For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

|

பெண்கள் என்றாலே அழகுதான். அதிலும் ஒவ்வொரு நாட்டினரும், தங்கள் நாட்டு பெண்கள்தான் அழகு என்று போட்டிபோட்டுக்கொண்டு வருவார்கள். ஒவ்வொரு நாட்டினுடைய கலாச்சரமும், பண்பாடும் கூட இதில் அடங்கும். கலாச்சார உடைகளை அணிந்து பெண்கள் வந்தால், அவர்கள் தேவதைபோல மற்றவர் கண்களுக்கு தெரிவார்கள்.

Top 9 Countries With The Most Beautiful Women In The World

உலகின் மிக அழகான பெண்களை கொண்ட நாடுகளில் ஸ்வீடன், இந்தியா, ஈரான் போன்ற நாடுகள் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பொதுவாக இந்தியாவின் பாரம்பரிய உடை என்பது ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து மாறுபடும். ஆனால், பெரும்பாலும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பெண்களுக்கு புடவை என்பதுதான் உடையாக இருந்துவருகிறது. அதை உடுத்தும் விதம் மட்டும் மாறுபடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்வீடன்

ஸ்வீடன்

அழகு, சிலை, பொன்னிறம், பொருத்தம் மற்றும் உடல்வாகு என்று அறியப்பட்டவர்கள் ஸ்வீடன் நாட்டு பெண்கள். ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காமில்தான் உலகிலேயே பேரழகு நிறைந்த பெண்களின் பேரணி இருக்கிறது என்று டிராவலர்ஸ் டைஜஸ்ட் என்ற இதழ் குறிப்பிட்டு இருந்தது.

காரணம்

காரணம்

வலிமைமிக்க வைக்கிங்ஸ் தங்கள் மரபணுக்களை ஸ்காண்டிநேவிய நாடுகளில் பரப்பியதன் விளைவாகதான் சுவீடன் பெண்கள் மிக அழகாக இருக்கிறார்களாம். ஸ்காண்டிநேவியா முழுவதும் கிராமங்கள் மற்றும் டவுன்ஷிப்களை வைக்கிங்ஸ் தன்வசம் வைத்திருந்தபோது, அவர்கள் பெண்களை மிகவும் அழகாக அருள்பாலிகளாக எடுத்துக் கொண்டனர். இதனால் வலுவான, கட்டமைக்கப்பட்ட மற்றும் கவர்ச்சிகரமான சந்ததிகள் அவர்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கின்றன.

இத்தாலி

இத்தாலி

இத்தாலி நாட்டு பெண்கள் பாஸ்தா மீதான அதீத காதலின் காரணமாக ஆலிவ் நிறமுடைய தோல் மற்றும் வடிவான உருவங்களுடன் அழகாக இருக்கிறார்கள். இத்தாலிய பெண்கள் ஐரோப்பாவின் மிக அழகான பெண்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சோபியா லோரன் முதல் மோனிகா பெலூசி வரை, இத்தாலிய பெண்கள் தங்கள் கவர்ச்சி, வெளித்தன்மை, அழகு மற்றும் உச்சரிப்புகள் ஆகியவற்றால் இத்தாலிய மற்றும் அமெரிக்க சினிமா இரண்டிலும் கொடிக்கட்டி பறக்கின்றனர்.

MOST READ: பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா?...அப்ப இத பண்ணுங்க...!

காரணம்

காரணம்

இத்தாலிய பெண்களை உண்மையில் அழகாக மாற்றுவது அவர்கள் உணவு முறைதான் என்கிறார்கள். அவர்கள் உணவை சாப்பிடுவதற்கு யோசிப்பதில்லை. மிலன் இத்தாலியின் பேஷன் தலைநகராகும். அங்கு ஒல்லியாக இருக்கும் மாடல்கள் பலர் நிரம்பிருந்தாலும், இத்தாலிய பெண்கள் பீஸ்ஸா மற்றும் ஜெலட்டோவை அதிகம் உண்பார்கள். மேலும், மத்தியதரைக் கடல் உணவுகளையும் அவர்கள் அதிகம் உண்பார்கள். அது எவ்வளவு ஆரோக்கியமானது என்பதே இதற்குக் காரணம்.

கொலம்பியா

கொலம்பியா

தங்க பழுப்பு நிற சரும பராமரிப்பு, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் மற்றும் வடிவான உருவங்களுடன் கவர்ச்சியான தோற்றத்திற்கு கொலம்பிய பெண்கள் பெயர் பெற்றவர்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஷகிரா முதல் சோபியா வெர்கரா வரை, கொலம்பிய பெண்கள் தங்களுடைய ஆழகால் ஹாலிவுட்டில் ஒரு புயலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், வெவ்வேறு துறைகளிலும் தங்களுடைய பெயரை நிலைநிறுத்தியுள்ளனர்.

காரணம்

காரணம்

கொலம்பியா பெண்கள் அழகாக இருப்பதுடன், தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருப்பார்கள். இது அவர்களை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் அழகாகவும் ஆக்குகிறது.

இந்தியா

இந்தியா

இந்தியா மிகவும் மாறுபட்டது என்பதால், இந்நாட்டு பெண்களின் அழகு எல்லா வடிவங்களிலும் வருகிறது. நாட்டின் தெற்கில் இருந்து வரும் பெண்கள் நேர்த்தியான பழுப்பு நிற தோல், அடர்த்தி நிறைந்த கருமையான முடி மற்றும் பெரிய பாம்பி கண்களுக்கு பெயர் பெற்றவர்கள்.

வடகிழக்கு பெண்கள் பளபளப்பான தோல், நேரான முடி மற்றும் கவர்ச்சியான ஆலிவ் தோலுக்கு பெயர் பெற்றவர்கள். நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் வெண்மையான தோல், மெல்லிய மற்றும் வலுவான உடல்கள் மற்றும் பாதாம் வடிவ கண்களுக்கு பெயர் பெற்றவர்கள்.

MOST READ: பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்... ஷாக் ஆகாதீங்க...!

காரணம்

காரணம்

மொத்தத்தில், இந்தியாவின் பன்முகத்தன்மைதான் மக்களை ஈர்க்கிறது. இங்கு பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பலவிதமான உணவு முறைகள் மற்றும் விருந்தோம்பல் என எல்லாம் கலந்து பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. மேலும் பெண்களை தெய்வமாக வழிப்படும் வழக்கமும் இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை என அனைத்தும் இந்திய பெண்களை இன்னும் அழகாக காட்டுக்கிறது.

ஈரான்

ஈரான்

மத்திய கிழக்குப் பகுதியின் மிகச்சிறந்த பெண்களின் வீடாக அறியப்படுவது ஈரான். பளபளப்பான தோல் மற்றும் ஒளிபொருந்திய கண்கள் மற்றும் கூந்தல் ஆகியவற்றின் மொத்த கவர்ச்சியான கலவையுடன், உலகின் அதிசயமான சில பெண்கள் ஈரானில் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஈரான் நாட்டு பெண்களின் அடர்த்தியான கூந்தலை கண்டு உலகெங்கிலும் உள்ள பெண்கள் பொறாமை கொள்வார்களாம்.

காரணம்

காரணம்

ஈரான் பெண்கள் பெரும்பாலானோர் ஹிஜாப் அல்லது புர்காதான் அணிவார்கள். அதற்கு பதிலாக அவர்கள் முக அம்சங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இதன்காரணமாக அழகான பொலிவான சருமங்களை அவர்கள் பெருகிறார்கள்.

பிரேசில்

பிரேசில்

உலகிலேயே கவர்ச்சியான உடலை கொண்ட பெண்களில் முதலிடத்தில் இருப்பது பிரேசில் நாட்டு பெண்கள்தான் என்கிறது முன்பு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று. பிரேசிலிய பெண்கள் குடியேற்றம் காரணமாக உலகின் மற்ற பெண்களை விட மிகவும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். பிரேசிலில் பொன்னிற மேனியை கொண்ட அழகிய பெண்கள் அதிகமாக இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.

MOST READ: வீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா? அப்ப இத பண்ணுங்க...!

காரணம்

காரணம்

அமெரிக்காவைப் போலவே, பிரேசிலும் வெவ்வேறு கலாச்சாரங்களை கொண்டது. பிரேசிலிய பெண்களின் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், பிரேசிலில் குடியிருப்பதுதான் என்கிறார்கள். மேலும், அவர்களின் அழகிய உடலமைப்பு, தனித்துவமான அம்சங்கள், மகிழ்ச்சி உணர்வு மற்றும் நட்பு தன்மை ஆகியவற்றால் அறியப்பட்ட பிரேசிலிய பெண்கள் குறிப்பிடதக்கவர்களாக இருக்கிறார்கள்.

எகிப்து

எகிப்து

உலகின் மிக அழகான பெண் இளவரசி கிளியோபாட்ரா என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்ட பெயர். இந்த பட்டியலில் எகிப்து நாட்டு பெண்கள் அழகானவர்கள் என்று காண்பிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பெரும்பாலான எகிப்திய பெண்கள் இளமையான வட்ட முகங்களுடன், அழகிய கன்னங்களுடனும், ஒளிபொருந்திய கண்களுடனும் மற்றும் அழகான உதடுகளையும் கொண்டவர்கள்.

காரணம்

காரணம்

தங்களின் உடல் அழகை கவனிப்பதில் எகிப்து பெண்கள் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். 2011 எகிப்திய புரட்சிக்குப் பிறகு, பெண்கள் ஒரு அரசியல் அறிக்கையை வெளியிட்டு, அதில் ஃபேஷனைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவர்கள் பிரகாசமான வண்ண ஹிஜாப் மற்றும் அழகிய வேலைபாடுகள் கொண்ட நகைகளை அணியத் தொடங்கினர். இது அவர்களின் அழகையும் கவர்ச்சியையும் மேலும் மெருகேற்றியது.

நைஜீரியா

நைஜீரியா

நைஜீரிய பெண்கள் உயரமாக இருப்பதில் பிரம்பலானவர்கள். மேலும் அவர்களுடைய பாலுணர்வு, உடல் வாகு, வசீகரிக்கும் கவர்ச்சி காரணமாக அழகானவர்களாக இருக்கிறார்கள். அழகான செப்பு நிறமுடைய தோலுடன், நடிகைகள் சிலர் நைஜீரியாவிலிருந்து வருவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் வசீகரம், துணிச்சல் மற்றும் படைப்பு இயல்பு ஆகியவற்றிற்கும் பெயர் பெற்றவர்கள்.

MOST READ: நீங்கள் மோசமானது என்று நினைக்கும் பழக்கங்கள் உங்கள் உறவை பாதுகாக்கும் தெரியுமா?

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

வெளீர் நிறமுடைய முடி, வெண்மையான நிறம், அழகிய உடல் அமைப்பு மற்றும் சுலபமான இயல்புடன், ஆஸ்திரேலிய பெண்கள் ஹாலிவுட்டை அசத்துவது ஆச்சரியமில்லை. நிக்கோல் கிட்மேன், மார்கோட் ராபி முதல் ரெபெல் வில்சன் வரை ஆஸ்திரேலிய பெண்கள் சுவாரஸ்யமான உச்சரிப்புகளுக்கும், நகைச்சுவை உணர்விற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் மிகவும் வேடிக்கையாகவும், ஸ்போர்ட்டியாகவும் அறியப்படுகிறார்கள்.

அழகு

அழகு

உலகில் அழகான பெண்களை நாடுகள் பட்டியலில் இடம் பிடித்த நாடுகளில் உள்ள பெண்கள் மட்டும்தான் அழகாக என்றால், இவ்வுலகில் பிறந்த அனைவரும் அழகே. இறுதியாக அழகு என்பது பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறது. ஒருவருக்கு அழகாக தெரிவது உண்மையில் இன்னொருவருக்கு அழகாக தெரிவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான வழியில் அழகாகவும் சிறப்பாகவும்தான் இருக்கிறார்கள். அழகு என்பது நம் எண்ணத்திலும், வாழும் வாழக்கையிலும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 9 Countries With The Most Beautiful Women In The World

Here is the list of top 9 countries with the most beautiful women in the world.
Story first published: Thursday, December 5, 2019, 13:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more