For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜமரியாதை கிடைக்கும் ராஜயோக அமைப்பு எந்த ஜாதகருக்கு இருக்கும் தெரியுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையாலும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் சம்மந்தம் பெறுவதாலும், ஒரு கிரகம் குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் இருந்தாலும் ஏற்படக்கூடிய விளைவுகள

|

நமக்கு செல்வம், செல்வாக்கு, பதவி, புகழ் கிடைக்க எப்படிப்பட்ட கிரக அமைப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை பல ஜோதிடச் சுவடிகள் நுட்பமாக சொல்லி இருக்கின்றன. ஜாதக அலங்காரம், பல தீபிகை, சந்திர காவியம், பிருகத் ஜாதகம் போன்ற பல வகையான நூல்களில் இதற்கான மகாராஜா யோகம், சக்கரவர்த்தி யோகம், சிங்காதன யோகம் என பல நூற்றுக்கணக்கான யோக அமைப்புகள் காணப்படுகின்றன. அதன் அடிப்படையில் நம் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையாலும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் சம்மந்தம் பெறுவதாலும், ஒரு கிரகம் குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் இருந்தாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் யோகம் எனப்படும். இந்த யோகம், சுபயோகம், அவயோகம் என்று இரண்டு வகைப்படும். பெரும்பாலான ஜாதகங்களில் சுபயோகங்கள் ராஜ யோகங்கள் இருந்தும் அந்த ஜாதகர் வாழ்க்கையில் அடி மட்ட நிலையில் இருப்பார். இதற்குக் காரணம் அந்த யோகங்கள் பங்கமாகியிருக்கும்.

Raja Yoga Planets Combination in Astrology

யோகம் தரும் கிரகங்களுக்கு, பகை கிரகங்களின் சேர்க்கை யோகத்தை பங்கப்படுத்தும். யோகம் தரும் கிரகங்கள் 6, 8, 12 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தால் யோக பங்கம். முக்கியமான வித) யோகம் தரும் கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி பாவகப்படி 6, 8, 12 மறையக்கூடாது.

யோகம் தரும் கிரகங்கள் பகை, நீச்சம் பெற்றால் யோக பங்கம். ராசிக்கட்டத்தின்படி யோகம் தரும் கிரகங்கள் பாவகச் சக்கரத்தின்படி பாவக மாற்றம் அடைந்திருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகம் ராசிக் கட்டத்தில் நிஷ்பலம் பெற்றிருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள் கிரகண தோஷம் அடைந்தோ, அஸ்தமனம் அடைந்தோ இருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள் கிரக யுத்தத்தில் இருந்தால் யோக பங்கம்.

லக்கினம், லக்கினாதிபதி, ஐந்தாமிடம் ஒன்பதாம் இடம் பழுதடைந்து பலவீனமாக இருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள் பாப கர்தாரி யோகத்தில் இருந்தாலும் யோக பங்கமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராஜயோகம் தரும் கிரகங்கள்

ராஜயோகம் தரும் கிரகங்கள்

3600 யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இதில் முதலாவதாக வருவது பஞ்ச மஹா புருஷ யோகம். இந்த யோகம் பஞ்ச மஹாபுருஷர்களால் ஏற்படக்கூடியது. நவகிரகங்களில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இவ்வைந்து கிரகங்களுக்கும் பஞ்ச மஹாபுருஷர்கள் என்று பொதுவாக ஒரு பெயர் உண்டு. இந்த யோகத்தை, செவ்வாயால் ஏற்படக்கூடிய ருச்சக யோகம். புதனால் ஏற்படக்கூடிய பத்திரை யோகம். குருவால் ஏற்படக்கூடிய ஹம்ச யோகம், சுக்கிரனால் ஏற்படக்கூடிய மாளவியா யோகம் சனியால் ஏற்படக்கூடிய சச யோகம், என்று 5 வகையாக பிரிக்கலாம். இது தவிர ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கனின் நிலையை பொருத்து சில முக்கிய யோகங்களை பட்டியலிடுகிறோம் உங்க ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.

MOST READ: பொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...

சுப மங்கள யோகம்

சுப மங்கள யோகம்

ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி உச்சம், ஆட்சி, கேந்திரம், திரிகோணம் போன்ற அமைப்பில் இருப்பது ஐஸ்வர்யமாகும். லக்னத்தில் 4, 5, 9க்கு உடைய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் ராஜமரியாதை சுப கீர்த்தி யோகம் உண்டு. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி இதில் யாராவது ஒருவர் பார்ப்பது சுபமங்கள யோகமாகும்.

குரு சுக்கிரன் சேர்க்கை

குரு சுக்கிரன் சேர்க்கை

பிரகஸ்பதி எனப்படும் தேவகுரு வியாழனும், அசுர குரு எனப்படும் சுக்கிரனும் சேர்ந்து இருப்பது திடீர் தன பிராப்தத்தைத் தரும். ஆதாயம் லாபம் எனப்படும் 11ம் இடமும், 2ஆம் இடமும் சம்பந்தப்பட்டால் பொன், பொருள், சேர்க்கை அதிகம் ஏற்படும்.

நாடாளும் யோகம்

நாடாளும் யோகம்

குரு, சந்திரன் கடக ராசியில் இருந்தால் மந்திரி நாடாளும் யோகம் வரும். சந்திரன், புதன் கன்னி ராசியில் இருந்தால் தனதான்ய சம்பத்து உடையவர்.

லக்னத்தில் சூரியன் அல்லது செவ்வாய் உச்சம் பெற்று கடகத்தில் சந்திரன் இருந்தால் பூமி யோகம், அரச யோகம்.

லட்சுமி யோகம்

லட்சுமி யோகம்

ராசியில் நீச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்து தசா வந்தால் நீச பங்க யோக அம்சமாகும். ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னம், நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது ஐந்து, ஒன்பது. சில நூல்களில் லக்னம் கேந்திரத்தில் இருக்கும், த்ரிகோணத்திலும் இருக்கும். கேந்திரங்களுக்குரிய கிரகங்களும், த்ரிகோணத்திற்குரிய கிரகங்களும் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்றால் லட்சுமி யோகம்.

விமல யோகம்

விமல யோகம்

வளர்பிறை சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து பூமி பாக்ய ஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்தால்: ரியல் எஸ்டேட், செங்கல், மணல், கட்டிட கட்டுமான பணிகள், விவசாய வருமானம் என பூமி மூலம் லாபம் அடைவார்கள். 14. 3, 6, 8, 12க்குரியவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும், 6க்குடையவன் 12ல், 12க்குடையவன் 6ல் இருந்தாலும், 12ஆம் அதிபதி. 12ல் இருந்தாலும் விமல யோகம். கணக்கிட முடியாத செல்வ வளங்கள் வந்து சேரும்.

MOST READ: மகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்...

அறிவு ஆற்றல் புகழ்

அறிவு ஆற்றல் புகழ்

ஜென்ம லக்னத்தில் உச்சம், ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தாலும், லக்னத்தைப் பார்த்தாலும் புகழ், கீர்த்தி, அதிகார பதவி கிட்டும். குரு, செவ்வாய், சூரியன் மூவரும் ஜாதகத்தில் மிக பலமாக இருந்தால் அதிகார பதவிகள் கிடைக்கும், அறிவு, ஆற்றலால் புகழ் உண்டாகும்.

வசிய யோகம்

வசிய யோகம்

புதன், சுக்கிரன் பலமாக அமைந்து, இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பலமாக இருந்தால் வித்வான், கலை, இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனத்தில் பாண்டித்யம் உண்டாகும். சந்திரனுக்கு கேந்திரமான 7ஆம் இடத்தில் சம சப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது சௌந்தர்ய யோகம், வசிய யோகம். பெண்கள் மூலம் தனம் சேரும்.

யோகமான அமைப்பு

யோகமான அமைப்பு

லக்னம் முதல் தொடர்ந்து 5 அல்லது 6 வீடுகளில் கிரகங்கள் இடைவிடாமல் இருப்பது யோக அம்சமாகும். லக்னத்திற்கு 4, 5, 6, 7, 8 என்று இருக்கலாம். லக்னத்திற்கு எந்த இடத்தில் இருந்து கிரகம் ஆரம்பமாகிறதோ அந்த வீட்டிலிருந்து தொடர்ச்சியாக கிரகங்கள் இருப்பது சிங்காதன யோகமாகும். வாழ்க்கையில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும்.

சக்ரவர்த்தி யோகம்

சக்ரவர்த்தி யோகம்

சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் இருப்பது முத்ரிகா யோகம். சந்திரனுக்கு 6, 7, 8ல் கிரகங்கள் தொடர்ச்சியாக அமைவது சந்திராதி யோகம். இதனால் நற்கீர்த்தி, சக்கரவர்த்தி யோகம்.

தர்ம கர்மாதிபதிகள் எனப்படும் 9, 10க்குடையாளர்களுடன் லாபாதிபதி எனும் 11ஆம் அதிபதி சம்பந்தப்பட்டால் சுய சம்பாத்தியத்தின் மூலம் பெரும் தனம் சேரும். தர்ம ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள் அமைக்கும் பாக்கியம் உண்டு. லக்னத்திற்கு 9, 10க்குரியவர்கள் அல்லது சந்திரனுக்கு 9, 10க்குரியவர்கள் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் பூமி, பொன், பொருள் உண்டு. கோவில் திருப்பணிகள், தர்மஸ்தாபனம் அமைத்தல், அரச போக வாழ்க்கை கிடைக்கும். லக்னத்திற்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சனி சேர்ந்து இருந்தால் ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பார்.

ராஜயோக அமைப்பு

ராஜயோக அமைப்பு

லக்னம், நான்கு, எட்டாம் வீடுகளில் சூரியனும், புதனும் சேர்ந்து இருப்பது ராஜயோக அமைப்பாகும். கல்வியில் புகழ் அடைவார்கள், கணக்கு துறையில் சாதனை படைப்பார்கள். பொதுவாக 6, 8, 12க்குடையவர்கள், நீச்ச கிரகங்கள், சுப ஸ்தானங்களாகிய 2, 5, 7, 9, 11 போன்ற வீடுகளில் சம்பந்தம் பெறாமல் இருப்பது சிறப்பான ராஜயோகமாகும்.

MOST READ: உங்க அந்தரங்க வாழ்க்கை பற்றி கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

சுநபா யோகம் அநபா யோகம்

சுநபா யோகம் அநபா யோகம்

சந்திரனில் இருந்து இரண்டாவது வீட்டில் சூரியன் தவிர கிரகங்கள் இருந்தால் சுநபா யோகம். அரசன் போல வாழ்க்கை அமையும் புத்திமான் செல்வந்தர் கீர்த்தி உடையவர் சொந்தமாக செல்வம் சேர்ப்பார். சந்திரனில் இருந்து 12வது வீட்டில் கிரகங்கள் இருந்தால் அநபா யோகம்.

வசுமதி யோகம்

வசுமதி யோகம்

உப ஜெய ஸ்தானங்களில் கிரகங்கள் இருந்தால்,யாரையும் நம்பி வாழ மாட்டார். எப்போதும் செல்வந்தராக இருப்பார். லக்னம் அல்லது சந்திர லக்னத்தில் இருந்து 10 ஸ்தானத்தில் சுபர் இருந்தால் அழியாத புகழ் பெறுவார் அப்பழுக்கற்ற குணசாலியாக இருப்பார் வசதியாக வாழ்வார்.

மாளவியா யோகம்

மாளவியா யோகம்

குரு கேந்திரத்தில் அது தனது ஆட்சி வீடு அல்லது உச்ச வீடாக இருக்க வேண்டும். அவரது காலில் மச்சம், சங்கு சக்கரம், மச்சம் அங்குசம் சின்னங்கள் இருக்கும். அவர் மனதிலும் செயலிலும் ஒழுக்கமானவர். சுக்கிரன் தனது ஆட்சி வீடு உச்ச வீடு கேந்திரத்தில் இருந்தால் அது மாளவியா யோகம் பெறுகிறது. நன்றாக வளர்ந்த தேகம். மன உறுதி படைத்தவர். செல்வந்தர். மனைவி மக்களுடன் சந்தோசமாக செல்வாக்குடன் இருப்பார். அதிக புத்திசாலி, வீடு மனை வண்டி வாகனம் என வசதியாகவும் புகழுடனும் வாழ்வார்.

துருதுரா யோகம்

துருதுரா யோகம்

சந்திரனுக்கு முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன் ராகு கேதுவைத் தவிர இதர கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். வண்டி வாகனங்கள் கிடைக்கும். சுகமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள்.

MOST READ: நல்லவர்களுக்கு நல்லவர் சனிபகவான் - கைவிடாமல் காப்பாற்றுவார்

யோக பங்கம்

யோக பங்கம்

ஜாதகங்களில் சுபயோகங்கள் ராஜ யோகங்கள் இருந்தும் அந்த ஜாதகர் வாழ்க்கையில் அடி மட்ட நிலையில் இருப்பார். இதற்குக் காரணம் அந்த யோகங்கள் பங்கமாகியிருக்கும். யோகம் தரும் கிரகங்களுக்கு, பகை கிரகங்களின் சேர்க்கை யோகத்தை பங்கப்படுத்தும். யோகம் தரும் கிரகங்கள் 6, 8, 12 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தால் யோக பங்கம். முக்கியமான வித) யோகம் தரும் கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி பாவகப்படி 6, 8, 12 மறையக்கூடாது. யோகம் தரும் கிரகங்கள் பகை, நீச்சம் பெற்றால் யோக பங்கம். ராசிக்கட்டத்தின்படி யோகம் தரும் கிரகங்கள் பாவகச் சக்கரத்தின்படி பாவக மாற்றம் அடைந்திருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள் கிரகண தோஷம் அடைந்தோ, அஸ்தமனம் அடைந்தோ இருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள் கிரக யுத்தத்தில் இருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள் பாப கர்தாரி யோகத்தில் இருந்தாலும் யோக பங்கமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Raja Yoga Planets Combination in Astrology

The first mentioned here is a Raja Yoga. Raja Yoga means royal union, it is formed by the association of planets and the houses they rule. Raja Yoga is formed by a planet of a kendra house together with a planet of a triconal house.Any planet excluding the Sun, Rahu and Ketu in the house second from the Moon creates Sunapha Yoga. This indicates acquisition, and the planet itself will describe the manner in which things will be acquired.
Story first published: Monday, September 9, 2019, 13:39 [IST]
Desktop Bottom Promotion