Just In
- 18 min ago
இந்த நேரத்துல நீங்க பல் துலக்குனா... நீண்ட ஆயுளோட ஆரோக்கியமா இருக்கலாமாம் தெரியுமா?
- 42 min ago
இந்த 5 ஆணவக்கார ராசிக்காரங்க அவங்க தவறை எப்பவும் ஒத்துக்க மாட்டாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 51 min ago
நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும் தெரியுமா?
- 3 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
Don't Miss
- Movies
எங்கேயும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை.. அவர் தான் எப்போதும் தலஏ கே.. தியாகராஜன் எமோஷனல்!
- News
"தினசரி 30 பேர் பலாத்காரம் செய்வார்கள்! அம்மா பிளான் போட்டு தருவார்! அதிலும் என் அப்பா" சிறுமி கதறல்
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Technology
விரைவில் தமிழக ரேஷன் கடைகளிலும் நீங்கள் எதிர்பார்த்த 'இந்த" சேவை கிடைக்கும்: சூப்பர் தகவல்.!
- Sports
"எப்போதும் இதே வேலை தான்.." கோலியுடன் அப்படி என்னதான் பிரச்சினை.. பேர்ஸ்டோ தந்த விளக்கம்!
- Finance
ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?
- Automobiles
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு! படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள்ல டெலிவரி கொடுத்திருக்காங்க!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த ருத்ராட்சத்தை அணிந்தால் அதிர்ஷ்டமானதா இருக்கும் தெரியுமா?
ருத்ராட்சம் மிகவும் புனிதமானது. இந்து நம்பிக்கைகளின் படி, ருத்ராட்சமானது சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது. ஆகவே இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சிவ பக்தர்கள் இந்த ருத்ராட்சத்தை எப்போதும் அணிந்திருப்பார்கள். ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதன் மூலம் சிவபெருமானின் அருள் எப்போதும் அவருக்கு இருக்கும். மேலும் ருத்ராட்சமானது அனைத்து தெய்வங்கள் மற்றும் நவகிரகங்களுடன் தொடர்புடையது.
ருத்ராட்சத்தை அணியும் போது மிகவும் சுத்தமாக இருப்பதோடு, அதை வணங்கிய பின்னரே அணிய வேண்டும். அதுவும் ஒருவர் ருத்ராட்சத்தை ராசிப்படி அணிவது இன்னும் நல்லது. இதனால் இன்னும் அதிக நற்பலன்கள் கிடைப்பதோடு, அதிர்ஷ்டம் கூடவே இருக்கும். இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒரு முக ருத்ராட்சத்தை அணிவது நல்லது. இதனுடன், மூன்று முகம் அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! உங்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடப்பதில்லையா? அப்படியானால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதற்கு இந்த ராசிக்காரர்கள் நான்கு முகம், ஆறு முகம் மற்றும் 14 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் நான்கு, ஐந்து அல்லது 13 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவது நல்லது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் உடனிருக்கும்.

கடகம்
ஜோதிடத்தின் படி, கடக ராசிக்காரர்கள் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது நல்லது. இதனால் வாழ்வில் இருந்த தடைகள் நீங்கி, வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் ஒன்று, மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவது நல்லது. இதனால் அதிர்ஷ்டம் கூடவே இருந்து, அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நான்கு, ஐந்து அல்லது 13 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும் மற்றும் சிவபெருமானின் அருளும் கிடைக்கும்.

துலாம்
ஜோதிடத்தின் படி, துலாம் ராசிக்காரர்கள் நான்கு, ஆறு அல்லது 13 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே நற்பலன்கள் கிடைக்க இந்த ருத்ராட்சத்தை அணியுங்கள்.

விருச்சிகம்
வாழ்வில் சந்தோஷமும் செழிப்பும் நிலைத்திருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், விருச்சிக ராசிக்காரர்கள் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஒன்று, மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் சிவபெருமானின் அருள் கிடைத்து, வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் நான்கு, ஆறு அல்லது 14 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிந்தால் சிவபெருமானின் பரிபூர்ண அருளைப் பெறலாம். இந்த மூன்று வகையான ருத்ராட்சம் தான் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

கும்பம்
ஜோதிடத்தின் படி, கும்ப ராசிக்காரர்கள் நான்கு, ஆறு அல்லது 14 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும். இதன் மூலம் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அமைதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ விரும்பினால், மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிவதே நல்லது. நீங்கள் சிவ பக்தராக இருந்தால், இந்த வகை ருத்ராட்சத்தை அணிந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.