For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா?

நாம் பயன்படுத்தும் இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டுக் காட்டுகிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

|

வாட்ஸ்அப் ஆக இருக்கட்டும்; ஃபேஸ்புக்காக இருக்கட்டும், இமாஜி பயன்படுத்தப்படாத உரையாடலே இல்லை எனலாம். ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் செய்திகளில் உணர்வை வெளிப்படுத்த பல்வேறு இமோஜிகளை உபயோகிக்கிறோம். ஜூலை மாதம் 17ம் தேதி, உலக இமோஜி தினம் கொண்டாடப்படுகிறது.

The Most Popular Emojis And Their Meanings

உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டுக் காட்டுகிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இவர்தான் உருவாக்கினார்

இவர்தான் உருவாக்கினார்

இமோஜியை முதன்முதலாக யாஹூ மெசஞ்ஜர் தான் பயன்படுத்தியது. 2010ம் ஆண்டுதான் மொபைல் போன்களில் இமோஜி பிரபலமானது. ஜப்பானிய அலைபேசி சேவை நிறுவனமான என்டிடி டொமோக்காவில் பணியாற்றிய ஷிமேடாகா குரிடா என்ற எஞ்ஜினியர்தான் 1998ம் ஆண்டில் இமோஜிகளை உருவாக்கினார்.

MOST READ: உசுப்பேத்தினா உம்முனும் கடுப்பேத்தினா கம்முனும் இருங்கனு சொன்னது ஏன்னு தெரியுமா?

இமோஜியும் அனுமதியும்

இமோஜியும் அனுமதியும்

ஆண்டுதோறும் யூனிகோடு கான்சார்ட்டியம் என்ற அமைப்பு அனுமதிக்கப்பட்ட இமோஜிகள் அடங்கிய பட்டியலை வெளியிடுகிறது. அனுமதிக்கப்பட்ட இமோஜிகளை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற இயங்குதளங்கள் தங்கள் பயன்பாட்டில் அறிமுகம் செய்கின்றன. ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டின்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் உறுப்பினர்கள் யூனிகோடு கான்சார்டியத்தில் உள்ளனர். அவர்கள் அளிக்கும் வாக்குகளின்பேரிலே இமோஜிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இமோஜி

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இமோஜி

இந்தியாவில் முத்தத்தை ஊதிவிடும் இமோஜியும் ஆனந்த கண்ணீர் விடும் இமோஜியும் ஸ்மார்ட்போன் உரையாடல்களில் அதிக பிரபலம் என்று பாப்பில் ஏஐ அறிக்கை கூறுகிறது. டிவிட்டர்களில் பயன்படுத்தப்படும் இமோஜிகளை இமோஜிடிரக்கர் கண்காணிக்கிறது.

அதிகம் பயன்படுத்தப்படும் 10 இமோஜிகள்:

அதிகம் பயன்படுத்தப்படும் 10 இமோஜிகள்:

1. ஆனந்த கண்ணீர் விடும் முகம்

கண்களில் கண்ணிர் வர படுபயங்கரமாக சிரிக்கும் இமோஜி, யாராவது வேடிக்கையானவற்றை, சங்கடமானவற்றை செய்யும்போது அல்லது கூறும்போது வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

2. இதயங்களை கண்களாக்கி புன்னகைக்கும் முகம்

2. இதயங்களை கண்களாக்கி புன்னகைக்கும் முகம்

கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இதயங்கள் இருக்கும்; வாய் சிரித்துக்கொண்டிருக்கும். இந்த இமோஜி அன்பு, வாஞ்சை, மதிப்பு ஆகியவற்றை தெரிவிக்க பயன்படுகிறது.

MOST READ: அரை கிலோ பழைய பிளாஸ்டிக் கவர்கள் கொடுத்தா ஃபுல் மீல்ஸ் சோறு... எந்த ஹோட்டல்னு தெரியுமா?

3. சிந்திக்கும் முகம்

3. சிந்திக்கும் முகம்

ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோன்ற இமோஜி, யாரையாவது அல்லது எதையாவது குறித்து வினா எழுப்பும் தருணத்தில் பயன்படுத்தப்படுகிறது.

4. குவிந்த கரங்கள்

4. குவிந்த கரங்கள்

பிரார்த்தனை செய்வது போன்று இருகரம் கூப்பிய இமோஜி, ஜப்பானிய பண்பாட்டின்படி தயவுகூர்ந்து என வேண்டுவதற்கும், நன்றி தெரிவிக்கவும் பயன்படுகிறது.

5. தட்டும் கைகள்

5. தட்டும் கைகள்

வெற்றியை, திறமையை அல்லது சாதனையை பாராட்டும்படியாக கை தட்டல் இமோஜி பகிரப்படுகிறது.

6. முத்தத்தை ஊதிவிடுதல்

6. முத்தத்தை ஊதிவிடுதல்

முத்தமிடுவதுபோல உதடுகளை குவித்து, இதயமொன்றை ஊதிவிடும் ரொமான்ஸ் இமோஜி, பெரும்பாலும் காதலை தெரிவிக்க பயன்படுகிறது.

MOST READ: மொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...

7. கட்டைவிரல் உயர்த்துதல்

7. கட்டைவிரல் உயர்த்துதல்

'ஆமாம்' என்பதை குறிக்கும் வண்ணம் கட்டை விரல் உயர்த்தி காட்டும் இமோஜி பொதுவாக 'திருப்திகரம்' என்பதை தெரிவிக்க பயன்படுகிறது.

8. கூலிங்கிளாஸ் அணிந்து புன்னகைத்தல்

8. கூலிங்கிளாஸ் அணிந்து புன்னகைத்தல்

கறுப்பு நிற கண்ணாடி அணிந்து புன்னகைக்கும் முகமாகிய இமோஜி, 'நலமே' என்பதை காட்டும் டேக் இட் ஈஸி முகமாகும்.

9. நாணும் முகம்

9. நாணும் முகம்

சிரிக்கும் கண்கள், புன்னகைக்கும் முகம், கன்னங்களில் இளஞ்சிவப்பு (ரோஜா வண்ணம்) கொண்டிருக்கும் இமோஜி, சந்தோஷம் போன்ற நேர்மறை எண்ணங்களை குறிப்பதாகும்.

MOST READ: 24 மணிநேரம் வேலை செஞ்சாலும் கையில காசு நிக்கவே மாட்டேங்குதா? அது ஏன்னு காரணம் தெரியுமா?

10. எதிர்பாராத வியப்பை காட்டும் முகம்

10. எதிர்பாராத வியப்பை காட்டும் முகம்

எதிர்பாராத வண்ணம் 'நல்லது' அல்லது 'கெட்டது' நடைபெற்று விட்டது என்பதை காட்டுவதற்கு வியப்பு அல்லது ஆச்சரியத்தை வெளிக்காட்டும் முகமான இமோஜி பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Most Popular Emojis And Their Meanings

Our conversations are incomplete without emojis; be it on Whatsapp or Facebook. Different emojis are used for expressing our feelings through message. World Emoji Day 2019, which is celebrated on 17 July, calls for global celebration for emojis.
Story first published: Friday, July 26, 2019, 15:03 [IST]
Desktop Bottom Promotion