For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mirabai Chanu: 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வாங்கித் தந்த மீராபாய் சானு!

இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை சைக்கோம் மீராபாய் சானு 2020 ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

|

2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த வருடம் ஒலிம்பிக்கில் இந்தியா எத்தனை பதக்கங்களை வெல்லும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை சைக்கோம் மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு பெண்கள் 49 கிலோ பிரிவில் 2020 டோக்கியோ விளையாட்டு போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சானு பெற்றுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
49 கிலோ பளுதூக்கும் பிரிவு

49 கிலோ பளுதூக்கும் பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 49 கிலோ பளுதூக்கும் பிரிவில் சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இந்தோனேசியாவின் விண்டி கான்டிகை ஐசா வெண்கல பதக்கம் வென்றார். மீராபாய் சானு 202 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஸ்னாட்ச் பிரிவு

ஸ்னாட்ச் பிரிவு

டோக்கியோ சர்வதேச மன்றத்தில், மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் தனது முதல் முயற்சியில் 84 கிலோ லிப்ட் மூலம் தொடங்கினார். பின்னர் 87 கிலோ எடையைத் தூக்கி முன்னேறியதால், அது அவரை போட்டியில் சாதகமான நிலையில் வைத்தது. ஆனால் ஹூ ஜிஹுய் தனது முதல் முயற்சியில் 88 கிலோ லிப்ட் மூலம் தனது முன்னேற்றத்தை காட்டியதும், மீராபாயின் வேகம் குறைக்கப்பட்டது. ஹூ ஜிஹுய் தனது மூன்றாவது லிப்டில் 94 கிலோ எடையைத் தூக்கி ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.

முதல் ஒலிம்பிக் பயணம்

முதல் ஒலிம்பிக் பயணம்

5 வருடங்களுக்கு முன், மீராபாய் தனது முதல் ஒலிம்பிக் போட்டியை எதிர்கொள்ளும் போது, நிச்சயம் பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ அந்த ஒலிம்பிக் பயணத்தில் மோசமான அனுபவத்தை சந்தித்தார். அதன் பின்னரும் அவர் மனம் உடைந்து போகாமல், மீண்டும் தனது முயற்சியை கைவிடாமல், துணிச்சலுடன் பங்கேற்று 2021 ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 119 கிலோ க்ளீன் அன்ட் ஜர்க்கில் உலக சாதனையை மீராபாய் படைத்தார்.

வெள்ளி பதக்கத்தை தட்டிய மீராபாய் சானு

வெள்ளி பதக்கத்தை தட்டிய மீராபாய் சானு

முக்கியமாக இவர் 2017 இல் டோக்கியோவில் நடந்த ஒற்றை இந்திய பளுதூக்கும் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்றுள்ளார் மற்றும் 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை வென்று மீண்டும் உருவெடுத்தார். தனது மோசமான தோல்வியால் துவண்டுபோகாமல், க்ளீன் அன்ட் ஜர்க்கில் உலக சாதனையை படைத்த பின், டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பெண்கள் பிரிவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் முடிவாக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்வண்ணம் வெள்ளி பதக்கத்தையும் வென்று வரலாறு படைத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who is Mirabai Chanu? Know The Success Story of India's Weightlifting Silver Medalist at Tokyo Olympics In Tamil

Who is Mirabai Chanu? Know the success story of India's weightlifting silver medalist at tokyo olympics in tamil. Take a look...
Desktop Bottom Promotion