For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பின்னால் இருக்கும் மகத்துவம் என்னவென்று தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை பௌர்ணமி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பும், அடையாளமும் இருக்கிறது.

|

உலகின் மிகவும் பழமைவாய்ந்த கலாச்சாரமாக தமிழர் கலாச்சாரம் கருதப்படுகிறது. ஏனைய கலாச்சாரங்களில் அவர்கள் கோள்களின் நிலையையும், நட்சத்திரங்களையும் ஆராயத் துவங்கியபோது நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகள் வரை கிரகங்களின் நிலைகளை துல்லியமாக கணித்து முடித்திருந்தனர்.

Significance of Tamil Solar month

ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை பௌர்ணமி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பும், அடையாளமும் இருக்கிறது. இந்த பதிவில் தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமிகளின் சிறப்புகள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமி

60 வருட சுழற்சியைக் கொண்ட தமிழ் புத்தாண்டு மாதமான சித்திரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வருகிறது. இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த விழா எமதர்மனின் தலைமை கணக்காளரும் மனிதர்களின் பாவபுண்ணியங்களை பராமரிப்பவருமான சித்திரகுப்தனுக்காக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் இந்த சித்ரா பௌர்ணமி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

தமிழ் மாதத்தின் இரண்டாம் மாதமான வைகாசி துலாம் மற்றும் விருச்சிக ராசியான விசாக நட்சத்திரத்தை பிரதிபலிக்கிறது. வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது. புராணங்களின் படி அசுர சகோதரர்களான சூரபத்மான், சிங்கமுகன் மற்றும் தாரகன் ஆகியோர் தவத்தின் மூலம் பெரும் சக்திகளைப் பெற்றனர். சக்திகளை பெற்ற பின்னர் அவர்கள் தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினர். எனவே அவர்கள் சிவபெருமானிடம் தங்களை காப்பாற்றும் படி உதவிக்கோரினர். சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீச்சுவாலைகள் ஆறு குழந்தைகளாக உருவாகியது. அதன்பின் அவர்கள் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர். பார்வதி தேவி அந்த குழந்தைகளை தழுவியவுடன் அந்த ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறினர். அவர்தான் முருகப்பெருமான் ஆவார். இந்த நாளைத்தான் வைகாசி விசாகம் என்று நாம் கொண்டாடுகிறோம்.

ஆனி அனுஷம்

ஆனி அனுஷம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா இதுவாகும். ஆனி மாதத்தின் பௌர்ணமி நாளன்று அனுஷம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதியாக எழுந்தருளியிருக்கும் சிவன் மற்றும் பார்வதி தேவி இந்த நாளன்று அலங்கரிப்பட்ட தேரில் பவனி வருவார்கள்.

MOST READ: இந்த 5 ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...!

ஆடி பூரம்

ஆடி பூரம்

தமிழ் மாதத்தில் நான்காம் மாதமான ஆடி மாதம் பெண் கடவுள்களுக்கான மாதமாக கருதப்படுகிறது. பெண்கள் கடவுளை வழிபட இது சிறந்த மாதமாக இருக்கிறது குறிப்பாக வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாதத்தின் பௌர்ணமியானது ஆடி பூரமாக அனைத்து கோவில்களிலும் வழிபடப்படுகிறது. மக்களை பாதுகாப்பதற்காக சக்தி தேவி இந்த நாளில் வருவதாக நம்பப்படுகிறது. இந்த நாளானது வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் திருவிழாக்களுக்கு மட்டுமின்றி திருமணத்திற்கும் மிகவும் சிறப்பான மாதமாகும். பிராமணர்களுக்கு இது மிகவும் புனிதமான நாளாகும், கேரள மக்களின் மிகமுக்கிய திருவிழாவான ஓணமும் இந்த காலகட்டத்தில்தான் கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ராக்கி பூர்ணிமா, கஜாரி நவமி, நரியால் பூர்ணிமா, பவித்ரோப்பனா என பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி பூரட்டாதி

புரட்டாசி பூரட்டாதி

ஆறாவது மாதமான இந்த மாதத்தில் எந்த திருமண கொண்டாட்டங்களும் இருக்காது, இது முழுக்க முழுக்க கடவுள் வழிபாட்டிற்கான மாதமாகும். இந்த மாதத்தின் பௌர்ணமியானது பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வரும். இந்த மாதத்தின் சனிக்கிழமைகள் மிகவும் முக்கியமானவையாகும். திருப்பதி பிரமோர்த்சவம் இந்த மாதத்தில்தான் நடைபெறும். இந்த காலகட்டத்தில் நமது முன்னோர்கள் நம்மை பார்க்க வருவார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.

ஐப்பசி அஸ்வினி

ஐப்பசி அஸ்வினி

மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி இந்த மாதத்தில்தான் வரும். இந்த மாதத்தின் பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தில் வருகிறது, இந்த நாளன்று அனைத்து சிவத்தலங்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானின் அன்னாபிஷேகத்தை பார்ப்பது மிகவும் புண்ணியமான காரியமாகும். இது சிவபெருமானுக்கு நன்றி கூறும் வகையில் செய்யப்படுவதாகும்.

MOST READ: இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா?

கார்த்திகை பௌர்ணமி

கார்த்திகை பௌர்ணமி

கார்த்திகை தீபத்திருவிழாவானது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் இது முக்கியமான விழாவாகும். பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்த இந்தியாவில் இதேநாளை மற்ற மொழி மக்கள் வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள். சிவபெருமான் தீப்பிழம்பாக மாறிய நாளைதான் நாம் மகாதீப நாளாக கொண்டாடுகிறோம்.

மார்கழி பௌர்ணமி

மார்கழி பௌர்ணமி

தனுசு ராசியில் சூரியன் இருக்கும் காலத்தை தனுர் மாதம் அல்லது மார்கழி மாதம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். இது தெய்வீக வழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்னால் வரும் பிரம்ம முகூர்த்தம் விஷ்ணுவை வழிபடுவதற்கான மிகச்சிறந்த காலமாகும். இந்த நேரத்தில் திருமாலிடம் வேண்டும் அனைத்தும் அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த மாதத்தின் பௌர்ணமியானது மிருகசீரிஷம் அல்லது திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இவை இரண்டுமே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்களாகும். இந்த மாதத்தில் வரும் மற்றொரு முக்கியான விழா வைகுண்ட ஏகாதசி ஆகும்.

தைப்பூசம்

தைப்பூசம்

குடும்பத்தில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும், கொண்டாட்த்தையும் கொண்டு வரும் மாதமாக தை மாதம் கருதப்படுகிறது. பொங்கல் பண்டிகையுடன் கோலாகலமாக தொடங்கும் தை மாதத்தில் வரும் மற்றொரு முக்கிய பண்டிகை தைப்பூசம் ஆகும். முருகப்பெருமான் தாரகாசுரனை வதைத்த நாள்தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் எப்பொழுதும் முழுநிலவு நாள் அன்றுதான் வரும்.

மாசி மகம்

மாசி மகம்

உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கு மாசி மாத பௌர்ணமி தினமான மாசி மகம் மிகவும் புனிதமான நாளாகும். ஜோதிட சாஸ்திரங்களில் இருக்கும் இருபத்தேழு நட்சத்திரங்களில் இது மிகவும் முக்கியமான நட்சத்திரமாகும். நமது ஆன்மாவை தூய்மைப்படுத்தும் காலகட்டமாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் இராஜயோகம் வாய்ந்தவர்களாக கருதப்படுவார்கள். மாசி மாகம் பௌர்ணமியுடன் தொடர்புடைய ஏராளமான மற்றும் செழிப்பின் நன்மைகளையும், மாகா நட்சத்திரத்தின் கம்பீரமான தரத்தையும் இணைத்து, சக்தியையும் சக்தியையும் பெற ஒரு தனித்துவமான வாய்ப்பை அளிக்கிறது.

MOST READ: உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...!

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

பங்கூனி உத்திரம் என்பது இந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். பங்குனி மாத முழுநிலவானது உத்திர நட்சத்திரத்தில் வரும். பங்குனி உத்திரத்தின் சிறப்பு என்னவென்றால் இதுதான் சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாகும். மேலும் முருகன் மற்றும் தெய்வயானை மட்டும் ரங்கமன்னார் - ஆண்டாளின் திருமணமும் இந்த நாளில்தான் நடைபெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance of Tamil Solar Month With Star Linked On Purnima Day

Find out the beauty of Tamil Solar months with star linked on purnima day.
Story first published: Wednesday, September 18, 2019, 12:30 [IST]
Desktop Bottom Promotion