Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாடகை வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் யாரைப் பாதிக்கும்? வீட்டு ஓனரையா அல்லது குடியிருப்பவரையா?
வாடகை வீட்டில் வசிக்கும் போது அந்த வீட்டின் வாஸ்து அங்கு வசிப்பவர்களை பாதிக்குமா அல்லது அந்த வீட்டைக் கட்டியவரை பாதிக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது.
இன்று பலரின் இல்லத்திலும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை வாஸ்து பிரச்சினை ஆகும். வாஸ்து சாஸ்திரம் என்பது சங்க காலம் முதலே நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சாஸ்திரமாகும். வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ வாஸ்துவின் படி வீட்டைக் கட்டுவதுதான் சிறந்த வழியென்று நம் மக்கள் நம்புகிறார்கள்.

சொந்த வீடு கட்டுவது என்பது பலருக்கும் கனவாகும். ஆனால் இன்று பலரும் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர். இப்போது சந்தேகம் என்னவென்றால் வாடகை வீட்டில் வசிக்கும் போது அந்த வீட்டின் வாஸ்து அங்கு வசிப்பவர்களை பாதிக்குமா அல்லது அந்த வீட்டைக் கட்டியவரை பாதிக்குமா என்பதுதான். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான வாஸ்து குறிப்புகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வாஸ்து குறிப்பு 1
வீடு வாடகைக்கு எடுக்கும் போது வீட்டின் பிரதான நுழைவாயிலின் திசை மிக முக்கியமான அம்சமாகும். வாடகை வீட்டிற்கு சிறந்த திசை வடகிழக்கு ஆகும், இதனைத் தொடர்ந்து வடமேற்கு, கிழக்கு மற்றும் மேற்கு போன்ற திசைகளிலும் வீடு வாடகைக்கு எடுக்கலாம்.

வாஸ்து குறிப்பு 2
வாடகை வீடு பார்க்கும் போது அதன் வாசலானது தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் உள்ள வீடுகளைத் தவிர்க்கவும்.

வாஸ்து குறிப்பு 3
வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் முக்கியமான இடம் சமையலறை ஆகும். எனவே சமையலறை ஒருபோதும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இருக்கக்கூடாது. இது உங்கள் வீட்டில் கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தும்.

வாஸ்து குறிப்பு 4
உங்கள் வீட்டின் கழிப்பறை, சமையலறை, ஷூ வைக்கும் அலமாரி போன்றவை ஒருபோதும் வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது. இது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும்.

வாஸ்து குறிப்பு 5
வீட்டின் வாஸ்துவில் அதன் வடிவமும் முக்கியமானதாகும். வீட்டின் வடிவம் எப்பொழுதும் சதுரம் அல்லது செவ்வமாகத்தான் இருக்க வேண்டும். வேறு எந்த வடிவத்திலேயோ அல்லது வேறு எந்த நீட்டிப்போ இருக்கக்கூடாது.

வாஸ்து குறிப்பு 6
நீங்கள் வசிக்கும் அல்லது கட்டப்போகும் வீடு மாடி வீடாக இருந்தால் வீட்டின் மாடிப்படிகள் வடகிழக்கு திசையில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

யாரைப் பாதிக்கும்?
வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் வீட்டின் ஓனரைப் பாதிக்குமா அல்லது அந்த வீட்டில் குடியிருப்பவர்களை பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதனைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் பொதுவாக வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்னவெனில் வீட்டில் வசிப்பவர்களைத்தான் வாஸ்து தோஷம் பெருமளவில் பாதிக்குமாம். அதேசமயம் வீட்டின் சொந்தக்காரரும் குறிப்பிட்ட அளவு பாதிப்பிற்குள்ளாவார். ஆனால் பெரும்பாலும் வீட்டில் வசிப்பவர்களே வாஸ்துவால் பாதிக்கப்படுவதாகவும், வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டில் வசிக்கத் தொடங்காத வரை அந்த வீட்டின் வாஸ்து தோஷம் அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications