Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
வார ராசிபலன் (05 February to 11 February 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
2023 பிப்ரவரி 05 முதல் 2023 பிப்ரவரி 11 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 பிப்ரவரி 05 முதல் 2023 பிப்ரவரி 11 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பான பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்படி மேற்கொள்ளும் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் நிறைய செலவுகளை சந்திப்பீர்கள். குறிப்பாக வாரத்தின் நடுப்பகுதியில் திடீரென்று பெரிய செலவுகள் ஏற்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி நிலையானது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வரவேண்டிய பணம் வராததால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பழைய நீதிமன்ற வழக்கும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த வாரத்தில் பண இழப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்ட விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே சற்று கவனமாக இருங்கள். இந்த வாரம் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது. நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியமும், நேரமும் தான் வீணாகும். புதிய தொழில் தொடங்க இந்த வாரம் நல்லதல்ல. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, அவ்வளவு சிறப்பாக இருக்காது. இந்த வாரம் உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திடீரென்று ஆரோக்கிய பிரச்சனைகள் எழும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். உங்கள் பெரிய கவலைகள் நீங்கும். வியாபாரிகள் நிறைய லாபம் ஈட்ட வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரம் செலவுகள் அதிகம் இருக்கும். பட்ஜெட் போட்டு செலவழிப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை தரும் வாரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை மேம்படும். பழைய கடனை அடைப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம். உங்களுக்கு தலைவலி பிரச்சனை இருந்தால், இந்த வாரத்தில் அது அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: புதன்

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு நன்றாக இருக்காது. வேலை தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். நிதி நிலை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வாரத்தின் மத்தியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். இந்நிலையில் உங்களின் பல திட்டங்கள் தடைபடலாம். இந்த வாரத்தில் உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் விரிசல் ஏற்படலாம். இந்த வாரத்தில் உங்கள் மன அமைதி குலைந்து போக வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை பேணி வந்தால், பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் வார இறுதியில் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். சொந்தமாக தொழில் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இந்த வாரத்தில் நெருக்கமானவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பணத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு இன்னும் சிறப்பாக இருக்கும். அரசு வேலை செய்பவர்கள், இந்த வாரம் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். ஆனால் வணிகர்களுக்கு இந்த வாரம் சற்று சவாலாக இருக்கும். இந்த வாரத்தில் நிறைய பணம் செலவழிக்கப்பட வாய்ப்புள்ளது. இதய பிரச்சனை இருந்தால், இந்த வாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: புதன்

மகரம்
மகர ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்து, பெரிய முதலீடு செய்ய நினைத்தால், இந்த வாரம் சற்று கவனமாக முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சவாலானதாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் உங்களை மிகவும் தொந்தரவு செய்யும். இதனால் இக்காலத்தில் எதிர்மறை எண்ணங்களும் மனதில் வரலாம். இந்த வாரத்தில் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மென்மை கூடும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருக்க, தினமும் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்கள் துணையுடன் சண்டைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், வீட்டின் அமைதி குலைந்துவிடும். பண விஷயத்தில் இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். உங்கள் வருமானம் கூடும். பணி தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்தக் காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மீனம்
மீன ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்து, சமீபத்தில் நஷ்டத்தை சந்தித்திருந்தால், இந்த வாரம் உங்கள் இழப்பை மீட்டெடுக்க முடியும். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் சகவாசம் கிடைக்கும். இந்த வாரம் உங்களின் கடினமான வேலைகள் எளிதில் முடிவடையும். நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: வியாழன்



Click it and Unblock the Notifications