்கோ

காங்கோ

பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் சட்டவிரோத குற்றங்களுக்குப் பிறகு, பாலியல் வன்முறையைப் பொறுத்தவரை பெண்களுக்கு ஏழாவது மோசமான நாடாக இந்த நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு டி.ஆர்.சி.யில், 3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற ஒரு போர் மீண்டும் பற்றவைக்கப்பட்டுள்ளது, இதில் பெண்கள் முன் வரிசையில் உள்ளனர். போரிடும் கட்சிகளால் அல்லது ஆயுதமேந்திய போராளிகளால் நேரடி தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு பலரும் பலியாகினர். காங்கோவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 1,100 பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். 1996 முதல் கிட்டதட்ட 2,00,000 கற்பழிப்பு வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்படாதது எத்தனையோ. இங்கு வாழும் கர்ப்பிணி பெண்களில் 57 சதவீத்தினருக்கு இரத்த சோகை உள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளில் ஆறாவது நாடு பாகிஸ்தான் ஆகும். சில பழங்குடிப் பகுதிகளில், ஆண்களின் குற்றங்களுக்கான தண்டனையாக பெண்கள் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இங்கு கௌரவக் கொலைகள் மிகவும் பரவலாக உள்ளது, மேலும் புதுப்பிக்கப்பட்ட மத தீவிரவாதம் பெண் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறிவைக்கிறது. பெண்கள் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள், உள்நாட்டு வன்முறைக்கு எதிரான சட்டம் இன்னும் நாட்டில் இல்லை. கடந்த ஆண்டு நாடு பெண்கள் மற்றும் சிறுமிகளில் சுமார் 1000 பேர் கௌரவ கொலைக்கு ஆளாகினர். மேலும் பெண்கள் இங்கிருந்து மேற்கு நாடுகளுக்கு கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. மேலும், பாலியல் அல்லாத வன்முறையில் முதலிடத்தில் உள்ளது, பாகிஸ்தானில் வாழும் 90 சதவீத பெண்கள் தங்கள் வீட்டில் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

 சவூதி அரேபியா

சவூதி அரேபியா

சவூதி இராஜ்ஜியம் பொருளாதார அணுகல் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் வாழ தகுதியற்ற ஐந்தாவது ஆபத்தான இடமாக உள்ளது, இதில் பணியிடமும், சொத்து உரிமைகளும் அடங்கும். யுனிவர்சல் வுமன் அமைப்பு இதைப்பற்றி கூறும்போது " பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதைத் தடுக்கும் மோசமான சட்டங்களில் ஒன்று பாதுகாவலர். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணும் ஆண் பாதுகாவலருக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவளால் பாஸ்போர்ட் பெற முடியாது, பயணம் செய்ய முடியாது, சில நேரங்களில் அவளால் வேலை செய்ய முடியாது ". மேலும் வீட்டு வன்முறை பட்டியலிலும் சவூதி அரேபியா இடம் பிடித்துள்ளது.

MOST READ: தென்னிந்தியாவை மொத்தம் எத்தனை வம்சத்தினர் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் தெரியுமா?

சோமாலியா

சோமாலியா

சோமாலியாவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் யுத்தம் அந்த நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக மாற்றியுள்ளது. போர் வன்முறை கலாச்சாரத்திற்கு வழிவகுத்தது. சோமாலியாவில், 95% பெண்கள் பெரும்பாலும் 4 முதல் 11 வயதிற்குட்பட்ட பிறப்புறுப்பு சிதைவை எதிர்கொள்கின்றனர். கூடுதலாக, 9% பெண்கள் மட்டுமே சுகாதார நிலையத்தில் பிரசவிக்கின்றனர். மோசமான சுகாதாரம் மற்றும் தீங்கு விளைவிக்கும் கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஆபத்து விளைவிப்பதில் சோமாலியா நான்காவது நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளங்களை அணுகுவதில் பெண்களுக்கு மோசமான நாடுகளில் ஒன்றாகும்.

சிரியா

சிரியா

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் அங்கிருக்கும் குடிமக்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாகியுள்ளது. BBC அறிக்கையின் படி அங்கிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவிகளுக்காக பாலியல்ரீதியாக சுரண்டப்படுகிறார்கள். பெண்களின் மோசமான ஆரோக்கியம் மற்றும் அவர்களின் மீது நடத்தப்படும் பாலியல் மற்றும் பாலியல் அல்லாத வன்முறைகள் காரணமாக சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மகளிர் பாதுகாப்பு நிர்வாக இயக்குனர் மரியா அல் அப்தே கூறும்போது, " சிரியாவில் பெண்கள் அரசுப் படைகளால் கற்பழிப்புக்கு ஆளாகின்றனர். வீட்டு வன்முறை மற்றும் குழந்தை திருமணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பிரசவத்தின் போது அதிகளவில் பெண்கள் இறக்கிறார்கள். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இதற்கு முடிவு எப்பொழுது என்று யாருக்கும் தெரியவில்லை ".

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

பெண்கள் வாழ ஆபத்தான நாடுகளில் இரண்டாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை, 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது, பிரசவத்தின் போது பல பெண்கள் இறப்பது என இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏராளம். ஒரே ஆப்கானிஸ்தான் பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 45 தான். இது ஒரு ஆப்கான் ஆணை விட ஒரு வருடம் குறைவானதாகும். முப்பதாண்டு கால யுத்தம் மற்றும் அடக்குமுறைக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் ஏராளமான பெண்கள் கல்வியறிவற்றவர்களாகவே உள்ளனர். இங்கிருக்கும் நடைமுறைகள் படி பெண்ணை கற்பழித்தவனை அவர்கள் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தலாம். பெரும்பாலான திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் வயது 16 ஆகும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பெண் பிரசவத்தின் போது இறக்கிறார். ஆப்கானிஸ்தானில் 85 சதவீத பெண்கள் வரை பெரும்பான்மையானவர்கள் மருத்துவ சிகிச்சை இல்லாமல் பிரசவிக்கின்றனர். உலகில் அதிக தாய்மை இறப்பு விகிதத்தைக் கொண்ட நாடு இது.

MOST READ: இந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா?

இந்தியா

இந்தியா

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், பாலியல் வன்முறை, பெண் கொத்தடிமை மற்றும் நீதி நிராகரிக்கப்படுவது போன்ற காரணங்களுக்காக பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் நாடான இந்தியா நம் பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இல்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார், ஒவ்வொரு 77 நிமிடங்களுக்கும் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது. மேலும் கணவர் அல்லது அவர்களது உறவினர்களால் ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும் ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். பெண் சிசுக்கொலை மற்றும் கருவிலேயே பெண்குழந்தைகளை கொல்வது போன்ற செயல்களால் கடந்த நூற்றாண்டில் மட்டும் 50 மில்லியன் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது, இங்கு 44.5 சதவீத பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மூன்று காரணங்களுக்காக பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அவை பாலியல் வன்முறை, கலாச்சாரம் என்ற பெயரில் அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் பெண்கள் கடத்தல் ஆகும். 70% பெண்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், கற்பழிப்பு, திருமண கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல், கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் கட்டாய உழைப்பு, பாலியல் அடிமைத்தனம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Worst Countries For Women In The World 2020

Here is the list of worst countries for women in the world 2020.