Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம்
இந்த 4 ராசிக்காரங்க எந்த முடிவும் சீக்கிரமா எடுக்காம ஜவ்வு மாதிரி இழுப்பங்களாம்...இவங்கள நம்பாதீங்க!
மிதுன ராசிக்காரர்கள் குழப்பமான வக்கீலாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் குழம்பிக்கொண்டே இருப்பதால், அவர்களால் சரியான முடிவு எடுக்க முடியாது மற்றும் எந்த முடிவிலும் உறுதியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.
நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக தெளிவான முடிவு எடுக்க வேண்டியது அவசியம். ஒரு தெளிவான முடிவு எடுக்கும் திறன் உங்கள் வாழ்க்கைக்கான நல்ல படியாக இருக்கும். உங்கள் வேலை, வாழ்க்கை மற்றும் திருமணம் என எந்த விஷயத்தை பற்றி முடிவு எடுத்தாலும், அதில் தீர்க்கமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் முடிவு எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனால், அதற்காக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது ஒருபோதும் நல்லதல்ல. இதனால், உங்கள் வாழ்க்கையில் நிறைய நேரம் வீணாகும் மற்றும் உங்கள் முடிவு தேவைப்படும் மற்றொருவரின் நேரத்தையும் வீணாக்குகிறது.

சில ராசிக்காரர்கள் முடிவெடுப்பதில் மிகச் சிறந்தவர்கள், அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் முற்றிலும் எதிர்மாறானவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவரா? ஒரு முடிவை தீர்க்கமாக எடுக்க முடியாமல் இரண்டு பக்கங்களிலும் நின்று கொண்டிருக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் குழப்பமான வக்கீலாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் குழம்பிக்கொண்டே இருப்பதால், அவர்களால் சரியான முடிவு எடுக்க முடியாது மற்றும் எந்த முடிவிலும் உறுதியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். சிலர் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல முடியும், ஆனால் மிதுன ராசிக்காரர்கள் இரண்டையும் மிகவும் ஒத்ததாகக் காண்கிறார். அதனால் அவர்களால் ஒன்றை தேர்வு செய்யவோ அல்லது தெளிவுபடுத்தவோ முடியவில்லை. எல்லா விருப்பங்களும் சிறந்தவை என்று அவர்கள் நினைப்பதால், தெளிவான முடிவை எடுக்க முடியாமல் எப்போதும் குழம்பிக்கொண்டிருப்பார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நல்லிணக்கம் மற்றும் சமநிலைக்கு நன்கு அறியப்பட்டவர்கள். இதனால் அவர்கள் ஒரு பக்கத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினம். இந்த ராசிக்காரர்கள் மோதல்களைத் தீர்ப்பதில் பிரபலமானவர்கள். ஏனெனில், மோதலின் இரு பக்கங்களைப் பெறுவதால் சிறந்த தியானக்காரர்களாக உருவாகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் யாரையும் புண்படுத்தவோ அல்லது மோதலை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. எனவே அவர்கள் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கிறார்கள். நடுநிலையாக இருப்பது துலாம் ராசியின் செயல்பாடு ஆகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் காற்றை போன்றவர்கள். அவர்களை அழைத்துச் செல்லும் இடத்திற்கு காற்றை போல செல்வதை விரும்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, எந்தவொரு முடிவும் நல்லது. ஏனென்றால் ஒவ்வொரு காரணமும் அதன் சொந்த விஷயங்களைக் கொண்டிருப்பதால் அவர்கள் ஆராய விரும்புகிறார்கள். அதேபோல இந்த ராசிக்காரர்கள் ஒருபோதும் விதிகளை கடைபிடிப்பதில்லை. அவர்களின் வாழ்க்கையில் எதைக் கொடுத்தாலும் மகிழ்வார்கள். மேலும் விதிகளை பிடித்துக்கொண்டிருப்பது உண்மையில் அவர்கள் செய்ய விரும்பாத ஒன்று.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தவறாக தேர்வு செய்யக்கூடாது என்பதில் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் முடிவு மீன ராசிக்காரர் விரும்புவதற்கு நேர்மாறாக இருந்தாலும், அவர்கள் அதைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் தியாகம் செய்வதைப் பொருட்படுத்தவில்லை, மாறாக அதையே வளர்த்துக் கொள்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் விரும்பும் கடைசி விஷயம் சுயநலமாக இருக்க வேண்டும் என்பது. ஆதலால், அவர்கள் மனதைக் கவரும் விதத்தில் முடிவெடுக்க முடியாது.

இதர ராசிக்க்காரர்கள்
மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி. விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் முடிவெடுப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதாவது குழப்பமடைந்தால், அவர்கள் தங்கள் முன்னுரிமைகளை அறிந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு விஷயத்தின் நன்மை தீமைகளையும் பகுப்பாய்வு செய்கிறார்கள். இதனால், அவர்களால், எளிதில் ஒரு முடிவினை எடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications