Just In
- 8 hrs ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- 9 hrs ago
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
- 10 hrs ago
சத்தான... வாழைத்தண்டு சூப்
- 11 hrs ago
சர்வதேச பெண்கள் தினத்தை எல்லா பெண்களும் எப்படி கொண்டாடலாம் தெரியுமா?
Don't Miss
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க காதலியோட ராசிய சொல்லுங்க... அவங்க எப்படிப்பட்ட மனைவியா இருப்பாங்கன்னு நாங்க சொல்றோம்...!
பெண்கள் எப்போதுமே ஆச்சரியங்கள் மற்றும் மர்மங்களின் உறைவிடமாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் பெண்கள் இருவேறு பரிமாணத்தில் வாழ்கின்றனர். நீங்கள் காதலிக்கும் போது இருக்கும் அமைதியான, இனிமையான காதலி திருமணத்திற்கு பிறகும் அப்படியே இருப்பார் என்று நினைப்பது முட்டாள்த்தனம்.
காதலிக்கும்போது இருந்த விதத்திற்கு முற்றிலும் எதிர்மறையாகவே பெண்கள் திருமணத்திற்கு பிறகு இருப்பார்கள். ஒருவரின் ஆளுமைப் பண்புகளைப் பற்றி அவர்களின் பிறந்த ராசி நிறைய வெளிப்படுத்துகின்றன. அவை எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கவிட்டாலும், நிச்சயமாக சில சுவாரஸ்யமான பண்புகளை வெளிப்படுத்த முடியும். குறிப்பாக நீங்கள் எந்த வகையான மனைவியாக இருப்பீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.

மேஷம்
வலுவான விருப்பம் கொண்டவர்கள், சாகசத்தை விரும்புபவர்கள் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள் ஆகியவை அவர்களுக்கு மிகவும் பொருத்தமான சொற்கள். அவர்கள் மிகவும் ப்ராக்டிகலானவர்கள் மற்றும் போலி விஷயங்களை ஏற்க முடியாதவர்கள் அதேசமயம் கற்பனைகளை நம்புபவர்கள் என வினோதமான கலவையாக இருப்பவர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் இயற்கையாகவே மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் மற்றும் நம்பகமானவர்கள். எந்த நான்கு சுவர்களையும் ஒரு அழகான மற்றும் வசதியான வீடாக மாற்றக்கூடிய பெண்கள் அவர்கள். அவர்கள் சில சமயங்களில் பிடிவாதமாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் முயற்சிகளையெல்லாம் பயனுள்ளதாக மாற்றுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசி பெண்கள் தடுத்து நிறுத்த முடியாதவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட துணையாவார். ஆனால் அவர்கள் எளிதில் சலித்து, ஆர்வத்தை இழக்க முனைகிறார்கள், எனவே, தொடர்ந்து புத்துணர்ச்சியும் புதிய தன்மையும் தேவை. எனவே நீங்களும் உங்கள் கணவரும் ஒத்த கருத்துக்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒத்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தால், திருமண வாழ்க்கை ஒரு வேடிக்கையான பயணமாக இருக்கும்.
காதலில் முத்தமிடுவது ஏன் அவசியம் தெரியுமா? இனிமே முத்தம் கொடுக்காம காதலிக்காதீங்க...!

கடகம்
கடக ராசி பெண்கள் மனைவியாக கிடைக்கப்பெற்றவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கடக ராசி மனைவிகள் பக்தியுள்ளவர்கள், தங்கள் கணவர்களை நிபந்தனையின்றி நேசிக்கிறார்கள் மற்றும் கூட்டாளியின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இவை அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு சிறந்த அன்பான கூட்டாளரை நீங்கள் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது.

சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் பாதுகாப்பான துணையாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் ஒரு ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த ராசி பெண்கள் பாராட்டுக்களைப் பொழிவதை விரும்புகிறார்கள் என்பதையும், ஒவ்வொரு வகையிலும் தங்களை சரியானவர்களாகக் கருதுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி மனைவிகள் பர்பெக்ட்டானவர்கள் மற்றும் கணவர்களிடமிருந்து அதே எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். நகைச்சுவை உணர்வு மற்றும் அன்பான இயல்புடன், ப்ராக்டிகல் மற்றும் உணர்ச்சிகளின் சரியான சமநிலையையும் அவை பராமரிப்பார்கள்.

துலாம்
துலாம் ராசி பெண்கள் பழைய காலத்தினர் போல காதலிப்பார்கள். எனவே அவர்கள் தங்கள் துணையிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். பொதுவாக அவர்கள் முட்டாள்தனமான மற்றும் வேடிக்கையான அன்பானவர்கள், அவர்கள் திருமணத்தை ஏராளமான வசீகரம் மற்றும் காதல் மூலம் நிரப்புகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் தங்கள் துணை உணர்ச்சிபூர்வமாக காதலிக்கும் வரை அமைதியாக இருக்க மாட்டார்கள்.
நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் எலும்புகளை பலவீனமாக்கி ஈஸியா உடைய வைக்குமாம்...!

விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்களை மனைவியாக கொண்ட ஆண்களுக்கு கூறப்படும் ஒரே அறிவுரை வலுவான விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் இருங்கள். இந்த ராசி பெண்கள் உயர்ந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். மேலும், வாழ்க்கை அவர்களுடன் உற்சாகத்தால் நிறைந்துள்ளது.

தனுசு
சுதந்திரம் மற்றும் உற்சாகம் என்பது தனுசு ராசி பெண்களுக்கான சொல்லாகும். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை நேசிக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு அனைத்தையும் சுவாரஸ்யமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் மிகவும் ஆதரவாகவும், நட்பாகவும், தாராளமான மனைவியாகவும் உள்ளனர்.

மகரம்
மகர ராசி மனைவிகள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடியவர்கள், சுயாதீனமான மற்றும் உந்துதல் கொண்டவர்கள். கடினமான காலங்களில் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது அவர்களுக்குத் தெரியும், மேலும் படுக்கையறையில் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள், ஆனால் சோம்பேறித்தனம் அவர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.

கும்பம்
இவர்கள் மனைவி என்பதையும் தாண்டி உங்களுக்கு சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இந்த பெண்கள் புத்திசாலி, இனிமையானவர்கள், சுயாதீனமானவர்கள், சாகசத்தை விரும்புகிறார்கள், ஆனால் சில சமயங்களில் எளிதில் மனக்கிளர்ச்சி அடைவார்கள். அவர்களின் கணவர் நிச்சயம் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.
உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட கணவராக இருக்கப்போறீங்க தெரியுமா? இந்த 3 ராசி ஆண்கள்தான் பெஸ்ட்...!

மீனம்
இவர்கள் உண்மையிலேயே இதயத்தில் சிறந்த காதல் மற்றும் ஒரு சிறந்த கற்பனைத்திறன் கொண்டவர்கள். ‘மூளையுடன் கூடிய அழகு' என்பது அவர்களை மிகச் சிறந்ததாக விவரிக்கிறது, எனவே ஒருவர் அவர்களை விட்டு வெளியேறக்கூடாது. இருப்பினும், மனநிலை மாற்றங்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கின்றன, ஆனால் அவர்களின் விசுவாசம் அனைவரையும் வெல்லும்.