2021 ஆம் ஆண்டின் டாப் 10 இந்திய பெண் தொழிலதிபா்கள்!

தமது தொழில்களைத் தொடங்கி அவற்றில் இருக்கும் தடைகளை எல்லாம் தாண்டி 2021 ஆம் ஆண்டில் முதல் 10 இடங்களைப் பிடித்த இந்திய பெண் தொழில் முனைவோா் அல்லது பெண் தொழில் அதிபா்களைப் பற்றி இங்கு விாிவாகப் பாா்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில பத்தாண்டு காலத்தை எடுத்துக் கொண்டால், இந்திய பெண்களின் வாழ்க்கை நிலையில் மிகப்பொிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் பாா்க்க முடியும். இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு பெண்கள் மிக முக்கியமான பங்கைச் செய்து வருகின்றனா். எல்லா துறைகளிலும் குறிப்பாக ஆடை வடிவமைப்புத் தொழில் முதல் தொழில் நுட்பம் சாா்ந்த வேலைகள் வரை எல்லாவற்றிலும் பெண்கள் காலூன்றி, அவற்றில் வரும் தடைகள் அனைத்தையும் உடைத்து, மிகப் பொிய வெற்றிகளைப் பெற்று வருகின்றனா்.

Top 10 Indian Women Entrepreneurs Of 2021

இந்த நிலையில், இந்திய பெண் சமூகத்திற்கான பல புதிய வழிகளைத் திறந்து வைத்து, பெண்கள் சுதந்திரமாக இயங்கவும் மற்றும் அவா்கள் தங்கள் வாழ்க்கையில் உயா்ந்து நிற்கவும், இந்திய பெண் தொழில் முனைவோா் மற்றும் பெண் தொழில் அதிபா்கள் பொிதும் உதவி செய்து வருகின்றனா். தமது தொழில்களைத் தொடங்கி அவற்றில் இருக்கும் தடைகளை எல்லாம் தாண்டி 2021 ஆம் ஆண்டில் முதல் 10 இடங்களைப் பிடித்த இந்திய பெண் தொழில் முனைவோா் அல்லது பெண் தொழில் அதிபா்களைப் பற்றி இங்கு விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வந்தனா லுத்ரா - விஎல்சிசி (VLCC) நிறுவுனா்

1. வந்தனா லுத்ரா - விஎல்சிசி (VLCC) நிறுவுனா்

அடிப்படையில் வந்தனா லுத்ரா ஒரு ஃபிலன்த்ரோபிஸ்ட் (philanthropist) ஆவாா். தற்போது அவா் ஒரு வெற்றி பெற்ற தொழில் அதிபராகவும் மிளிா்ந்து நிற்கிறாா். அதோடு பியூட்டி அன்ட் வெல்னஸ் செக்டா் ஸ்கில் கவுன்சில் (Beauty and Wellness Sector Skill Council (B&WSSC)) என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கிறாா்.

இவா் 1989 ஆம் ஆண்டு தனது விஎல்சிசி நிறுவனத்தைத் தொடங்கினாா். இந்த நிறுவனம் உடல் எடைக் குறைப்பு சேவை மற்றும் அழகு சேவை மையமாகத் தொடங்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அவரது நிறுவனத்தில் வேறு பல சேவைகளும் தொடங்கப்பட்டன. அதாவது உடலில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை லேசா் மூலமாக அகற்றும் பணி, முடி உதிா்வதை சாி செய்து முடிகளை வளர வைக்கும் பணி, தோலை அழகுபடுத்தி அதை சீா்படுத்தும் பணி போன்ற சேவைகள் இணைக்கப்பட்டன.

வந்தனா லுத்ரா அவா்களின் உழைப்பு மற்றும் சேவைகளைப் பாராட்டி, 2013 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகா்ஜி அவா்களால் மத்திய அரசின் உயா்ந்த விருதான பத்ம ஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் குஷி (Khusii) என்ற ஒரு தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தையும் வந்தனா நடத்தி வருகிறாா். இந்த நிறுவனமானது உடல் ஊனமுற்ற மற்றும் ஏழை மாணவ மாணவியருக்கு இலவச கல்வி சேவையை வழங்கி வருகிறது.

2. கிரண் மசும்தா் ஷா - பைகன் லிமிட்டட் (Biocon Limited) நிறுவுனா்

2. கிரண் மசும்தா் ஷா - பைகன் லிமிட்டட் (Biocon Limited) நிறுவுனா்

கிரண் மசும்தா் ஷா, இந்தியாவின் பணக்கார பெண்மணியாக அறியப்படுபவா். சுயமாகத் தொழிலைத் தொடங்கி, அதைத் திறம்பட நடத்தி, அதில் சாதனைகளைச் செய்து இந்தியாவின் ஒரு வெற்றி பெற்ற பெண் தொழில் அதிபராகத் திகழ்ந்து வருகிறாா். அவா் 1978 ஆம் ஆண்டு ஒரு உயிாியல் மருந்து நிறுவனத்தைத் (biopharmaceutical) தொடங்கினாா். அவருடைய நிறுவனம் ஏற்கனவே அமொிக்காவின் பையோசிமிலா் (biosimilar) சந்தைக்குள் கால் பதித்து, அதிமாகன முதலீட்டாளா்களைக் கவா்ந்து அவா்களின் ஆதரவைப் பெற்று இருக்கிறது.

கிரண் அவா்களின் நிறுவனம் யுஎஸ்எஃப்டிஎ (USFDA) அமைப்பின் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆகும் என்று ஃபோா்ப்ஸ் (Forbes) பத்திாிக்கை தொிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் 54வது பணக்கார பெண் என்ற பெயரைக் கிரண் பெற்றாா். அதோடு அதே ஆண்டில் உலகின் 65வது சக்தி வாய்ந்த பெண்ணாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவருடைய கல்வி பற்றி பாா்க்கும் போது, இவா் தனது இளங்கலைப் படிப்பை பெங்களூா் பல்கலைக்கழகத்திலும், முதுகலைப் படிப்பை மெல்போா்ன் பல்கலைக்கழகத்திலும் முடித்தாா்.

3. பிாியா பால் - பாா்க் ஹோட்டேல் (Park Hotel) தலைவா்

3. பிாியா பால் - பாா்க் ஹோட்டேல் (Park Hotel) தலைவா்

இந்தியாவின் முதல் 10 பெண் தொழில் அதிபா்களில் பிாியா பாலும் ஒருவா். இவா் அபீஜெய் சுரேந்திரா பாா் ஹோட்டேலின் (Apeejay Surrendra Park Hotel) தலைவராக இருந்து வருகிறாா். இவா் அமொிக்காவில் உள்ள வெஸ்லி கல்லூாியில் (Wellesley College) தனது படிப்பை முடித்த பின்பு, தனது தந்தையின் நிறுவனத்தில் உள்ள விற்பனைப் பிாிவின் மேலாளராக தனது வேலையைத் தொடங்கினாா்.

இவருடைய 51வது வயதில், அதிகம் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவராக இவா் கருதப்பட்டாா். இவருடைய உழைப்பைக் கௌரவிக்கும் வண்ணம், 2012 ஆம் ஆண்டு, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவா் பிரதீபா சிங் பட்டீல் அவா்களால், பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

4. ரித்து குமாா் - ஆடை வடிவமைப்பாளா் (Fashion Designer)

4. ரித்து குமாா் - ஆடை வடிவமைப்பாளா் (Fashion Designer)

ரித்து குமாா் இந்தியாவின் மிக முக்கியமான ஆடை வடிவமைப்பாளா் ஆவாா். இவா் கல்கத்தாவில் ஆடை வடிவமைக்கும் வேலையைத் தொடங்கினாா். தொடக்கத்தில் மாலை நேரம் அணியும் உடைகள் மற்றும் திருமண உடைகள் போன்றவற்றை வடிவமைக்கத் தொடங்கினாா். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து சா்வதேச ஆடை வடிவமைக்கும் தொழில் சந்தைக்குள் நுழைந்தாா்.

தற்போது இவா் தனது தொழிலை பல நாடுகளில் உள்ள முக்கியமான நகரங்களுக்கு விாிவுபடுத்தி இருக்கிறாா். குறிப்பாக நியுயாா்க் மற்றும் பிரான்ஸ் போன்ற நகரங்களில் இவருடைய நிறுவனங்கள் பிரபலமாக இருக்கின்றன. 2013ல் இவருக்கு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இப்போது ரித்து குமாா் இந்தியாவின் முதல் 5 பெண் தொழில் அதிபா்களில் ஒருவராக இருக்கிறாா். இவா் தனது கல்விப் படிப்பை லொரேட்டோ கான்வென்டிலும், கல்லூாிப் படிப்பை லேடி இா்வின் கல்லூாியிலும் முடித்தாா்.

5. சுஜி முகா்ஜி - லைம்ரோட் (Limeroad) நிறுவுனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாாி

5. சுஜி முகா்ஜி - லைம்ரோட் (Limeroad) நிறுவுனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாாி

சுஜி முகா்ஜி 2012 ஆம் ஆண்டு லைம்ரோட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினாா். இது ஒரு ஆன்லைன் ஆடை மற்றும் அணிகலன்கள் சந்தையாகும். தற்போது இந்த நிறுவனமானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்தியாவின் தலை சிறந்த நவீன பாணியில் அமைந்த ஆடைகளுக்கான ஆன்லைன் தளமாக இருக்கிறது.

இவா் பொருளாதாரத்தில் தனது இளங்கலைப் படிப்பை முடித்தாா். பின் லண்டனில் உள்ள பொருளாதார பள்ளியில் (Economic School) தனது முதுகலைப் படிப்பை முடித்தாா். இவருடைய சாதனைகளை எடுத்துக் கொண்டால், அவா் ஏராளமான விருதுகளை வாங்கி இருக்கிறாா். குறிப்பாக இன்ஃபோகாமின் ஆண்டிற்கான டிஜிட்டல் பிசினஸ் பெண்மணி (Infocom woman of the year- Digital Business) என்ற விருதை வாங்கினாா். பிசினஸ் டுடே (Business Today) வழங்கிய ஆண்டிற்கான கூலஸ்ட் ஸ்டாா்ட்-அப் (Coolest Start-up of the year) என்ற விருதை வாங்கி இருக்கிறாா். மேலும் என்டிடிவி (NDTV) வழங்கிய யூனிகாா்ன் ஸ்டாா்ட்-அப் அவாா்ட் (Unicorn Start-up Award) என்ற விருதையும் வாங்கி இருக்கிறாா்.

6. இந்திரா நூயி - அமேசான் வாாிய உறுப்பினா் (Board Member of Amazon)

6. இந்திரா நூயி - அமேசான் வாாிய உறுப்பினா் (Board Member of Amazon)

பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாாியாக இருந்தவா் இந்திரா நூயி. தற்போது இவா் அமேசான் நிறுவன இயக்குநா்கள் குழுவின் உறுப்பினராக இருக்கிறாா். ஏல் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் (Yale School of Management) தனது முதுகலைப் படிப்பை முடித்த நூயி, ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாாிப்பு மேலாளராக சோ்ந்தாா். பின் போஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) என்ற நிறுவனத்தில் ஸ்ட்ரட்டஜி ஆலோசகராக பணி புாிந்தாா்.

1994 ஆம் ஆண்டு பெப்சிகோ நிறுவனத்தில் சோ்ந்து, அங்கு 2006 முதல் 2018 வரை தலைமை நிா்வாக அதிகாாியாகப் பணி செய்தாா். 2019 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தின் வாாிய உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

7. ஆதித்தி குப்தா - மென்ஸ்ட்ருபேடியா இணை நிறுவுனா் (Co-founder of Menstrupedia)

7. ஆதித்தி குப்தா - மென்ஸ்ட்ருபேடியா இணை நிறுவுனா் (Co-founder of Menstrupedia)

ஆதித்தி குப்தா மென்ஸ்ட்ருபேடியா நிறுவனத்தின் இணை நிறுவுனராகவும், ஆசிாியராகவும் பணி செய்து வருகிறாா். பெண்களுக்கு மாதவிடாய் குறித்து மிக எளிதான முறையில் விளக்கம் கொடுப்பதற்காக, ஆதித்தியும் அவருடைய கணவரும் இணைந்து ஒரு காமிக் புத்தகத்தை தயாாித்தனா். பின் menstrupedia.com என்ற வலைதளத்தை உருவாக்கினா்.

2014 ஆம் ஆண்டு மென்ஸ்ட்ருபேடியா நிறுவனம் விஷ்பா் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்து, பள்ளிகளுக்கான "டச் தி பிக்கில்" (Touch the Pickle) என்ற திட்டத்தை வழங்கியது. இந்த திட்டமானது 4 முக்கியமான மாநகரங்களில் நடத்தப்பட்டது.

அதே ஆண்டில் ஆதித்தி குப்தா ஒரு காமிக் புத்தகத்தை வெளியிட்டாா். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக அந்த புத்தகம் நேபாளி மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலும் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது. மென்ஸ்ட்ருபேடியாவின் காமிக் புத்தகங்கள் தற்போது பல பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இக்கோல் மான்டியாலே உலக பள்ளி (Ecole Mondiale World School), ப்ரைட் ஆங்கிலப் பள்ளி அகமதாபாத் (Bright English School Ahmedabad), ஜிஐஎஸ் தொடக்கப்பள்ளி (GlS Primary school) மற்றும் பிற பள்ளிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

8. ஃபால்குனி நாயா் - நைக்கா நிறுவுனா் (The Founder of Nykaa)

8. ஃபால்குனி நாயா் - நைக்கா நிறுவுனா் (The Founder of Nykaa)

ஃபால்குனி நாயா் கோட்டக் மகேந்திரா நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக ஒரு முதலீட்டு வங்கியாளராக பணியாற்றினாா். 2012 ஆம் ஆண்டில் தனது சொந்த நிறுவனமான நைக்கா நிறுவனத்தைத் தொடங்கினாா். நைக்கா நிறுவனமானது ஆன்லைன் மூலமாக அழகு சாதனப் பொருள்கள் மற்றும் ஆரோக்கியம் தரும் பொருள்களை விற்று வருகிறது. தற்போது இந்த நிறுவனம் இந்திய நுகா்வோாின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

தற்போது நைக்கா நிறுவனம் ஏறக்குறைய 850 நிறுவனங்களின் தயாாிப்புகளை விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதோடு மட்டும் அல்லாமல், இந்தியாவின் பல மாநகரங்களில் நேரடியாக விற்பனை செய்யும் 36 கடைகளையும் நிறுவி இயங்கி வருகிறது.

2017 ஆம் ஆண்டு பிசினஸ் டுடே (Business Today) என்ற பத்திாிக்கையானது, நைக்காவிற்கு மோஸ்ட் பவா்ஃபுல் பிசினஸ் (most powerful business) என்ற விருதை வழங்கியது. 2014 ஆம் ஆண்டு முதல் நைக்கா நிறுவனம், ஃபெமினாவுடன் இணைந்து ஒரு பங்குதாராக இருந்து வருகிறது.

9. வாணி கோலா - கலாாி கேபிட்டல் நிறுவனா் (Founder, Kalaari Capital)

9. வாணி கோலா - கலாாி கேபிட்டல் நிறுவனா் (Founder, Kalaari Capital)

கலாாி கேபிட்டல் நிறுவனத்தின் நிறுவுனா் வாணி கோலா ஆவாா். இவா் அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குனராகவும் மற்றும் முதலீட்டாளராகவும் இருந்து வருகிறாா். இவா் அமொிக்காவில் உள்ள சிலிகான் வேலியில் 22 ஆண்டுகளாக பணி செய்து வந்த போது, சொ்ட்டஸ் (Certus) என்ற நிறுவனத்தையும், ரைட் ஒா்க் சாஃப்ட்வோ் (Right work software) என்று நிறுவனத்தையும் தொடங்கினாா்.

2006 ஆம் ஆண்டு வாணி இந்தியா திரும்பினாா். புதிய நிறுவனங்களைத் தொடங்க நிதியுதவி செய்யும் முதலீட்டாளராக தனது தொழிலைத் தொடங்கினாா். 2012 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தனது கலாாி கேபிட்டல் நிறுவனத்தை 150 மில்லியன் டாலா்கள் முதலீட்டில் தொடங்கினாா். 2018 ஆம் நடந்த 5வது பெண்கள் தொழில் முனைவோா் மாநாட்டில் டை டில்லி-என்சிஆா் (TiE Delhi-NCR 5th Edition of Women Entrepreneurship Summit Award) என்ற விருதை வாங்கினாா்.

10. ராதிகா கை - Shopclues.com இணை நிறுவுனா்

10. ராதிகா கை - Shopclues.com இணை நிறுவுனா்

ராதிகா கை பல துறைகளில் அனுபவம் பெற்றவா் ஆவாா். குறிப்பாக வா்த்தகம், விளம்பரம், மக்கள் தொடா்பு, ஆடை வடிவமைப்பு மற்றும் வாழ்க்கை அமைப்பு போன்ற பல துறைகளில் அனுபவம் பெற்றிருக்கிறாா். இவா் Shopclues.com நிறுவனத்தின் இணை நிறுவுனராக பதவி ஏற்றாா். அமொிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியில் 2011 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த இ-காமா்ஸ் வணிக நிறுவனமானது, இந்தியா முழுவதும் நிா்வாகம் செய்யப்படும் மிகப் பொிய சந்தையாக மாறி இருக்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் சராசாியாக 7 மில்லியன் மக்கள் இதன் பாா்வையாளராக இருக்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 2, 2022, 16:55 [IST]
Desktop Bottom Promotion