For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...

சிவபெருமானை சமாதானப்படுத்துவது எளிது என்று கூறப்பட்டாலும், சிவபெருமானின் பார்வையில் பின்வரும் பாவங்கள் மன்னிக்க முடியாதவை.

|

சிவபெருமான் கருணையின் உருவகமாக மதிக்கப்படுகிறார். அதே சமயம் இவருக்கு கோபம் வந்தால், யாராலும் தாங்க முடியாது. இந்து மதத்தில், சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை எப்போது திறக்கிறாரோ, அதுவே இந்த உலகத்தின் முடிவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Sins That Lord Shiva Never Forgives According To Shiva Purana

தெய்வங்களிலேயே கோபம் வந்தால் எளிதில் சமாதானமாகக்கூடியவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அவரது உண்மையான பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடன், சரியாக பூஜை செய்து வழிபட்டால், அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்கி, தன்னலமின்றி அவர்களின் கவலைகளை ஏற்றுக் கொள்வார்.

சிவபெருமானை சமாதானப்படுத்துவது எளிது என்று கூறப்பட்டாலும், சிவபெருமானின் பார்வையில் பின்வரும் பாவங்கள் மன்னிக்க முடியாதவை. சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, சிவபெருமானின் கோபத்தைத் தூண்டும் விஷயங்களாக முனிவர்கள் பின்வரும் பாவங்களைப் பற்றி சொல்லியுள்ளார்கள்.

ஒருவரின் செயல்கள், பேச்சு மற்றும் எண்ணங்கள் மூலம் பின்வரும் பாவங்கள் சிவபெருமானால் மன்னிக்க முடியாதவை என முனிவர்கள் தெரிவித்தனர். இப்போது அந்த பாவங்கள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கெட்ட எண்ணங்கள் மற்றும் வெறுப்பு

கெட்ட எண்ணங்கள் மற்றும் வெறுப்பு

நீங்கள் உங்கள் செயல்கள் அல்லது வார்த்தைகளால் ஒருவரை காயப்படுத்துவதும், மற்றவர்களை மோசமாக நடத்துவதும் ஒரு பாவமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் ஒருவரைப் பற்றி தவறாக நினைத்தாலும், அதுவும் பாவம் தான். எனவே யாரைப் பற்றியும் தவறாக நினைக்காதீர்கள். ஒருபோதும் யாரையும் மோசமாக நடத்தக்கூடாது. அவ்வாறு செய்வது வாழ்நாள் முழுவதும் துன்பத்தை உண்டாக்கும்.

பண மோசடி

பண மோசடி

சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவங்களில் இரண்டாவதாக இருப்பது பண மோசடி ஆகும். பணம் தொடர்பாக ஒருவரை ஏமாற்றுவது ஒரு பெரும் பாவமாக கருதப்படுகிறது. ஒருவருக்கு பேராசை அதிகரிக்கும் போது, பலர் தங்களின் சொந்த குடும்பத்தையும், உறவினர்களையும் ஏமாற்றுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களின் கடின உழைப்பினால் பணம் சம்பாதிக்க வேண்டும். ஏமாற்றி பணத்தை சம்பாதிப்பது மிகவும் மோசமான விஷயம். இதைச் செய்வதன் மூலம் சிவனின் கோபத்திற்கு ஆளாவதோடு, மரணத்திற்கு பின் நரகத்திற்கு செல்வீர்கள். எனவே தங்களின் கடின உழைப்பால் பணம் சம்பாதியுங்கள்.

கள்ள உறவு

கள்ள உறவு

சிவபுராணத்தின் படி, ஒருவர் மற்றவரின் மனைவி/கணவரின் மீது ஆசை கொள்வது மிகப்பெரிய பாவம். இப்படிப்பட்டவர்களை சிவபெருமான் ஒருபோதும் மன்னிக்கமாட்டார். சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின் படி, தங்கள் வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமில்லாத ஆண்களும், பெண்களும் பாவத்தை செய்தவர்களாகிறார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேர்மையான உறவு இல்லாத ஆண்களையும் பெண்களையும் சிவன் நிச்சயம் தண்டிப்பார்.

கர்ப்பிணிகளிடம் தவறான நடத்தை

கர்ப்பிணிகளிடம் தவறான நடத்தை

கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் கோபமாக, கர்ப்பிணி பெண்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசுவது பாவமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ஆண்களை சிவபெருமான் எப்போதும் மன்னிக்கமாட்டார். மேலும் ஒரு கர்ப்பிணியிடம் மோசமான பேசுவது வயிற்றில் வளரும் குழந்தையை மோசமாக பாதிக்கிறது. அப்படிப்பட்ட நபரை சிவன் கடுமையாக தண்டிப்பார்.

பொய்யான வதந்திகளை பரப்புவது

பொய்யான வதந்திகளை பரப்புவது

பொய்யான வதந்திகளைப் பரப்புவது, சமூகத்தில் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் ஒருவரின் பின்னால் பேசுவது மிகப்பெரிய பாவம். அத்தகையவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இப்படிப்பட்டவர்களை சிவன் எப்போதும் மன்னிக்கமாட்டார்.

தர்மத்திற்கு எதிராக செயல்படுவது

தர்மத்திற்கு எதிராக செயல்படுவது

தர்மத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் பாவம் செய்தவர்களாவர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட விஷயங்களை செய்பவரை சிவன் தண்டிப்பார். நீங்கள் நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால் இதுப்போன்ற பாவங்களை செய்யாதீர்கள். அதோடு பெண்கள் அல்லது குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகமும், தகாத உறவு கொள்வதும் பாவச் செயல்களில் ஒன்றாகும். இப்படிப்பட்ட பாவத்தை செய்பவர்களை சிவன் எக்காலத்திலும் மன்னிக்கமாட்டார்.

விலங்குகளை கொல்வது

விலங்குகளை கொல்வது

இந்து மதத்தின் படி, புனிதமானதாக கருதப்படும் மற்றும் சாப்பிட தகுதியற்ற விலங்குகளை சாப்பிடுவதற்காக கொல்வது சிவபெருமானின் பார்வையில் மற்றொரு பாவம். ஒரு உயிரை நுகர்வுக்காக கொல்வதை சிவபெருமான் ஒருபோதும் விரும்புவதில்லை. எனவே இந்த மாதிரியான பாவத்தை செய்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sins That Lord Shiva Never Forgives According To Shiva Purana

Here we listed some sins that lord shiva never forgives according to shiva purana. Read on...
Desktop Bottom Promotion