For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்!

உலகம் முழுவதும் சூறாவளிகள் பெரும் பேரழிவை உருவாக்கியுள்ளன. வெப்பமண்டல சூறாவளிகள் ஒரு மணிநேரத்திற்கு குறைந்தது 74 மைல் வேகத்தில் காற்று வீசும் போது உருவாகின்றன.

|

வெப்பமண்டல சூறாவளி என்பது ஒரு தீவிரமான சுழல் புயல் அமைப்பாகும். இது குறைந்த அழுத்த மையத்துடன் கூடிய சூடான நீரில் உருவாகிறது. உலகம் முழுவதும் சூறாவளிகள் பெரும் பேரழிவை உருவாக்கியுள்ளன. வெப்பமண்டல சூறாவளிகள் ஒரு மணிநேரத்திற்கு குறைந்தது 74 மைல் வேகத்தில் காற்று வீசும் போது உருவாகின்றன.

Top 10 Worst Cyclones in the World

சூறாவளி உலகின் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அதில் மேற்கிந்திய தீவுகளில் சூறாவளி என்றும், அமெரிக்காவில் சுழன்றடிக்கும் சூறாவளி (Tornado) என்றும், சீன கடற்கரைப் பகுதிகளில் சூறாவளிப் புயல் (Typoon) என்றும், மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை பகுதிகளில் வில்லி வில்லி (Willy Willy) என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் புயல் (Cyclone) என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே ஒரே பொருளைத் தான் குறிக்கிறது.

MOST READ: விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா?

கீழே உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை ஏற்படுத்திய குறைந்தது முதல் மிகவும் கடுமையான டாப் 10 சூறாவளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பங்களாதேஷ் சூறாவளி (பங்களாதேஷ், 1942)

பங்களாதேஷ் சூறாவளி (பங்களாதேஷ், 1942)

1942 ஆம் ஆண்டின் பங்களாதேஷ் சூறாவளி இந்த பட்டியலில் குறைவான தீவிரம் கொண்டது. அக்டோபர் 16 ஆம் தேதி பங்களாதேஷின் கிழக்கு கடற்கரையை இந்த சூறாவளி தாக்கியது. அப்போது சுமார் 70 மைல் வேகத்தில் காற்று வீசியது. இதனால் 20 அடி புயல் எழுந்தது. இந்த சூறாவளியால் 61,000 பேர் இறந்தனர் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3000 வீடுகள் நாசமாயின.

நர்கிஸ் சூறாவளி (மியான்மர், 2008)

நர்கிஸ் சூறாவளி (மியான்மர், 2008)

2008 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி, நர்கிஸ் சூறாவளி மியான்மரில் நிலச்சரிவை ஏற்படுத்தி, அந்நாட்டின் தெற்கு பகுதியில் 2 நாட்கள் நீடித்திருந்தது. நர்கிஸ் சூறாவளி குறிப்பாக மியான்மரின் அய்யர்வாடி டெல்டா பகுதியை நாசமாக்கியது. இந்த சூறாவளி சுமார் 2.4 மில்லியன் மக்களை பாதித்ததாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இந்த சூறாவளியின் விளைவாக 84,500 பேர் இறந்தனர் மற்றும் 53,800 பேர் காணாமல் போயுள்ளனர்.

சூறாவளி 02B (பங்களாதேஷ், 1991)

சூறாவளி 02B (பங்களாதேஷ், 1991)

1991 ஆம் ஆண்டு பங்களாதேஷ் சூறாவளி என பொதுவாக குறிப்பிடப்படும் சூறாவளி 02B, ஏப்ரல் 29 ஆம் தேதி சிட்டகாங்கின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்த சூறாவளி பங்களாதேஷை பேரழிவிற்கு உட்படுத்தியது. இதனால் 1,35,000-க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 10 மில்லியன் மக்கள் வீட்டை இழந்தனர். மேலும் 1 மில்லியன் மாடுகள் சூறாவளியால் இறந்தன. மிகவும் முக்கியமாக, இந்த சூறாவளி நாட்டின் பயிர்களை அழித்தது. இதன் விளைவாக பலர் பட்டினியால் வாடினர். சூறாவளி 02B-யின் விளைவாக 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது.

சிட்டகாங் சூறாவளி (பங்களாதேஷ், 1897)

சிட்டகாங் சூறாவளி (பங்களாதேஷ், 1897)

1897 ஆம் ஆண்டு, பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் நகரத்தை சிட்டகாங் சூறாவளி பேரழிவிற்கு உட்படுத்தி, 1,75,000 பேரை கொன்றது மற்றும் நகரத்தில் பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. இந்த பட்டியலில் உள்ள சில சூறாவளிகளைப் போலல்லாமல், இந்த சூறாவளி குறித்து அதிக தரவு அல்லது செய்தி ஒளிப்பரப்பு கிடைக்கவில்லை. அந்த அளவில் சேதமானது ஏற்பட்டது.

கிரேட் பேக்கர்கஞ்ச் சூறாவளி (பங்களாதேஷ், 1876)

கிரேட் பேக்கர்கஞ்ச் சூறாவளி (பங்களாதேஷ், 1876)

1876 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்தது தான் கிரேட் பேக்கர்கஞ்ச் சூறாவளி என்று அழைக்கப்படும் வங்காள சூறாவளி. இந்த சூறாவளியால் 2,00,000 மக்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகிய இந்த சூறாவளி, மேக்னா நதி தோட்டத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. ஏற்கனவே அதிக அலைகளுடன் இணைந்து, சூறாவளி 40 அடி புயல் எழுச்சியை உருவாக்கியது. மேலும் இது தாழ்வான கரையோர பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. அதிக அலை மற்றும் புயல் எழுச்சியால் 50 சதவீத மக்கள் பட்டினியாலும், வெள்ளத்துடன் தொடர்புடைய நோயாலும் இறந்தனர்

பேக்கர்கஞ்ச் சூறாவளி (பங்களாதேஷ், 1584)

பேக்கர்கஞ்ச் சூறாவளி (பங்களாதேஷ், 1584)

1584 இல் நிகழ்ந்த பேக்கர்கஞ்ச் சூறாவளி வங்காள விரிகுடாவில் உருவாகி பங்களாதேஷை தாக்கியது. இதனால் பங்களாதேஷை அழித்ததோடு, 2,00,000 மக்களையும் அழித்தது.

கோரிங்கா சூறாவளி (இந்தியா, 1839)

கோரிங்கா சூறாவளி (இந்தியா, 1839)

1839 ஆம் ஆண்டு நவம்பர் 25 இல் துறைமுக நகரமான கோரிங்காவில் பேரழிவைத் தரும் சூறாவளி வந்தது. இந்த சூறாவளி பலத்த காற்றுடன் 40 அடி புயல் எழுச்சியை உருவாக்கியது. இதனால் பேரழிவு ஏற்பட்டது. இந்த சூறாவளியால் 3,00,000 மக்கள் இறந்தனர் மற்றும் துறைமுகம் முற்றிலும் இடிந்தது. சுமார் 20,000 கப்பல்கள் அழிந்தன. இந்த சூறாவளியால் சேதமடைந்த கோரிங்கா முழுமையாக மீளவில்லை. தற்போது இது சிறிய கிராமமாக உள்ளது.

ஹைபோங் சூறாவளி (வியட்நாம், 1881)

ஹைபோங் சூறாவளி (வியட்நாம், 1881)

அடுத்ததாக, வியட்நாமின் 1881 ஆம் ஆண்டு வந்த ஹைபோங் சூறாவளி. 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி டோன்கின் வளைகுடாவைத் தாக்கியது தான் ஹைபோங் சூறாவளி. இந்த சூறாவளி வடகிழக்கு நகரமான ஹைபோங்கில் வெள்ளம் சூழ்ந்த அலைகளை ஏற்படுத்தி, பேரழிவிற்கு உட்படுத்தியதுடன் நகரத்தின் அழிவுக்கும் வழிவகுத்தது. மேலும் இந்த ஹைபோங் சூறாவளி 3,00,000 மக்களையும் அழித்தது. இருப்பினும், பெரும் வெள்ளத்தின் விளைவாக, பட்டினி மற்றும் நோயால் பலர் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.

ஹூக்லி நதி சூறாவளி (இந்தியா மற்றும் பங்களாதேஷ், 1737)

ஹூக்லி நதி சூறாவளி (இந்தியா மற்றும் பங்களாதேஷ், 1737)

வரலாற்றிலேயே மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ஹூக்லி நதி சூறாவளி, கல்கத்தா சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய நகரமான கல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பேரழிவிற்கு உட்படுத்தியது. இந்த சூறாவளி கல்கத்தாவுக்கு தெற்கே கங்கை நதி டெல்டாவில் நிலச்சரிவை ஏற்படுத்தி, 30-40 அடி புயல் எழுச்சியை உருவாக்கியது. மேலும் 6 மணிநேரத்திற்கு மேல் சுமார் 15 அங்குல மழையை கொண்டு வந்தது. இந்த சூறாவளி பெரும்பாலான கட்டிடங்களையும், கட்டமைப்புக்களையும் அழித்து, கல்கத்தா நகரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியது. இந்த சூறாவளியால் 300,00 முதல் 350,000 பேர் வரை உயிரிழந்தனர். கூடுதலாக, ஹூக்லி நதி சூறாவளி 20,000 கப்பல்களை அழித்தது.

கிரேட் போலா சூறாவளி (பங்களாதேஷ், 1970)

கிரேட் போலா சூறாவளி (பங்களாதேஷ், 1970)

சூறாவளியிலேயே மிகவும் கடுமையான சூறாவளி கிரேட் போலா சூறாவளி என்ற மிக மோசமான வெப்பமண்டல சூறாவளி ஆகும். இது பாகிஸ்தானை முற்றிலுமாக அழித்தது. 1970 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி தொடங்கியது. நவம்பர் 11 ஆம் தேதி ஒரு மணிநேரத்திற்கு 85 முதல் 90 மைல் வேகத்தில் காற்று வீசி ஒரு தீவிரமான சூறாவளியாக ஆனது. மேலும் நவம்பர் 12 ஆம் தேதி வடக்கு நோக்கி நகர்ந்து, ஒரு மணிநேரத்திற்கு 140 மைல் வேகத்தில் காற்று வீசி, 20 அடி உயரத்தில் புயலாக எழுந்தது. துரதிர்ஷ்டவசமாக, வரவிருக்கும் சூறாவளி பற்றி வானிலை ஆய்வாளர்கள் அறிந்திருந்தாலும், கங்கை நதி டெல்டா மற்றும் கடலோர சமவெளியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு அறிவிக்க அவர்களுக்கு வழி இல்லை; இதனால், அது வருவதாக பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இதன் விளைவாக 3,00,000 முதல் 5,00,000 வரை மக்களை அழித்தது. இது வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும். இந்த சூறாவளியின் விளைவாக 490 மில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது, மேலும் 85 சதவீத வீடுகள் சேதமடைந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Worst Cyclones in the World

Here are the 10 worst cyclones in the world, from least to most severe. Read on...
Story first published: Tuesday, November 24, 2020, 17:53 [IST]
Desktop Bottom Promotion