ஸ்ரீரங்கநாதருக்கு சித்திரை தொடங்கி பங்குனி வரை ஆண்டு முழுவதும் திருவிழா தான்...

வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான்.

வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான். அதுமட்டுமல்லாமல், 108 திவ்யதேசங்களிலேயே 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு பாடல் பெற்ற கோவிலும் ரங்கநாதர் கோவில் தான். மேலும் கவிச்சக்ரவர்த்தி கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தான் என்பதும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

Srirangam Temple Festival Held Annually For 322 Days

இந்தியாவில் வேதங்கள் உருவான காலத்திலிருந்தே சைவ மதமும் வைணவ மதமும் தழைத்தோங்கி வளர்ந்து வருகின்றன. இந்திய தேசத்தை ஆண்ட எத்தனையோ மன்னர்கள் இவ்விரண்டு மதங்களையும் மதித்து போற்றி வளர்த்து வந்ததோடு இல்லாமல், இடையில் ஏற்பட்ட எத்தனையோ அந்நிய படையெடுப்புகளால், இந்தியா கொள்ளையடிக்கப்பட்டு, சுரண்டப்பட்டாலும் கூட, சைவம் மற்றம் வைணவ மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை. உலகம் முழுவதும் எத்தனையோ நாடுகள், இஸ்லாமிய மன்னர்களாலும், ஆங்கிலேயர்களாலும் சூறையாடப்பட்டு, மிகக்குறுகிய காலகட்டங்களிலேயே மதம் மாற்றம் செய்யப்பட்டு, கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகளாக மாற்றப்பட்ட போதும், இந்தியாவில் மட்டும் அவர்களால் மூளைச் சலவை செய்து மதம் மாற்றம் செய்ய முடியவில்லை.

அதற்கு மாறாக இன்னும் ஆழமாக வேரூன்றி வளரத்தான் செய்தது. அதிலும் தென்னிந்தியாவில் தான் சைவ, வைணவ மதங்களும் போட்டி போட்டு வளர்ந்து வந்தன. அதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியாவை ஆண்ட சேர சோழ, பல்லவ மன்னர்களும், தென் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களும், நாயக்கர்கள், சுல்தான்கள், ஹொய்சாள வம்ச மன்னர்களும் தான். இவர்கள் அனைவருமே இந்து சமயத்தின் மீது ஆழ்ந்த பக்தியும், இறை நம்பிக்கையும் கொண்டிருந்த காரணத்தினால் தான், இவ்விரண்டு மதங்களையும் போற்றி பாதுகாத்து வந்ததோடு, இன்றைக்கும் கம்பீரமாக நிற்கும் எத்தனையோ கலைக்கோயில்களையும் உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சேர சோழ மன்னர்களின் இறைபக்தி

சேர சோழ மன்னர்களின் இறைபக்தி

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கட்டிய சைவ, வைணவ கோவில்கள் பெரும்பாலானவை சைவ சமய குறவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசர் என நால்வரால் தேவாரம் பாடல் பெற்ற கோவில்களாகவும், பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களாகவும் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியாவை ஆண்ட அனைத்து மன்னர்களுமே மன்னர்களுமே, சைவ வைணவ மதங்களையும் தங்களின் இரு கண்களாக நினைத்ததால் தான்.

ஸ்ரீரங்கபட்டினம் டூ நாகபட்டினம்

ஸ்ரீரங்கபட்டினம் டூ நாகபட்டினம்

அதிலும், காவிரி நதி பாய்ந்தோடும் இடங்களில் எல்லாமே மிகப்பெரிய கோவில்களை கட்டி சிறப்பு சேர்த்தனர். அதில் குறிபிட்டு சொல்ல வேண்டுமெனில், காவிரியின் தொடக்க எல்லையான ஸ்ரீரங்கபட்டினம் தொடங்கி, காவிரி டெல்டா பகுதியான திருச்சி, கும்பகோணம், கடலூர், நாகபட்டினம் வரையிலும் உருவாக்கிய கோவில்கள் அத்தனையுமே இன்றைக்கும் இம்மன்னர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

108 திவ்யதேச திருப்பதிகள்

108 திவ்யதேச திருப்பதிகள்

பன்னிரு ஆழ்வார்களால் மங்காளசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ கோவில்கள் நாடு முழுவதும் இருந்தாலும், இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் தான் உள்ளன. அதிலும் குறிப்பாக காவிரி நதி பாயும் திருச்சி, கடலூர், தஞ்சை மற்றும் நாகபட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களிலேயே உள்ளன. இதற்கு முக்கிய இந்த பகுதிகளை ஆண்ட திராவிட வம்ச மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களும், படையெடுத்து வந்து தென்னிந்தியாவை ஆண்ட, விஜயநகர, ஹொய்சாள, சுல்தான்கள், நாயக்க மன்னர்களும் தங்களால் இயன்ற அளவில் இப்பகுதியில் இருந்த கோவில்களுக்கு திருப்பணிகள் செய்ததினாலும் தான்.

காவிரி டெல்டாவில் 40 திருப்பதிகள்

காவிரி டெல்டாவில் 40 திருப்பதிகள்

பன்னிரு ஆழ்வார்களால் மங்காளாசாசனம் செய்யப்பட்ட கோவில்களில் காவிரி நதி பாயும் டெல்டா பகுதியில் மட்டுமே 40 கோவில்கள் உள்ளன. இதில் மிகவும் புகழ்பெற்ற கோவில் தான் திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 108 திவ்யதேசங்களிலேயே முதலாவது திவ்யதேசம் மற்றும் பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படுவதாகும். இதனால் தான், வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.

சங்க இலக்கியத்தில் ஸ்ரீரங்கம்

சங்க இலக்கியத்தில் ஸ்ரீரங்கம்

மற்ற திவ்யதேசங்களைக் காட்டிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற 11 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டு பாடல் பெற்ற மிகப்புனிதமான கோவிலாகும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கை பகுதியை ஆண்டுவந்த கலியன் என்ற மன்னன், திருடனாக மாறி, மாறுவேடத்தில் வந்த மஹாவிஷ்ணுவிடமே கொள்ளையடித்து இக்கோவிலுக்கு திருப்பணி செய்துவந்தார். மஹாவிஷ்ணு அவருக்கு காட்சியளித்ததையடுத்து, மனம் திருந்தி திருமங்கை ஆழ்வாராக மாறி பாசுரங்கள் பாடி புகழ்பெற்றார். சங்க இலக்கியத்திலேயே இக்கோவில் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சுயம்புமூர்த்தியான மூலவிக்ரகம்

சுயம்புமூர்த்தியான மூலவிக்ரகம்

ஸ்ரீரங்கநாதரின் மூலவிக்ரகமானது, பிரம்மாவின் தவத்தால் பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட சுயம்புவாகும். பிரம்மன் நித்ய பூஜை செய்வதற்கு சூரியனை நியமித்தார். பின்னர் சூரிய குல வழித்தோன்றலான இட்சுவாகு என்ற அரசன் அயோத்திக்கு கொண்டு சென்றார். அவருடைய வழி வந்த ஸ்ரீராமர், தன்னுடைய பட்டாபிஷேகத்தை காணவந்த இலங்கை மன்னர் விபீஷணனுக்கு பரிசாக அளித்தார். அவர் வரும் வழியில் ஸ்ரீரங்கத்தில் காவிரிக் கரையோரம் இறக்கி வைக்க, அச்சிலை அங்கேயே தங்கிவிட்டது.

இலங்கை நோக்கிய பார்வை

இலங்கை நோக்கிய பார்வை

இதில் குறிப்பிடவேண்டிய அம்சம் என்னவென்றால், மற்ற வைணவ கோவில்களில் எல்லாமே மஹாவிஷ்ணு சயன கோலத்தில் வடக்கு நோக்கி இருப்பார். ஆனால் இங்கு மட்டுமே மேற்கில் தலை வைத்து தென்கிழக்கு திசையிலுள்ள இலங்கை நோக்கி தன்னுடைய பார்வையை பதித்திருப்பார். இதற்கு காரணம், தான் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமானாக இருந்தாலும் என்றைக்கும் உன் தேசத்தை பார்த்துக்கொண்டே தான் இருப்பேன் என்று மஹாவிஷ்ணு விபீஷணனுக்கு அளித்த வாக்குறுதி தான்.

ஆசியாவிலேயே உயரமான கோபுரம்

ஆசியாவிலேயே உயரமான கோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ராஜகோபுரமானது ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமாகும். சுமார் 236 அடி உயரத்துடன் 13 நிலைகளையும் 13 கலசங்களையும் கொண்டுள்ளது. தெற்கு புறத்திலுள்ள ராஜகோபுரமானது 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் இருந்து வந்தது. பின்னர் அகோபில மடத்தின் 44ஆவது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால், கடந்த 1979ஆம் ஆண்டு மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 1987ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

குட்டித் தீவான ஸ்ரீரங்கம்

குட்டித் தீவான ஸ்ரீரங்கம்

இக்கோபுரத்தின் உச்சியில் நின்று பார்த்தால் இலங்கை தெரியும் என்று நம்பப்படுகிறது. காவிரி மற்றம் கொள்ளிடம் என இரண்டு ஆறுகளுக்கு இடையில் ஆற்றிடைக்குறை எனப்படும் மணல் திட்டுகளால் ஆன தீவில், 156 ஏக்கர் பரப்பளவில் ஒரு குட்டித் தீவு போல் காட்சியளிக்கும் இக்கோவிலில், 21 கோபுரங்களும் 7 பிரகாரங்களும், 58 தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

ராமாயணம் அரங்கேற்றம்

ராமாயணம் அரங்கேற்றம்

இக்கோவிலில் தான், கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய ராமாயணம் நூல் அறங்கேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தாயாரி சன்னதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் தான் ராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வைணவ கோவில்களில் எல்லாம் மாதத்திற்கு ஒரு முறையும், சித்திரை மாதத்தில் தேரோட்டமும், புரட்டாசி மற்றும் மார்கழி மாத திருவிழாக்கள் தான் நடைபெறும்.

ஆண்டுக்கு 322 நாட்கள் திருவிழா தான்

ஆண்டுக்கு 322 நாட்கள் திருவிழா தான்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மட்டுமே தினந்தோறும் திருவிழா மாதிரி தான். ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சமாக 10 நாட்கள் ஏதாவது ஒரு திருவிழா நடந்துகொண்டே தான் இருக்கும். அதிலும் சித்திரை மாத தேரோட்டம், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவும் அதிமுக்கியமான திருவிழாக்களாகும். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

தமிழுக்கு முன்னுரிமை

தமிழுக்கு முன்னுரிமை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழால் நடைபெறும் திருவாய்மொழி திருநாள் ஒரு தமிழ் திருநாள் ஆகும். உற்சவரான நம்பெருமாள் திருவீதியுலா வரும் சமயத்தில், அவருக்கு முன்பாக மறை ஓதுவது வழக்கம். மேலும், கோவிலின் சாற்றுமுறை போன்ற நேரங்களில் வடமொழியால் தமிழுக்கும் ஸ்ரீரங்கத்தில் ஏற்றம் தரப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, January 7, 2020, 15:40 [IST]
Desktop Bottom Promotion