For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தோஷமான வாழ்க்கைக்கு 2020 புத்தாண்டில் கட்டாயம் எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள்!

புத்தாண்டு தினத்தின் போது நம் வாழ்விற்கு தேவைப்படும் அல்லது நாம் விரும்பும் மாற்றங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது.

|

புத்தாண்டு தினம் என்றாலே, கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு காலமாகவே இருக்கிறது. அதிலும் முக்கியமாக, வரும் ஆண்டை ஆர்வமாக எதிர்நோக்குவதாக உள்ளது. புத்தாண்டு தினத்தின் போது நம் வாழ்விற்கு தேவைப்படும் அல்லது நாம் விரும்பும் மாற்றங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது.

Top Resolutions For New Year 2020

இந்த 2020 புத்தாண்டில் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் சில தீர்மானங்களுக்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் உதவியாக உள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் நிற்கும் இடத்தை பாருங்கள்

நீங்கள் நிற்கும் இடத்தை பாருங்கள்

கடந்த புத்தாண்டின் போது அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும் என நீண்ட பட்டியலை தயார் செய்தீர்களா? அந்த பட்டியலில் எத்தனையை நிறைவேற்றி இருக்கிறீர்கள்? பட்டியலில் மீதமுள்ள அனைத்தையும் செய்து முடிப்பதற்கான நேரம் தான் இது...

இடையில் நிறுத்தியதை நிறைவேற்றுங்கள்

இடையில் நிறுத்தியதை நிறைவேற்றுங்கள்

கடந்த ஆண்டில் மேற்கொண்ட தீர்மானத்தில் இடையிலேயே விடப்பட்ட தீர்மானத்தை தொடர விரும்பினால், முதலில் அதற்கு வாய்ப்பளியுங்கள்.

யதார்த்தமான தீர்மானங்கள்

யதார்த்தமான தீர்மானங்கள்

கனவுகளை காற்றில் நெசவு செய்வதற்கு பதிலாக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை உருவாக்கி, உங்கள் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை சேருங்கள்.

முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்

முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்

உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் எவ்வளவு தூரம் உறுதியாக உள்ளீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக கடமைகளை நிறைவேற்ற இது நிச்சயம் உதவும்.

அன்பாக இருங்கள்

அன்பாக இருங்கள்

அனைவரிடமும் அன்பாகவும், இரக்கத்துடனும், அக்கறையுடனும் இருங்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை மிகவும் முக்கியமாகும்.

பேச்சில் இனிமை

பேச்சில் இனிமை

யார் ஒருவர் இனிமையான சொற்களுடன், மென்மையாக பேசுகிறாரோ, அவரது மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர் எங்கேயும், எப்போதுமே மதிக்கப்படுவார். இந்த தீர்மானம் பல பிரச்னைகளில் இருந்து நிச்சயம் காப்பாற்றும்.

உதவும் மனப்பான்மை

உதவும் மனப்பான்மை

உதவும் பண்பை இயற்கையாகவே வளர்த்துக் கொள்ளுங்கள். முதலில் வீட்டில் உங்கள் வாழ்க்கை துணைக்கு அனைத்து வேலைகளிலும் உதவ தொடங்குங்கள். பின்னர், அப்படியே படிபடியாக வீட்டிற்கு வெளியே உள்ளவர்கள், முன்பின் தெரியாதவர்கள் என அனைவருக்கும் எதிர்பார்ப்பின்றி உதவுங்கள். பிறகு எந்தவொரு தொந்தரவும் தந்திடாது மகிழ்ச்சியான புத்தாண்டாக இந்த புத்தாண்டை தொடங்குங்கள்.

யாரையும் அவமதிக்கக்கூடாது

யாரையும் அவமதிக்கக்கூடாது

பெற்றோர், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் வயதில் பெரியவர்கள் என யாரையும் ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அவர்களை அவமதிப்பது தனங்களை வழங்கும் கடவுள் குபேரரை இழப்பதற்கு சமம்.

நினைவில் கொள்ளுங்கள்

நினைவில் கொள்ளுங்கள்

காலை எழுந்தவுடன், தனது உள்ளங்கைகளை தேய்த்து பார்த்து, பின்பு கண்களை தேய்க்க வேண்டும். முக்கியமாக, தூங்கி எழுந்தவுடன் குளித்திட வேண்டும்.

பங்களிப்பு

பங்களிப்பு

இந்த உலகை நாம் வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்ற வேண்டுமென்றால், நம்மால் முடிந்தவற்றை நம் சமூகத்திற்கு திரும்ப கொடுக்க வேண்டும்.

இவர்களிடமிருந்து விலகியே இருங்கள்

இவர்களிடமிருந்து விலகியே இருங்கள்

காரியத்திற்காக பழகுபவர்கள், பொய் பேசுபவர்கள், தவறான பழக்கமுடையவர்கள், சுகாதாரம் பேணாதவர்கள் போன்ற நபர்களிடமிருந்து விலகி இருக்க மறந்திட வேண்டாம். இதுப்போன்ற மனிதர்கள், வாழ்வில் துரதிஷ்டத்தை கொண்டு வருவதோடு, வறுமை மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடும். எப்போதும், நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பதே சிறந்த வாழ்விற்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமான உடல்

ஆரோக்கியமான உடல்

மருத்துவரிடம் செல்வதை குறைக்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதை பழகிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி திட்டத்தை முதலில் தேர்ந்தெடுக்கவும். ஒரு குழுவாக இணைந்து உடற்பயிற்சி செய்தால் வேடிக்கையாக இருப்பதோடு, உடற்பயிற்சி செய்ய சலிப்பும் ஏற்படாமல் இருக்கும். ஆனால், உடற்பயிற்சி செய்யும் எந்தவொரு கடின இலக்கையும் நிர்ணயித்து விட வேண்டாம். ஏனென்றால், அது சில சமயங்களில் ஊக்கத்தை இழந்து, உடற்பயிற்சி செய்வதை கைவிடவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஒழுங்குப்படுத்துதல்

ஒழுங்குப்படுத்துதல்

வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், நேரத்தை நிர்வகிப்பதற்கும், மன அழுத்தமில்லாமல் வாழ்வதற்கும் இதுவே முக்கிய காரணம். எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்னதாகவும், செய்ய வேண்டியவற்றை ஒரு பட்டியலாக உருவாக்கி செய்தால் நிச்சயம் அங்கு தோல்விக்கு இடமே இருக்காது. இந்த விஷயத்தில் நீங்கள் ஏற்கனவே பாதி வழியில் இருக்கிறீர்கள்.

வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை

வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை

எப்போதும் பாதி நிரம்பிய கண்ணாடி குடுவையை பார்த்து சபதம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் எந்தவித தடைகளையும் தீர்க்க இது நிச்சயம் உதவும். இது உங்களை பிரச்னையில் இருந்து விடுபட்டதாக உணர வைக்கும். மேலும், மனதை பல்வேறு குழப்பங்களில் இருந்து விலக்கும்.

போதைப்பழக்கம் வேண்டாமே

போதைப்பழக்கம் வேண்டாமே

போதை பழக்கம் எந்த வகையிலும் உங்களுக்கு நல்லது செய்ய போவது கிடையாது. பிறகு எதற்காக அதனை தொடர வேண்டும். இந்த போதை பழக்கத்தை விட உதவி தேவைப்பட்டால் உதவி குழுக்கள் அல்லது நிபுணர்களை நாடலாம். உங்களுக்கு போதையை விட விருப்பம் இருந்தால், நிச்சயம் அதற்கான வழியை கண்டுபிடித்து விடுவீர்கள்.

உண்மையாக இருங்கள்

உண்மையாக இருங்கள்

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்போதும் உண்மையாக இருங்கள். இந்த புத்தாண்டு நிச்சயமாக ஒரு புதியதொரு தொடக்கமாக அமையும்.

ஒழுக்கமாக இருங்கள்

ஒழுக்கமாக இருங்கள்

நீங்கள் சோர்ந்து போகும் நேரத்தில் உங்களை தவிர யாரும் உங்களைப் பார்க்க போவதில்லை. எனவே, எப்போதும் சுய ஒழுக்கத்துடன் இருங்கள். அதாவது, உங்களுக்கென சில நெறிமுறைகள், எது சரி, எது தவறு என்பதை நிர்ணயித்து அதன் அடிப்படையில் நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில், பல்வேறு சோதனைகளில், உணவு முதல் மருந்து வரை வேண்டாம் என சொல்லும் அளவிற்கு நீங்களே வலிமையானவர் என்பதை முதலில் உணர்ந்து செயல்படுங்கள்.

குழந்தைப் பருவத்தை புதுப்பிக்கவும்

குழந்தைப் பருவத்தை புதுப்பிக்கவும்

வாழ்க்கையில் எளிமையை மீண்டும் கொண்டு வாருங்கள். அதாவது, மழையில் நடனமாடுவது, ஒரு நீர்க்குட்டையில் குதித்து குளிப்பது, பிடித்தமான சாக்லேட்களை சாப்பிடுவது என கவலையற்றவர்களாக சந்தோஷமாக இருங்கள்.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது

குடும்பத்தினருடனான உங்களது பிணைப்பு, வாழ்நாள் முழுவதையும் ஒரு விலையுயர்ந்த, மதிப்புமிக்க நினைவுகளின் புதையலாக அமையும். அந்த புதையலை மென்மேலும் சேர்ப்பதற்கான வழிகளை மட்டும் தொடர்ந்து தேடி வாருங்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு சிறந்ததொரு தொடக்கமாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Resolutions For New Year 2020

Here are some of the top resolutions for new year 2020. Read on...
Desktop Bottom Promotion