Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மோதிர விரல் இப்படி இருந்தா.. அவங்க கையில பணம் அதிகம் சேருமாம்.. உங்க விரல் எப்படி இருக்கு?
இன்று நாம் பார்க்கப் போவது மோதிர விரலைப் பற்றி தான். அதுவும் மோதிர விரலானது ஒருவரது நிதி நிலையைப் பற்றி கூறும் என்பது தெரியுமா? இப்போது உங்கள் மோதிர விரல் உங்களின் நிதி நிலையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவரின் எதிர்காலம், குணாதிசயங்கள் மற்றும் பல விஷயங்கள் கணித்து கூறப்படுகின்றன. அந்த வகையில் சாமுத்ரிகா சாஸ்திரத்தில் ஒருவரது கண்கள், காது, மூக்கு, உதடு, நெற்றி, விரல்கள் போன்றவற்றின் அமைப்பு மற்றும் வடிவத்தைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் மற்றும் குணாதியங்கள் கூறப்படுகின்றன.

இதுவரை நாம் மூக்கின் வடிவம், கண்களின் நிறம், முக அமைப்பு போன்றவற்றைப் பற்றி பார்த்தோம். ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது மோதிர விரலைப் பற்றி தான். அதுவும் மோதிர விரலானது ஒருவரது நிதி நிலையைப் பற்றி கூறும் என்பது தெரியுமா? இப்போது உங்கள் மோதிர விரல் உங்களின் நிதி நிலையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.

மோதிர விரலில் செங்குத்து கோடு
நடுவிரலுக்கும், சுண்டுவிரலுக்கும் நடுவே உள்ள விரல் தான் மோதிர விரல் என்று அழைக்கப்படும். சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரது மோதிர விரலின் அடிப்பகுதியில் இருந்து ஒரு செங்குத்தான கோடு விரலின் நுனி வரை சென்றிருந்தால், அத்தகையவர்களின் நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். மேலும் இத்தகையவர்கள் குறுகிய காலத்தில் சமூகத்தில் முன்னேற்றத்தைக் கண்டு, ஒரு நல்ல அந்தஸ்துடன் வாழ்வார்கள். மொத்தத்தில் இவர்கள் சிறந்த தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

நீளமான மோதிர விரல்
சாமுத்திகா சாஸ்திரத்தின் படி, மோதிர விரலானது ஆள்காட்டி விரலை விட நீளமாக/உயரமாக இருந்தால், அத்தகையவர்கள் தங்களின் கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மேலும் இவர்கள் யாரிடமும் தலைவணங்க விரும்பமாட்டார்கள். எவ்வளவு கஷ்ட காலமாக இருந்தாலும், யாருக்கு அடிபணியமாட்டார்கள். ஆனால் இவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை அதிகம் நேசிப்பார்கள்.

ஆள்காட்டி விரலுக்கு சமமான மோதிர விரல்
ஒருவரது மோதிர விரல் ஆள்காட்டி விரலுக்கு சமமாக இருந்தால், அத்தகையவர்கள் தைரியமாகவும், அச்சமற்றவராகவும் இருப்பார்கள். பணத்தை அதிகம் செலவழிப்பார்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். தங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்ய விரும்புவார்கள். இவர்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்க விரும்பமாட்டார்கள். தங்களுக்கு என்று தனி இலக்கை கொண்டு வாழ்வார்கள். வாழ்க்கையில் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி பெறுவார்கள். அதே வேளையில் இவர்கள் திறமையான பேச்சாளர்கள்.

சிறிய மோதிர விரல்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, மோதிர விரல் ஆள்காட்டி விரலை விட சிறியதாக இருப்பது நல்லதல்ல. இத்தகையவர்கள் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். அதோடு இவர்கள் மற்றவர்களை அதிகம் ஏமாற்றுவார்கள். அதன் விளைவாக அவதூறுகளையும் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
