Just In
- 6 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 7 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 9 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- 9 hrs ago
செட்டிநாடு தேங்காய் குழம்பு
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பணம் கையில சேரமாட்டீங்குதா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க...
நாம் ஒவ்வொருவருமே நமது நிதி நிலைமையைப் பற்றி அதிகம் கவலை கொள்வோம். அனைவருமே வாழ்வில் ஓரளவு நிதி பாதுகாப்பை விரும்புவோம். அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறோம். நாம் என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், சிலரது கையில் பணம் தங்காது. ஆனால் வாஸ்து கூறும் வழிகளைப் பின்பற்றினால், வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையுடன் வாழலாம். மேலும் ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைத்தால் அவர் அபரிமிதமான செல்வத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்.
ஆகவே லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கும், நல்ல நிதி நிலைமையில் வாழ்வதற்கும் ஒருசில தவறுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் அவர்களின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கும். ஆகவே வாஸ்து படி, பணத்தைக் கையாளும் போது ஒருவர் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைப் பற்றி இப்போது காண்போம்.

எச்சில் கொண்டு பணத்தை கணக்கிடக்கூடாது
பலர் பணத்தைக் கணக்கிடும் போது எச்சிலைப் பயன்படுத்துவார்கள். வாஸ்துப்படி, பணம் லட்சிமி தேவிக்கு சமமானது. பணத்தில் எச்சிலை வைப்பது லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். இத்தகைய பழக்கத்தைக் கொண்டவர்கள் லட்சுமி தேவியின் கோபத்தால் வறுமையில் வாட வேண்டியிருக்கும். மேலும் பணத்தில் எச்சிலை வைக்கும் போது பல கைகளுக்கு மாறும் பணத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உடலினுள் சென்று உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

பணத்தில் எதையும் எழுதாதீர்
பணத்தில் எதையும் எழுதாதீர்கள். இது அந்த பணத்தை அவமதிக்கும் செயல் மட்டுமன்றி, இந்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிரானதும் கூட. இதுவரை நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தில் எதையாவது எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், இனிமேல் அதை தவிர்த்திடுங்கள்.

பணத்திற்கு மதிப்பளித்து கவனமாக கையாளவும்
பணத்தை எப்போதும் மரியாதையுடனும், கவனமாகவும் கையாளுங்கள். எக்காரணம் கொண்டும் அதை தூக்கி எறியாதீர்கள். உணவுப் பொருட்களை பணத்தின் மேல் வைக்காதீர்கள். பணத்தை ஆங்காங்கு சிதறி இருக்க விடாதீர்கள். உங்கள் கையில் பணம் அதிகம் சேர வேண்டுமென்று நினைத்தால், பணத்தை எப்போதும் மரியாதையுடன் ஒரே இடத்தில் வைத்து பழகுங்கள்.

தேவையில்லாத காகிதங்களுடன் பணத்தை வைத்திருக்காதீர்
பணம் வைக்கும் உங்கள் பர்ஸில் பழைய பில்கள் மற்றும் தேவையில்லாத காகிதங்களை வைத்திருக்காதீர்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இம்மாதிரியானதை பர்ஸில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் வருமானம் பாதிக்கப்படும் மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

பணத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்
இரவு தூங்கும் போது, உங்கள் பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கை தலைக்கு மேல் வைக்காதீர்கள். எப்போதும் உங்கள் பணத்தை அலமாரி, செல்ப், லாக்கர் போன்றவற்றில் பாதுகாப்பாக வைத்திருங்கள். மேலும் பணத்தை எப்போதும் மடித்து வைக்காதீர்கள். இது பணத்தை அவமரியாதை செய்வது போன்றதாகும்.