Today Rasi Palan 03 March 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்ப்பது நல்லது...

இன்றைய நாள் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 03ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 03 March 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 03ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் திடீர் நிதி ஆதாயத்தைப் பெறலாம். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாகப் பயன்படுத்தினால் நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பான எந்தவொரு பெரிய பிரச்சனையும் முடிவுக்கு வரும். இன்று நீங்கள் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். இன்று உங்கள் அன்றாட வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் மதியம் 1 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்கப் போகிறீர்கள் என்றால், வெளி நபரின் ஆலோசனையைப் பெறுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் குழப்பம் ஏற்படலாம். உங்கள் கருத்து வேறுபாடுகள் இன்று பெரிய சண்டையில் முடியலாம். எனவே, உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இன்று அலுவலகத்தில், உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில கடினமான பணிகளை ஒதுக்கலாம். உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். எனவே, கவனக்குறைவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 46

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 8:45 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, பரபரப்பான வழக்கம் இருந்தபோதிலும், இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் முதலாளியின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரிகளின் வேலை அதிகரிக்கும். ஆபத்தான முடிவு எடுக்க நேரிடலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் துணைக்காக ஒரு பெரிய பரிசை வாங்கி கொடுக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான முடிவுகளைத் தரும் நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு நெருக்கமானவர்களின் உதவி கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் குழந்தை மகிழ்ச்சியான செய்திகளைக் கொண்டு வரலாம். கல்வித்துறையில் உங்களது செயல்பாடு பாராட்டுக்குரியதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 9:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வலுவாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். இருந்தாலும் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. நாளின் இரண்டாம் பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். மூத்த உடன்பிறப்பின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் அலுவலக விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. அலட்சியம் விலை உயர்ந்ததாக இருக்கும். நீண்ட நாளாக தடைப்பட்ட தொழிலதிபர்களின் வேலை இன்று முடிவடையும் வாய்ப்பு அதிகம். உங்கள் நிதி நிலை மேம்படும். உங்களின் நிதிப் பிரச்சனைகள் விரைவில் தீரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று வீட்டிற்கு சில விருந்தினர்கள் வரலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:15 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று, உங்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகமாகப் பேசுவதையோ அல்லது கேலி செய்வதையோ தவிர்க்குமாறு உத்தியேயோகஸ்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் இன்று உங்கள் முதலாளி உங்கள் மீது மிகவும் கோபப்படலாம். வணிகர்கள் பெரிய ஆர்டரை எடுப்பதற்கு முன்பு நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும். உடல்நலம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை எதிர்கொண்டால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் மாலை 6:45 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் அவசரமாக எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்கவும். ஒரு சிறிய தவறு கூட உங்கள் கடின உழைப்பைக் கெடுத்துவிடும். வியாபாரிகளுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். எந்த ஒரு பெரிய செலவும் செய்யும் முன்பு கவனமாக சிந்திக்க வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இரவில் தாமதமாக வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:15 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் இன்று பதவி உயர்வு பெறலாம். இருப்பினும், உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். இன்று வணிகர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் பெற்றோருடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் வீட்டின் சூழல் சரியாக இருக்காது. உங்கள் குழந்தையின் பிடிவாத குணம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிச்சுமை அதிகரிக்கலாம். வணிகர்களும் இன்று சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எளிதில் முடிக்கும் வேலையிலும் தடைகள் ஏற்படலாம். நிதி ரீதியாக இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். இன்று நீங்கள் மிகவும் சிரமமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களின் புதிய எண்ணங்களால் நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சிப்பவராக இருந்தால், இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். தொழிலதிபர்கள் அவசர அவசரமாக எந்த ஒரு பெரிய விஷயத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு நரம்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 41

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, நீங்கள் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த விலையுயர்ந்த பொருளையும் வாங்கிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் துணையின் மனநிலையைப் புரிந்துகொள்வது இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வேலை தொடர்பான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள், இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் நேர்மறையாகவும் இருப்பீர்கள். பெரியவர்களின் வார்த்தைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இன்று நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 4:05 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, March 3, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion