Just In
- 29 min ago
இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…
- 10 hrs ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- 11 hrs ago
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
- 13 hrs ago
சத்தான... வாழைத்தண்டு சூப்
Don't Miss
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சமையலறை தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்
இந்தியர்களின் வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் என்பது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இங்கு புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் கிட்டதட்ட அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் காட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த வசிக்கும் வீட்டிலும் வாஸ்துவிற்கு ஏற்றாற்போல் மாற்றங்கள் செய்வது வழக்கமாக உள்ளது.
நாம் வசிக்கும் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் முக்கியமான இடமென்றால் அது சமையலறைதான். இங்கு ஏற்படும் சின்ன சின்ன தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் சமையலறையில் நடக்கும் என்னென்ன தவறுகள் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

பழைய பாத்திரங்கள்
உங்கள் சமையலறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் சமையலறையை பழைய பாத்திரங்களுக்கான குப்பைத் தொட்டியாக மாற்றினால் அது கடுமையான வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். இது உங்கள் வாழ்க்கையில் தேக்க நிலையை ஏற்படுத்தும்.

குழாய்களில் கசிவு
உங்கள் சமையலறை குழாய்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
சமையலறை குழாய்கள் கசிந்து, அவற்றை நீங்கள் சரிசெய்யவில்லை என்றால், அது வாஸ்து சாஸ்திரத்தின் படி பண இழப்பைக் குறிக்கிறது.

தரையில் விரிசல்
சமையலறை தரையில் விரிசல்கள் ஒருபோதும் விழக்கூடாது, அப்படியே விழுந்தாலும் அதனை உடனடியாக சரி செய்துவிட வேண்டும். வாஸ்துவின் படி தொடர்ந்து இந்த விரிசல்கள் சமையலறையில் இருந்தால் அது உங்கள் உறவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நம் முன்னோர்கள் 'அந்த' விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா?

சேதமடைந்த மின்னணு பொருட்கள்
சேதமடைந்த மின்னணு பொருட்களும் துரதிஷ்டத்தை ஈர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சேதமடைந்த மின்னணு பொருட்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை ஈர்க்கின்றன. வேலை செய்யாத ஹேண்ட் பிளெண்டர்கள், மிக்சர்கள், ஜாடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பூச்சிகளின் இருப்பு
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், பல்லிகள் போன்ற பூச்சிகள் நிறைய இருந்தால் அது பல்வேறு விதமான வாஸ்து பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது உங்கள் வாழ்க்கையில் இது வறுமை மற்றும் வீழ்ச்சியைக் குறிக்கிறது.

முறையற்ற விளக்குகள்
உங்கள் வீடு மட்டுமின்றி சமையலறையிலும் எப்ப்போதும் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியமாகும். சமையலறையில் போதிய வெளிச்சம் இல்லை என்றால், அது வீட்டில் மகிழ்ச்சியின்மையையும், மந்தத்தையும் ஏற்படுத்தும்.

உடைந்த கண்ணாடிகள்
சமையலறை ஜன்னல் உடைந்த கண்ணாடிகள் அல்லது வேறு ஏதேனும் கண்ணாடிகள் சமையலறையில் இருந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி இது விபத்துகள் ஏற்பட போவதற்கான அறிகுறியாகும்.
இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களுக்கு மோசமான கனவுகளை ஏற்படுத்துமாம்...

அழுகிய தாவரங்கள்
நீங்கள் சமையலறையிலும் அதனை சுற்றியும் சிறிய செடிகளை வளர்த்துக் கொண்டிருந்தால், அவை கவனிக்கப்படாமல் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவது அவசியமாகும். ஏனெனில் வாஸ்துவின் படி இது உங்கள் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும்.