Just In
- 4 min ago
சாப்பிட்டவுடன் மார்பில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் போதும்...!
- 2 hrs ago
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்!
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (25.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- 1 day ago
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
Don't Miss
- News
100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..!
- Movies
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- Finance
விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..!
- Sports
நிலாவுலதான் மிதந்துக்கிட்டு இருக்கேன்... இந்தியாவோட வெற்றி அந்தளவுக்கு சந்தோஷம் கொடுத்துருக்கு!
- Automobiles
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
ஒருவரின் உடலில் தொப்புள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் கருவில் இருக்கும் காலத்தில் இருந்தே தொப்புள் முக்கியப்பங்கை வகிக்கிறது. நமது உடலில் இருக்கும் பல பாகங்கள் நமது ஆளுமையை பற்றி கூறுவதாக உள்ளது. அதில் நமது தொப்புள் மிகவும் முக்கியமானதாகும்.
தொப்புள் வடிவங்களின் ஆய்வு என ஓம்பலோமான்சி அறியப்படுகிறது. ஒரு பெண்ணின் தொப்புளின் வடிவத்தையும் அளவையும் பார்க்கும்போது, ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பதையும் இந்த அறிவியல் தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி நமது குணநலன்கள் மட்டுமின்றி நம்மைப் பற்றிய பல உண்மைகளை கூறக்கூடும். இந்த பதிவில் உங்கள் தொப்புளின் வடிவம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

வட்ட வடிவிலான தொப்புள்
தொப்புள் வட்ட வடிவில் இருந்தால் அவர்கள் நம்பிக்கையான ஆளுமையை கொண்டிருப்பதற்கான அறிகுறி ஆகும். அனைத்திலும் இருக்கும் நல்ல விஷயத்தை பார்க்கும் நல்ல குணம் வாய்ந்தவர்கள் இவர்கள். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், மற்றவர்களுடன் சுமூகமான உறவை பராமரிப்பதிலும் இவர்கள் சிறந்தவராக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் துணையிருக்கும்.

பெரிய தொப்புள்
பெரிய மற்றும் ஆழமான தொப்பை தொப்புள் இருந்தால், அது அவர்கள் தாராள ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தாராள மனப்பான்மைக்கு எல்லை என்பதே இருக்காது. அனைத்து வயதினருடன் சமமாக பழகும் குணம் கொண்டவர். மேலும் இவர்களின் புத்திக்கூர்மை வயது அதிகரிக்க அதிகரிக்க மேலும் கூர்மையாகும். இவர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள்.

சிறிய தொப்புள்
ஆழமற்ற மற்றும் சிறிய தொப்புள் ஒருவரின் ஆளுமையின் இருண்ட பரிமாணத்தைக் குறிக்கிறது. இவர்கள் ரகசியங்களை பாதுகாப்பதில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை இவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவர்களிடம் இருக்கும் ரகசியங்களையும், இவர்களின் இருள் பக்கத்தையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது.

புடைப்பான தொப்புள்
நீண்ட புடைப்பான தொப்புள் கொண்டவர்கள் வலிமையான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்திற்கும் பிடிவாதம் பிடிப்பவர்களாக இருப்பார்கள். தங்கள் கருத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். இவர்களுக்கு பொருத்தமான காதல் துணை கிடைப்பது மிகவும் கடினமாகும், ஆனால் கிடைத்து விட்டால் அந்த உறவு இறுதிவரை நிலைத்திருக்கும்.
MOST READ: சிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது? புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா?

மேல்நோக்கிய தொப்புள்
இது தொப்புளின் சிறந்த வடிவமாகும். இது ஆரோக்கியமான பிறப்பு மற்றும் ஆரோக்கியமான மனதின் அடையாளம். இவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியானவராக இருப்பார்கள், ஆற்றல் மிக்கவர்கள், சுறுசுறுப்பானவராக இருப்பார்கள். இவர்களின் உற்சாகம் தொற்றுநோயாகும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காக ஒரு இலட்சியத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள்.

கீழ்நோக்கிய தொப்புள்
இந்த வகை தொப்புள் இருந்தால் அது உடல் ரீதியாக நீங்கள் எதிர்கொள்ளும் குறைந்த ஆற்றல் மட்டங்களின் அறிகுறியாகும். இவர்கள் உடல்ரீதியாக வேலை செய்வதைக் காட்டிலும் மூளையை பயன்படுத்தி வேலை செய்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். மற்றவர்களிடம் நீங்கள் சோம்பேறி என்று பெயர் எடுக்கலாம் ஆனால் உங்களின் புத்திசாலித்தனத்தை பாராட்டதவர்கள் யாரும் இருக்க முடியாது.

முட்டைவடிவ தொப்புள்
தொப்புள் முட்டை வடிவில் இருந்தால் அவர்கள் அதிவேகத்தன்மை மற்றும் கூடுதல் உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையவர். இவர்கள் எப்பொழுதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள், இவர்களுக்கு எதுவாக இருந்தாலும் விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும். எனவே இவர்கள் புதிய விஷயங்களை எப்போதும் தேடிக்கொண்டே இருப்பார்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் காயப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

அகலமான தொப்புள்
இந்த வகை தொப்புள் உள்ளவர்கள் எப்போதும் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பார்கள். அதனால் பெரும்பாலும் மற்றவர்களை நம்பமாட்டார்கள். மறுபுறம், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் அனுமதிக்கும் நபர்கள், உலகை உங்களுக்கு அர்த்தப்படுத்துகிறார்கள். விசுவாசமும் நம்பிக்கையும் இவர்கள் ஆளுமையின் பிரதான குணங்களாகும். மற்றவர்களுடனான இவர்கள் அணுகுமுறை மற்றவர்கள் இவர்களை நடத்தும் முறையால் முற்றிலும் தீர்மானிக்கப்படுகிறது.

தலைகீழ் Y வடிவ தொப்புள்
இது ஒரு அரிதான தொப்புள் வடிவமாகும். இது உங்கள் தொப்புளின் வடிவம் என்றால், நீங்கள் திரைக்குப் பின்னால் இருந்து அனைத்து வேலைகளையும் செய்யுங்கள். உங்கள் வலிமையை நீங்கள் நன்கு அறிந்திருப்பதால், நீங்கள் புகழையோ பெருமையையோ எதிர்பார்க்காத ஒரு வகையான நபர். வெற்றி என்பது உங்களுக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் மகிழ்ச்சியும் வழங்குவதாகும்.