Just In
- 4 hrs ago
பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 6 hrs ago
பெண்களே! உங்க முன்னாள் காதலன் மீண்டும் உங்கள காதலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 6 hrs ago
இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?
- 7 hrs ago
வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கணுமா? அப்ப குரு பூர்ணிமா அன்னிக்கு இத தானம் பண்ணுங்க..
Don't Miss
- News
இந்தியாவில் "அந்த" சுதந்திரம் வீழ்ச்சியடைந்துவிட்டது - சர்வதேச அமைப்பு கண்டனம்
- Finance
ஜகா வாங்கிய டிக்டாக்.. அமெரிக்கா, ஐரோப்பிய திட்டங்கள் கைவிட்டது..!
- Movies
பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் கனவுப்படத்தில் களமிறங்கும் இயக்குநர் ஷங்கர்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
- Sports
இரண்டு தவறுகளால் மொத்தமாக போச்சு..தோல்வி குறித்து டிராவிட் கருத்து..சீனியர்களுக்கு மறைமுக எச்சரிக்கை
- Automobiles
சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா
- Technology
108எம்பி மெயின் கேமரா: மாஸ் காட்டும் Infinix நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம்?
- Travel
ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வாஸ்துப்படி எந்த திசையை நோக்கி சாப்பிட வேண்டும்? தவறான திசையில் சாப்பிட்டால் என்ன ஆகும்?
ஒருவரது வாழ்க்கை சந்தோஷமாகவும், செழிப்போடும் இருக்க வேண்டுமானால், வாழும் வீடு மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் பொருட்கள் முதற்கொண்டு வாஸ்துப்படி இருக்க வேண்டும். இதுதவிர வாஸ்து சாஸ்திரப்படி ஒருவர் உணவு உண்ணும் திசையும் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு திசையும் ஆற்றல்களுடன் தொடர்புடையதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
தவறான திசையை நோக்கி ஒருவர் உணவு உண்டால், அது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று வாஸ்து கூறுகிறது. சரி, நீங்கள் எந்த திசையை நோக்கி எப்போதும் சாப்பிடுவீர்கள்? இப்போது ஒவ்வொரு திசையும் எந்த மாதிரியான ஆற்றலைக் கொண்டது மற்றும் எந்த திசையை நோக்கி ஒருவர் உணவை உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதைக் காண்போம்.

கிழக்கு
நீங்கள் கிழக்கு திசையை நோக்கி சாப்பிட்டால், டென்சன் மற்றும் மன அழுத்தம் குறையும். இந்த திசையை நோக்கி உணவை உண்ணும் போது மூளை உற்சாகமடைவதோடு, உண்ணும் உணவு நன்கு செரிமானமாகி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த திசையை நோக்கி சாப்பிடுவது வயதானவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மிகவும் நல்லது.

வடக்கு
பணம், அறிவு மற்றும் ஆன்மீக சக்தி வேண்டுமா? அப்படியானால் வடக்கு திசையை நோக்கி சாப்பிடுங்கள். உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண விரும்பினால், வடக்கு திசையில் அமர்ந்திருப்பது நன்மை பயக்கும். குறிப்பாக இந்த திசை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு மிகவும் நல்லது.

மேற்கு
மேற்கு திசையை நோக்கி சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மேற்கு திசையை நோக்கி சாப்பிட்டால், அது லாபத்திற்கு வழிவகுக்கும்.

தெற்கு
தெற்கு திசை எம திசையாக கருதப்படுவதால், தெற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உங்கள் பெற்றோர் உயிருடன் இருந்தால், இந்த தெற்கு திசையை நோக்கி சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

சாப்பாட்டு அறை எந்த திசையில் இருக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சாப்பாட்டு/டைனிங் அறை வீட்டின் மேற்கு திசையில் இருக்க வேண்டும். இது மங்களகரமானது மற்றும் லாபகரமானது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் உணவு மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களில் பற்றாக்குறை ஏற்படாது.

நினைவில் கொள்ள வேண்டியவை:
வீட்டில் டைனிங் டேபிள் வைப்பதாக இருந்தால், பிரதான கதவு அல்லது கழிவறைக்கு முன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். முக்கியமாக கைக்கழுவும் தொட்டியானது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் கைக்கழுவும் தொட்டியானது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மறந்தும் தென்கிழக்கு திசையில் வைத்துவிட வேண்டாம்.