Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீங்க இதுல எப்படி தூங்குவீங்கன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு விஷயத்தை சொல்றோம்..
பொதுவாக ஒருவரது குணாதிசயங்களை உடல்மொழியைக் கவனத்தில் கொண்டு அல்லது கண், காது, மூக்கு போன்றவற்றின் வடிவங்களைக் கொண்டு எப்படி சொல்ல முடியுமோ, அதேப் போல் ஒருவர் தூங்கும் நிலையும் ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி கூறும்.

உங்களின் உண்மையான குணாதிசயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள் என்பதை கவனியுங்கள். ஏனெனில் நாம் தூங்கும் ஒவ்வொரு தூக்க நிலையும் ஒரு குறிப்பிட்ட குணாதிசயங்களுடன் தொடர்புடையது. பொதுவாக ஒருவரது குணாதிசயங்களை உடல்மொழியைக் கவனத்தில் கொண்டு அல்லது கண், காது, மூக்கு போன்றவற்றின் வடிவங்களைக் கொண்டு எப்படி சொல்ல முடியுமோ, அதேப் போல் ஒருவர் தூங்கும் நிலையும் ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி கூறும். இப்போது 6 வகையான தூக்க நிலை பற்றியும், அவைக் குறிப்பிடும் குணாதிசயங்கள் என்னவென்பதையும் காண்போம்.

நிலை #1
ஒரு பக்கமாக தூங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமான பெண்களால் தூங்கும் பொதுவான தூக்க நிலையாகும். 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 41% பேர் இந்நிலையில் தூங்குவது தெரிய வந்தது. இந்த நிலையில் தூங்குபவர்கள் மென்மையானவர்கள், கனிவானவர்கள், மிகவும் சென்சிடிவ் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். இவர்கள் வெளியே கடுமையானவர்களாக தெரிந்தாலும், மனதளவில் மிகவும் சென்சிடிவ்வானவர்கள்.

நிலை #2
படத்தில் காட்டப்பட்டவாறு, பக்கவாட்டில் தூங்குவது கவலையின்மை மற்றும் நிதானமான குணத்தைக் குறிக்கிறது. இந்த மாதிரி தூங்குபவர்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகுவார்கள் மற்றும் ஒரு குழுவில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவார்கள். இருப்பினும், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். கணக்கெடுப்பில், 15% மக்கள் இந்த நிலையில் தூங்குகிறார்கள்.

நிலை #3
படத்தில் காட்டப்பட்டவாறான தூக்க நிலையில் 13% மக்கள் தூங்குவது தெரிய வந்தது. இப்படி தூங்குபவர்கள் திறந்த இயல்புடையவர்கள் மற்றும் நட்பாக பழகக்கூடியவர்கள். ஆனால் சில சமயங்களில் இவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பர். மேலும் இந்த மாதிரி தூங்குபவர்கள் சற்று சிக்கலானவர்கள் மற்றும் முடிவுகளை எடுக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்.

நிலை #4
படத்தில் காட்டப்பட்டவாறு கைகள் மற்றும் கால்களை நேராக நீட்டி மல்லாக்க படுப்பவர்கள், வெளிப்படையாக பேசாமல், அமைதியாக இருப்பார்கள் மற்றும் இவர்கள் வலுவான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். மேலும் இவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு விசுவாசமாகவும் உறுதியுடனும் இருப்பார்கள். இவர்களுக்கு தொந்தரவு செய்தால் பிடிக்காது. 8% மக்கள் இம்மாதிரியான நிலையில் தூங்குவது தெரிய வந்துள்ளது.

நிலை #5
குப்புறப் படுத்து தூங்குபவர்கள் தன்னம்பிக்கையானவர்கள், சென்சிடிவ்வானவர்கள் மற்றும் ஆர்வத்துடன் இருப்பார்கள். மேலும் இவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள் மற்றும் அவநம்பிக்கையான சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள். கணக்கெடுப்பில் இந்த நிலையில் 7% பேர் தூங்குவது தெரிய வந்துள்ளது.

நிலை #6
படத்தில் காட்டப்பட்டவாறு மல்லாக்கப் படுத்து கை, கால்களை விரித்து தூங்குபவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க தயாராக இருப்பார்கள் மற்றும் இவர்கள் நல்ல நண்பர்களை உருவாக்குவார்கள். இருப்பினும், இவர்கள் மற்றவர்களின் கவனத்தை எப்போதும் ஈர்க்க விரும்புவதில்லை. கணக்கெடுப்பில், 5% பேர் இந்நிலையில் தூங்குவது தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications