Today Rasi Palan 11 December 2022: இன்று இந்த ராசிக்காரர்களின் பேச்சே அவர்களை சிக்கலில் மாட்டிவிடும்...

இன்றைய நாள் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 11 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குறிப்பாக, இன்று வணிகர்கள் பெரிய லாபம் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களின் தடைப்பட்ட வேலை முடிவடையும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியின் அனுகூலத்தைப் பெறலாம். இன்று நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:35 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வீண் வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஒரு சட்ட விவகாரத்தில் சிக்கிக் கொள்ளலாம். நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களின் அனைத்து பணிகளும் எளிதாக முடிவடையும். தொழிலதிபர்கள் புதிய முயற்சியில் நல்ல முடிவுகளைப் பெறலாம். நாளின் இரண்டாம் பகுதியில், திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் உடல்நலத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைத்து நேர்மறையாக செயல்படுங்கள். விரைவில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை மேம்படும். இன்று உங்களுக்கு திடீர் நிதி பலன்கள் கிடைக்கும். இது தவிர, நீங்கள் புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். இன்று உங்கள் துணையுடன் கூடுதல் நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுக்கிடையேயான மனகசப்பைக் குறைக்க முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:15 மணி முதல் இரவு 8:10 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். எதிர்காலத்தில் இதற்கான சரியான பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களால் முடிந்ததைச் செய்தால் விரைவில் பதவி உயர்வு கிடைப்பதோடு, உங்கள் வருமானமும் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்கள் தினசரி வழக்கத்தில் யோகாவைச் சேர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் முடிவுகளை நீங்களே தன்னிச்சையாக எடுப்பது நன்மை பயக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளியாட்களை தலையிட அனுமதிக்காதீர்கள். இன்று நீங்கள் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுத்தால் நல்லது. இன்று வேலை தொடர்பான உங்கள் கவலை சற்று அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு கூட வேலைப்பளு திடீரென அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 10:25 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். சமீபத்தில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, வேலைப்பளு சற்றே அதிகரிக்கலாம். முழு நம்பிக்கையுடன் முன்னேறினால், நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள், அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரையில், எந்த வேலையையும் அவசர அவசரமாக செய்யாதீர்கள். வாகனத்தை வேகமாக ஓட்டாதீர்கள். இல்லையெனில், விபத்து ஏற்பட நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று சில நல்ல செய்திகள் உங்களைத் தேடி வர போகிறது. சமீபத்தில் அரசு வேலைக்கான தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று நல்ல செய்தி காத்திருக்கிறது. உயர் கல்வி தொடர விரும்புபவர்களுக்கும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிறிய தவறுகள் கூட நேர அனுமதிக்காதீர்கள். இன்று, வணிகர்கள் எந்தவொரு ஆவணத்தை தயார் செய்யும்போதும் அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உடல்நிலை தொடர்பான விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று அவசரப்பட்டு எந்த முக்கிய முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். இன்று உங்கள் முதலாளி உங்களைப் பாராட்டலாம். சில பெரிய பொறுப்புகளையும் நீங்கள் ஒப்படைக்கலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணைக்கான தேடல் இன்று முடிவடையும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று உங்கள் எதிர்கால திட்டங்களை பற்றியும் நீங்கள் விவாதிக்கலாம். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலையும், வியாபாரமும் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய பாதையைத் திறக்கும். நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்தால் விரைவில் முன்னேறலாம். பொருளாதார நிலைமையை வலுப்படுத்துவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தடைப்பட்ட பண வரவைப் பெறலாம். உங்களின் அனைத்து நிதி பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, எடுத்த காரியத்தை இன்றே முடிக்க பாருங்கள். அலுவலகத்தில் உங்களின் எந்தவொரு வேலையையும் நாளை என தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் மேலதிகாரியின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். வணிகர்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். இன்று பணப்பற்றாக்குறையால் உங்களின் சில வேலைகள் பாதியில் நிற்கலாம். உங்கள் வீட்டின் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்க, வெளி பதற்றத்தை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். இன்றைய தினம் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு பலவீனம், உடற்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியைத் தரக்கூடும். அலுவலக சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் விடாமுயற்சி உயர் அதிகாரிகளின் மனதைக் கவரும். இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை பெறலாம். இன்று நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இருப்பினும், ஆர்வ கோளாறில் உங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவழிக்கும் தவறை செய்யாதீர்கள். இன்று தொழிலதிபர்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டம் முன்னேறி செல்லும். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்றைய தினம் பெரியவர்களின் வார்த்தைகளைப் புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பேசும்போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாடற்ற பேச்சு உங்கள் அன்புக்குரியவர்களின் மனதைப் புண்படுத்தும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவை பேண வேண்டும். ஆணவமும் மோதலும் உங்களுக்கு நல்லதல்ல. இதுபோன்ற விஷயங்கள் உங்கள் வேலையுடன் உங்கள் பெயரையும் பாதிக்கலாம். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலத்தை மனதில் கொண்டு நீங்கள் உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். சொந்த தொழில் செய்பவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, December 11, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion