For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Rahu Transit 2023: ராகு பெயர்ச்சியால் 2023-ல் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

|

வேத ஜோதிடத்தில் 2 நிழல் கிரகங்கள் உள்ளன. அவை ராகு மற்றும் கேது. மேலும் இந்த இரண்டு நிழல் கிரகங்களும் பின்னோக்கி நகரக்கூடியவை. இவற்றில் ராகு சனியைப் போன்றே பலவைத் தருவதாக கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், ராகு அசுப பலன்களைத் தரமாட்டார். மேலும் ராகு எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசியின் அதிபதி வழங்கும் பலன்களைத் தருவதாக கூறுப்படுகிறது.

தற்போது ராகு மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புத்தாண்டின் தொடக்கத்தில் ராகு மேஷ ராசியில் இருப்பார். ஆனால் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். ராகு மீன ராசிக்கு செல்வதால் 3 ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எந்த மாதிரியான தொல்லைகளை ராகு தருவார் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இது வெளிநாட்டு பயணம், தனிமை, சிறைவாசம் ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி நல்லதாக கருதப்படுவதில்லை. மேலும் ராகுவின் பார்வை 8, 6 மற்றும் 4 ஆவது வீட்டில் விழுகிறது. ஆகவே ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பயணங்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எதிரிகள் அதிகரிக்கலாம். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இக்காலத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், உறவுகளில் விரிசல் ஏற்படும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இது விபத்துக்களின் வீடாக கருதப்படுகிறது. மேலும் ராகுவின் பார்வை 12, 2 மற்றும் 4 ஆவது வீட்டில் விழுகிறது. எனவே இக்காலம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பணப் பற்றாக்குறையை சந்திப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மாமியார்-மாமனாருடனான உறவு மோசமடையும். வெளிநாட்டில் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் ஏமாற்றமடைவார்கள். கண்களில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனை இருந்தால், அது இக்காலத்தில் நீதிமன்றம் வரை செல்லும் இக்காலத்தில் கடுமையாக பேசுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

2023-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியின் போது மீன ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். மேலும் ராகுவின் பார்வை 5,7 மற்றும் 9 ஆவது வீட்டிற்கு விழுகிறது. எனவே இக்காலத்தில் சில தவறான முடிவுகளை எடுப்பீர்கள். புத்திசாலித்தனமாக வேலை செய்வது நல்லது. எதையும் யோக்காமல் முதலீடு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள். காதலிப்பவர்கள் காதல் தோல்வியை சந்திக்கக்கூடும். திருமண வாழ்வில் உள்ள இனிமை நீங்கும். உங்கள் வாழ்க்கைத் துணையை எதற்கும் கட்டாயப்படுத்தாமல், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயலுங்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rahu Transit 2023: These Zodiac Signs Will Face More Problems In Tamil

Rahu transit 2023 will take place from aries to pisces on october 2023. These zodiac signs will face more problems in rahu transit 2023.
Story first published: Saturday, December 3, 2022, 17:49 [IST]
Desktop Bottom Promotion