For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி பெயர்ச்சி 2020: சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா?

சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.

|

சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை தொடங்குகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி, மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி. கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி. இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய துலாம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சனி சாந்தி பூஜை செய்ய வேண்டும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.

Sani Peyarchi 2020 Pariharam Temples For 12 Zodiac Signs

இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் தொழில் சனி, ரிஷபம் பாக்ய சனி, சிம்மம் ருண ரோக சத்ரு சனி, கன்னி புண்ணிய சனி, விருச்சிகம் தைரிய சனி, மீனம் லாப சனி வருவதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம். அவ்வப்போது சனிபகவானை பார்த்து நல்லது நடப்பதற்கு நன்றி சொல்லி விட்டு வாருங்கள்.

MOST READ: இந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா?

தமிழ்நாட்டில் சனிபகவானுக்கு பல தலங்கள் உள்ளன. திருப்பைஞ்சீலி திருச்சி அருகே உள்ளது. இந்த ஆலயத்தில் எமனுக்கு தனி சன்னிதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம். காரணம் சனிபகவான் எமனின் சகோதரர் என்பதால் சகோதரரை வழிபட சனிபகவானின் அருள் கிடைக்கும். இதேபோல சனி பகவானின் அருள் நிறைந்த ஆலயங்களைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனிபகவான் வழிபட்ட தலம்

சனிபகவான் வழிபட்ட தலம்

திருவாதவூர் சனீஸ்வர பகவான் வழிபட்ட திருத்தலமாகும். இறைவன் வேதபுரீஸ்வரர், அம்பாள் வேதநாயகி ஆகியோரை வழிபட்டு சனீஸ்வர பகவான் தன் வாதத்தைப் போக்கி கொண்டார். சனியின் வாத நோய் குணமானதால்தான் இந்த ஊருக்குத் திருவாதவூர் எனப் பெயர் வந்தது. எனவே சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனிபகவான் அருள்பெற்ற இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற முடியும். திருநெல்லிக்காவல் ஒரு அற்புதமான திருத்தலமாகும். சனி பகவானே இறைவனை வழிபட்ட பெருமை மிக்க திருத்தலம் இத்திருத்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, சனி பகவானின் அருள் கிட்டும்.

சனி சிக்னாபூர்

சனி சிக்னாபூர்

மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ளது சனி சிங்கனாப்பூர் கோவில். ஷீரடி செல்லும் பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்து விட்டு வருவார்கள். கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில் தான் சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கும் இவரை பார்க்க சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் கூடுகின்றனர். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுகிறார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

தொழில் சனி மேஷம்

தொழில் சனி மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் சனி காலம் தொடங்கும் காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்கலாம். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால், மேலும் சிறப்பானப் பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம்.

பாக்ய சனி ரிஷபம்

பாக்ய சனி ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பாக்யசனி காலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

அஷ்டம சனி மிதுனம்

அஷ்டம சனி மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பிக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது.

கண்டச்சனி கடகம்

கண்டச்சனி கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம் என்று கவலை வேண்டாம். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். புதன்கிழமைகளில் பெருமாள், மஹாலட்சுமி, சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

சத்ரு ஸ்தான சனி சிம்மம்

சத்ரு ஸ்தான சனி சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

பூர்வ புண்ணிய சனி கன்னி

பூர்வ புண்ணிய சனி கன்னி

கன்னி ராசியில் புண்ணிய சனி காலம் என்பதால் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

அர்த்தாஷ்டம சனி துலாம்

அர்த்தாஷ்டம சனி துலாம்

துலாம் ராசியில் அர்த்தாட்ஷடம சனி என்பதால் வாலாஜாபேட்டை பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும். வேலூர் மாவட்டம், பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்குச்சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தைரிய சனி விருச்சிகம்

தைரிய சனி விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு ஏழரை சனி முடிகிறது. பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அமைந்திருக்கும், அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

பாத சனி தனுசு

பாத சனி தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு பாதசனி காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வர சிறப்பான பலன்களைப் பெறலாம். சனீஸ்வர பகவான், சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

ஜென்ம சனி மகரம்

ஜென்ம சனி மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி காலம் என்பதால் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம்.

விரைய சனி கும்பம்

விரைய சனி கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரரை வணங்கலாம். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

லாப சனி மீனம்

லாப சனி மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனி காலம் என்பதால் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sani Peyarchi 2020 Pariharam Temples For 12 Zodiac Signs

In this article, we are given sani peryarchi 2020 pariharam temples for 12 zodiac signs. Read on...
Story first published: Wednesday, January 22, 2020, 10:59 [IST]
Desktop Bottom Promotion