For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டைய இந்தியாவில் பாலியல் தொழிலில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்ன தெரியுமா?

|

விபச்சாரம் என்பது ஒழுங்கமைப்பட்ட சமுதாயம் உருவான காலம் முதலே உலகத்தில் இருந்து வரும் ஒரு பழமையான தொழிலாகும். கிட்டதட்ட இது அனைத்து நாடுகளிலும், அனைத்து கலாச்சாரங்களிலும் இருந்து வருகிறது. இந்திய இலக்கியங்களிலும், வேதங்களிலும் கூட பாலியல் தொழிலாளிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விபச்சாரம் என்பது சிந்து பள்ளத்தாக்கின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளிலிருந்து அறியப்படுகிறது. மொஹென்ஜோதாரோவைச் சேர்ந்த நடனமாடும் பெண்ணின் வெண்கல உருவம் சில தாய் தெய்வங்களின் கோவிலின் எல்லைக்குள் தனது கடமைகளைச் செய்யும் ஒரு புனிதமான பாலியல் தொழிலாளியை குறிக்கிறது, மேலும் இந்த வழிபாட்டு முறை சிந்து சமவெளி நாகரிகத்தில் நன்கு நிறுவப்பட்டது. பண்டைய இந்தியாவின் மறைக்கப்பட்ட பல பாலியல் உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண்டைய நூல்களின் குறிப்புகள்

பண்டைய நூல்களின் குறிப்புகள்

வேத காலக்கட்டத்தில், ரிக் வேதத்தில் பாலியல் தொழிலாளிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில் சத்பரணி என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறது. இதற்கு பணத்திற்காக பாலியலில் ஈடுபடுபவர் என்று பொருள். வேத காலங்களில், பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் சிவப்பு நிற உடையணிந்ததாகத் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் அணியும் நகைகளில் கூட சிவப்பு நிறம் இருக்கும். பாலியல் வாழ்வை ஏற்றவர்கள் இவ்வாறு அணிவது அவர்களை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் என்று நம்பப்பட்டது.

பெண்களை பரிசாக கொடுப்பது

பெண்களை பரிசாக கொடுப்பது

பண்டைய இந்தியாவில் ஆட்சியாளர்கள் வான நீதிமன்ற முறையைப் பின்பற்றி விருந்தினர் விபச்சார முறையை உருவாக்கினர். பிற மன்னர்களுடன் இருக்கும் நட்பின் அடையாளமாக அவர்களுக்கு கன்னிப் பெண்களை பரிசாக கொடுக்கும் பழக்கம் இருந்தது. பேரரசுகளை வீழ்த்தவும் பாலியல் தொழிலாளிகள் பயன்படுத்தப்பட்டனர்.

விஷக்கன்னிகள்

விஷக்கன்னிகள்

போரில் வெற்றிபெற்றவர் தோல்வியடைந்தவரின் அந்தப்புரத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் தனக்கு அடிமையாக்கிக் கொள்வார்கள். எனவே சிறுவயதில் இருந்தே சில குறிப்பிட்ட பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு விஷ மூலிகைகளும், உணவுகளும் கொடுத்து வளர்க்கப்படுவார்கள். அவர்கள் விஷ்கன்யாஸ்(விஷக்கன்னிகள்) என்று அழைக்கப்பட்டனர். எதிரிகளை அழிக்க இந்த விஷக்கன்னிகள் பயன்படுத்தப்பட்டனர்.

MOST READ: இலட்சக்கணக்கான மக்களை கொன்ற இந்தியாவின் மோசமான கொடுங்கோல் அரசன் யார் தெரியுமா?

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்

சாணக்கியரின் புகழ்பெற்ற நூலான அர்த்தசாஸ்திரம் பாலியல் தொழிலாளிகளுக்கான விதிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி கூறுகிறது. மேலும் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளைகள் என்னவென்பது பற்றியும் இந்நூல் கூறுகிறது. சமூகத்தில் அவர்களுக்கென சில உரிமைகளும், கடமைகளும் வரையறுக்கப்பட்டு இருந்ததது.

காமசாஸ்திரம் கூறுவது என்ன?

காமசாஸ்திரம் கூறுவது என்ன?

வத்ஸ்யன், மூன்றாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய முனிவர் ஆவார். அவரது நினைவுச்சின்னமான காமசூத்ராவில் பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களின் மோகம் நிறைந்த வாழ்க்கை முறைகள் குறித்து பல பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் வர்த்தகத்தின் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடைமுறைக்கான நடத்தை விதிகள் இதில் கூறப்பட்டுள்ளது. இன்றைய பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கைக் குறித்து பல செய்திகளை அவர் அப்போதே கூறியுள்ளார்.

தேவதாசிகளின் புராணக்கதை

தேவதாசிகளின் புராணக்கதை

பண்டைய புராணக்கதையின் படி ஜமதக்னி முனிவர் தனது மனைவி ரேணுகாவின் தலையை துண்டிக்கும்படி தனது மகன் பரசுராமருக்கு உத்தரவிட்டார். தனது தந்தையின் ஆணையை ஏற்ற பரசுராமர் அதற்கு பதிலாக மூன்று வரங்களை கேட்டார். அதில் தன் தாயின் தலையை மீண்டும் அவரது உடலில் சேர்க்க ஒரு வரத்தை பயன்படுத்தினார். ஆனால் ரேணுகாவின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கவில்லை, அதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எல்லம்மா என்பவரின் தலை அவர் உடலுடன் இணைக்கப்பட்டது. இவ்வாறு ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ஒரு பிராமணரின் மனைவி என்ற உயர்ந்த அந்தஸ்தை அடைந்தார். இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி ஏராளமான இளம்பெண்கள் தெய்வத்திற்கு தங்களை அர்ப்பணிக்கத் தொடங்கினர்.

MOST READ: உங்க ராசிப்படி 2020-ல் எந்த மாசம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாசமாக இருக்கப்போகுது தெரியுமா?

புனிதமான பாலியல் தொழிலாளிகள்

புனிதமான பாலியல் தொழிலாளிகள்

உஜ்ஜைனியின் மகாகலாவின் புகழ்பெற்ற கோவில்களில் மதம் சார்ந்த பாலியல் தொழிலாளிகள் இணைக்கப்பட்டனர் மற்றும் அந்த புனித பாலியல் தொழிலாளி முறை சாதாரணமானதாக இருந்தது. இந்த வகுப்பில் பெற்றோர்களால் கடவுளின் சேவை மற்றும் அவர்களின் மதத்திற்கு வழங்கப்பட்ட பெண்கள் இருந்தனர்.தென்னிந்தியாவில், அவர்கள் தேவதாசி என்றும், வட இந்தியாவில் முகீஸ் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிரார்த்தனை செய்யும் நேரத்தில் இந்த நடனமாடும் பெண்கள் அவசியம் என்று கருதப்பட்டு அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

தவறான பாதை

தவறான பாதை

இந்த முறை நாளடைவில் சிலரின் சுயநலத்துக்காகவும், ஒழுக்கக்கேட்டாலும் தவறாக பயன்படுத்தப்பட தொடங்கியது. கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்களின் மூலம் சமூகத்திற்கு புறம்பான இரகசியமான பாலியல் தொழில் அரங்கேறியது.

முகலாயர்கள் காலத்தில்

முகலாயர்கள் காலத்தில்

முகலாய பேரரசும் விபச்சாரத்தை கொண்டதாகவே இருந்தது. இந்த சகாப்தத்தில் "தவாய்ஃப்" மற்றும் முஜ்ரா என்ற சொல் பொதுவானதாகிவிட்டது. முகலாயர்கள் காலத்தில் பாலியல் தொழில் கலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருந்தது. முகலாயர்கள் பாலியல் தொழிலை ஆதரித்தனர், இது நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் நிலையை விபச்சாரத்தின் உயர் மட்டத்திற்கு உயர்த்தியது. ஜஹாங்கிரின் ஹரேமில் 6,000 பாலியல் தொழிலாளிகள் இருந்தனர், இது அதிகாரம், செல்வம் மற்றும் அதிகாரத்தைக் குறிக்கிறது.

MOST READ: பாற்கடலில் இருந்து வெளிவந்த புனிதமான மரம் இன்றும் இந்தியாவில் இந்த இடத்தில் உள்ளதாம் தெரியுமா?

தேவதாசி அமைப்பு

தேவதாசி அமைப்பு

வழிபாட்டுத் தலத்தில் பெண்களை இணைக்கும் தேவதாசி முறை பண்டைய வம்சாவளியைச் சேர்ந்தது. தேவதாசி என்றால் கடவுளின் சேவகி என்று அர்த்தம். பண்டைய இந்திய நடைமுறையின்படி, பருவமடைவதற்கு முந்தைய இளம் பெண்களுக்கு திருமணமாகிவிடும். அவர்கள் கடவுளுக்கு சேவைகள் செய்ய தானமாக கொடுக்கப்பட்டு விடுவார்கள். பருவமடைவதற்குள் கோவிலுக்கு அர்பணிக்கப்படும் தேவதாசி பெண்கள் உயர்சாதி வகுப்பினருக்கு தாசியாக மாறவேண்டும். அவர்கள் உண்மையான திருமண பந்தத்தில் இணைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

தேவதாசிகளின் தோற்றம்

தேவதாசிகளின் தோற்றம்

ஒரு தேவதாசி பக்தியுள்ள கோவில் நடனக் கலைஞர் என்று பிரபலமாக அறியப்பட்டார். இறைவன் அல்லது கடவுள்களை மகிழ்விக்கும் நோக்கில் அவள் நடனங்களை நிகழ்த்துகிறாள், ஆனால் நிச்சயமாக மனிதர்களுக்கு அல்ல. ஆனால் இதுபோன்ற நடனங்களுக்கு மக்கள் சாட்சியாக இருப்பதால், தேவதாசிகள் நாட்டு மக்களுக்கு பொழுதுபோக்குக்கான ஆதாரமாக மாறினார்கள். பண்டைய காலங்களில் தேவதாசிகள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அவை தத்தா, ஹிருதா, பிக்ரிதா, புருத்யா, அலங்கரா மற்றும் கோபிகா அல்லது ருத்ராகனிகா என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய பிரிவுகள் தேவதாசிகளின் தோற்றம் மற்றும் நிலையை வெளிப்படுத்துகின்றன.

தேவதாசிகளின் வகைகள்

தேவதாசிகளின் வகைகள்

ஒரு புனிதமான மனிதர் தனது மகளை ஒரு கோவிலுக்கு தேவதாசியாக வழங்கினால், அவள் "தத்தா தேவதாசி" என்று அழைக்கப்படுகிறாள். ஆனால் ஒரு பெண் கடத்தப்பட்டு பின்னர் ஒரு கோவிலில் பணிபுரிந்தபோது, அவள் "ஹிருதா தேவதாசி" என்று அழைக்கப்படுகிறாள். சில நேரங்களில் ஒரு பெண்மணி ஒரு கோவிலின் நிர்வாகி அல்லது பூசாரிக்கு விற்கப்பட்டால், அவர் "பிக்ரிதா தேவதாசி" என்று அழைக்கப்படுகிறார். ஒரு பெண் தானாக முன்வந்து ஒரு கோவிலில் தேவதாசியாக பணிபுரிந்தால், அவள் "பிருத்யா தேவதாசி" என்று அழைக்கப்படுகிறாள்.

MOST READ: செக்ஸ்டிங் செய்பவரா நீங்கள்? இது உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா?

தேவதாசிகளின் வகைகள்

தேவதாசிகளின் வகைகள்

கோவிலுக்கு சேவை செய்ய பக்தியுடன் தங்களை முன்வந்த சில பெண்கள் "பக்த தேவதாசி" என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட அளவு தேர்ச்சி பெற்றபின், கோவிலுக்கு ஆபரணங்களுடன் வழங்கப்படும்போது, அவள் "அலங்கார தேவதாசி" என்று அழைக்கப்படுகிறாள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோவிலில் நடனம் மற்றும் இசை வழங்குவதற்காக ஊதியம் பெற்றுக்கொண்ட தேவதாசிகள் "கோபிகா" அல்லது "ருத்ராகனிகா" என்று அடையாளம் காணப்பட்டனர். தேவதாசியின் இந்த வகுப்புகள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிலையான ஊதியம் மற்றும் சில சொத்துக்களைப் பெற்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Prostitution In Ancient India

Read to know how prostitution operates in ancient India
Story first published: Thursday, December 5, 2019, 12:17 [IST]