For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிதம்பரம் ரகசியம்-ன்னு சொல்றாங்களே.. அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா?

|

தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் மனித உடலமைப்பை பிரதிபலிக்கும் விதமாகவே கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கட்டமைப்பும், அதனுள் புதைந்திருக்கும் அறிவியல், கணிதவியல், மருத்துவம், விஞ்ஞான அதிசயங்களையும் தான் அனைவரும் சிதம்பர ரகசியம் என்று சொல்கின்றனர். இருந்தாலும் கூட இவை அனைத்தையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இந்த கோவிலுக்குள் இருப்பதாக கருதுகின்றனர்.

மற்ற ஜீவராசிகளிடம் இருந்து மனிதன் வேறுபட்டிருப்பதற்கு முக்கிய காரணமே, அனைத்தையும் பகுத்தறிந்து, செய்வதால் தான் என்று அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இருந்தாலும் மனிதனின் பகுத்தறிவுக்கு எட்டாத, அதற்கு அப்பாற்பட்ட பெரும்பாலான அறிவியல் பூர்வமான நம்பமுடியாத விஷயங்கள் பூமியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

MOST READ: ஓநாய் சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் தெரியுமா?

அம்மாதிரியான விஷயங்கள் எப்படி, ஏன், எதற்காக நடந்தது என்பதை என்னதான் மூளையை திருப்பிபோட்டு குழப்பிக்கொண்டு ஆராய்ந்தாலும், பகுத்தறிவு படைத்த மனித மூளையால் இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருகின்றன. இருந்தாலும், இன்றைய அறிவியல் விஞ்ஞானிகளால் சாதிக்க முடியாத கற்பனைக்கு எட்டாத விஷயங்களை எல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செய்துமுடித்து சாதித்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் இன்றை தலைமுறையினருக்கு பிரமிப்பூட்டுவதாகவே இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய்பிளக்கும் விஞ்ஞானிகள்

வாய்பிளக்கும் விஞ்ஞானிகள்

அன்றைய தமிழர்கள் கட்டிய அனைத்து கோவில்களுமே, இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு சவால் விடும் வகையிலேயே கட்டப்பட்டுள்ளன. அன்றைக்கு கட்டப்பட்ட கோவில்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்த மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வாய் பிளந்து, நிச்சயமாக இன்றைய வளர்ந்துவிட்ட பொறியியல் சாதனங்களைக் கொண்டு கூட இப்படிப்பட்ட கலைக் கோயில்களை கட்டவே முடியாது என்று தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஒரே நேர்கோட்டில் அமைந்த கோவில்கள்

ஒரே நேர்கோட்டில் அமைந்த கோவில்கள்

அதற்கு அத்தாட்சியாக எத்தனையோ கோவில்களை உதாரணமாக சொல்லலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் முதல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், அங்கோர்வாட் கோவில் வரையிலும் அனைத்துமே இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு சவால் விடும் வகையிலேயே கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பஞ்சபூத தலங்களான, சிதம்பரம் நடராஜர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவில் என இந்த ஐந்து கோவில்களுமே ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன என்றால், அன்றை தமிழர்களின் விஞ்ஞான அறிவை என்னவென்று சொல்ல.

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்

அதிலும், சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டப்பட்டுள்ள விதத்தை அறியும்போது, நம்முடைய விழிகள் ஆச்சரியத்தில் விரியும். அறிவியல், பொறியியல், கணிதவியல், மருத்துவம், விஞ்ஞானம் என இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில், மனித உடலமைப்பு அப்படியே பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது, வளர்ந்துவிட்ட இன்றைய நவீன யுகத்தில் கூட இந்த மாதிரி சரியான திட்டமிட்டு கட்டமுடியாது என்று தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர். அதனால் தான் இக்கோவிலை சிதம்பர ரகசியம் என்றும் பிரமிப்புடன் சொல்கின்றனர்.

சிதம்பர ரகசிய பீடம்

சிதம்பர ரகசிய பீடம்

சிதம்பர ரகசியம் என்பதற்கு மற்றொரு பிரமிப்பான காரணமும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது, இக்கோவிலின் நடராஜர் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் ஒன்று அமைந்துள்ளது. சிற்சபை அமைந்திருக்கும் இடத்திற்கு வலப்புறத்தில் அமைந்துள்ளது ஒரு சிறிய வாயில். இந்த அறையினுள் கண்ணுக்கு தெரியும் வகையில் எந்தவிதமான திருவுருவமும் இல்லை. பொன்னாலான வில்வ தளமாலை மட்டுமே சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்களின் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதை திரு அம்பலச்சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் சொல்வதுண்டு.

அண்டவெளி ரகசியம்

அண்டவெளி ரகசியம்

திருவம்பலச்சக்கரம், திரஸ்க்ரிணீ என்னும் நீலவண்ண வஸ்திரம் கொண்டு மூடப்பட்டிருக்கும். அந்த வஸ்திர திரை விலக்கப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்படும். அதாவது முழுக்க முழுக்க பரிபூர்ணமான வெட்டிவெளி என்று சொல்லப்படும் திறந்த அண்டவெளியே இதன் ரகசியம். திறை விலக்கப்பட்டு, ஆரத்தி காட்டும்போது, அங்கு சிலையோ அல்லது காட்சிகளோ கண்ணுக்கு புலப்படாது. பொன்னாலான வில்வ தளமாலை மட்டுமே நம் கண்ணுக்கு தென்படும். வேறு எந்த மாதிரியான திருவுருவமும் தென்படாது.

உன்னிடம் எதுவுமே கிடையாது

உன்னிடம் எதுவுமே கிடையாது

அதாவது, விக்ரகம் அல்லது எந்தவிதமான உருவமும் இல்லாமல் வெறும் பொன்னாலான வில்வ தளம் மட்டுமே தொங்குவதற்கான காரணம், எம்பெருமானான ஈசன், ஆகாய வெளியில் உருவமும் இல்லாத அருவம் இல்லாத, முதலும் முடிவும் இல்லாத பேரானந்தமான இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே. அண்டவெளிக்கு தொடக்கமும் முடிவும் கிடையாது. அவனை நாம் அகக்கண்களால் உணரத்தான் முடியுமே தவிர புறக்கண்களால் காண முடியாது. அதை உணர்த்துவதற்காகவே இத்தலம் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. அதாவது, சித்-அறிவு, அம்பரம்-வெட்டவெளி, இதைத்தான் சிதம்பரம் என்றும், மனிதனே உன்னிடம் எதுவும் கிடையாது என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியத்தின் தத்துவமாகும்.

நடராஜரும் அணுவின் சுழற்சியும்

நடராஜரும் அணுவின் சுழற்சியும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடும் கோலத்தில் நடராஜர் இருப்பது, அணுவின் சுழற்சியை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஒத்திருப்பதாக அணு விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர். அணுவின் சுழற்சியையும் நடராஜர் ஒற்றைக் காலை தூக்கி ஆடும் கோலத்தையும் பார்த்தால் நமக்கு அந்த உண்மை விளங்கும். அணு விஞ்ஞானிகளும் நடராஜரின் நாட்டிய கோலமான ஆனந்த தாண்டவத்தை காஸ்மிக் டான்ஸ் (Cosmic Dance) என்று அழைக்கின்றனர். அணுவின் அசைவும், நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது.

நடராஜரும் மனித உடலமைப்பும்

நடராஜரும் மனித உடலமைப்பும்

சிதம்பரம் நடராஜர் கோவில் மனித உடலமைப்பை அப்படியே பிரதிபலிப்பதாக அறிவியல் விஞ்ஞானிகள் அடித்துச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அதாவது, நம் உடம்பில் இதயம் இருப்பது இடது பக்கத்தில் தான். அது போலத்தான், இக்கோவிலின் பொன்னம்பலம் சற்று ஒதுங்கி இடது பக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. பொன்னம்பலத்தை அடைய ஐந்து படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். இந்தப் படிகள் சிவாயநம என்னும் பஞ்சாட்சரப்படிகள் என்று அழைக்கப்படுகிறது.

9 நுழைவு வாயில்கள்

9 நுழைவு வாயில்கள்

இக்கோவிலில் 9 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. இது மனித உடலில் அமைந்துள்ள 9 வாயில்களை குறிப்பதாக அமைந்துள்ளது. அதே போல், இக்கோவிலின் விமானத்தின் மேல் வேயப்பட்டிருக்கும் பொற்கூரையானது 21600 தங்கத்தகடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதன், ஒரு நாளைக்கு சராசரியாக 21600 முறை சுவாசிக்கிறான் என்பதை குறிப்பதாகும். ஒருவன் ஒரு நிமிடத்திற்கு 15 முறையும், 24 மணி நேரத்தில் 21600 முறையும் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 72000 நாடிகள்

72000 நாடிகள்

பொற்கூரையின் தங்கத் தகடுகளை வேய 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது, ஒரு மனிதனின் உடம்பில் துடிக்கும் 72000 நாடிகளை குறிக்கின்றன. இதில் நம் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் உடம்பில் அனைத்து பகுதிகளுக்கும் சக்தியை கொண்டு செல்லும் நாடியும் அடங்கும்.

18 தூண்களும் 18 புராணங்களும்

18 தூண்களும் 18 புராணங்களும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொன்னம்பலம் இருக்கும் கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது இந்துக்களின் ரிக், யஜூர், சாம, அதர்வணம் என நான்கு வேதங்களைக் குறிப்பதாக அமைந்துள்ளன. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சிவனை வழிபடும் 28 வழிமுறைகளையும், 28 ஆகம விதி முறைகளையும் குறிக்கின்றன. மேலும் பொற்கூரையில் மேல் இருக்கும் 9 கலசங்களும் 9 வகையான சக்தியை குறிக்கின்றன. நடராஜர் கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்களும் 6 சாஸ்திரங்களையும், பக்க மண்டபத்தில் உள்ள 18 தூண்களும் 18 புராணங்களையும் குறிக்கின்றன.

மனித வடிவமே சிவலிங்கம்

மனித வடிவமே சிவலிங்கம்

இதைத்தான் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் என்ற சித்தர், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறியுள்ளார். தன்னுடைய திருமந்திரம் என்ற நூலில்,

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று சொல்லியுள்ளார். அதாவது, மனித வடிவமே சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே சிவனின் நடனம் என்று பொருளாகும். திருமூலர் அணுவையே சிவமாக பார்க்கிறார். ஆனால், இந்த சிவமாகிய அணுவை இப்போது தான் நெருங்கியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Secret of Chidambaram Thillai Nataraja Temple

The Chidambaram Thillai Nataraja Temple is built to reflect the human body. The structure of the temple and the science, mathematics, medicine, and scientific wonders that are buried within it are the secret of the Chidambaram. Even so, they feel that there is something beyond all this in the temple.
Story first published: Thursday, January 9, 2020, 17:04 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more