For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இனிமே இத யூஸ் பண்ணுங்க..

பிளாஸ்டிக் பயன்பாட்டை இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது.

|

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஜூன் 30 ஆம் தேதிக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டுமென்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக அபராதமும், தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. ஏனெனில் நாம் தற்போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் ஒருமுறை பயன்படுத்திய பின் குப்பைக்கு தான் செல்கின்றன. இப்படி குப்பைக்கு செல்லும் பிளாஸ்டிக் பைகள் மக்கிப் போகாமல் அப்படியே தங்கி நிலத்தை பாழ்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்கும் சென்று அங்குள்ள உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

Plastic Ban From July 1: Eco-Friendly Alternatives To Plastics In Your Everyday Life in Tamil

இப்படிப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. ஆகவே இனி ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட பட்ஸ், குச்சி மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், கரண்டிகள், கத்திகள், சிகரெட் பாக்கெட்டுகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நமது நிலப்பரப்புகளில் குவியும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க, அன்றாட வாழ்வில் அதற்கு சிறந்த மாற்றாக இருக்கும் சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

உணவுகள் மற்றும் பானங்களை சேமிப்பதற்கு பிளாஸ்டிக் கிச்சன் ஸ்டோரேஜ், டிபன் பாக்ஸ், கரண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்த மாற்றாக இருக்கும். நீரைக் குடிப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துவதற்கு பதிலாக ஸ்டீல் பாட்டிலை பயன்படுத்துங்கள்.

கண்ணாடி

கண்ணாடி

கண்ணாடி மக்கும் தன்மையுடையதாக இல்லாவிட்டாலும், இது மந்தமானது, மலிவானது மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியது. மேலும் பல உணவுகள் கண்ணாடியில் பேக் செய்யப்படுவதால், வீட்டில் உணவுகளை சேமிப்பதற்கு கண்ணாடி ஜாடிகளைப் பயன்படுத்துவது பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.

பிளாட்டினம் சிலிகான்

பிளாட்டினம் சிலிகான்

பிளாட்டினம் சிலிகான் மணலால் ஆனது. அதுவும் உணவு தர பிளாட்டினம் சிலிகான் நெகிழ்வானது மற்றும் நீடித்தது. அதோடு இது வெப்பத்தை தாங்கக்கூடியது. எனவே இந்த வகை பொருட்களைப் பயன்படுத்தி சமைக்கலாம்.

இயற்கையான ஃபைபர் துணி

இயற்கையான ஃபைபர் துணி

இயற்கையான துணி பைகள், பிளாஸ்டிக் பைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். ஏனெனில் இந்த துணி பைகள் பருத்தி, கம்பளி, சணல் அல்லது மூங்கில் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.

மரம்

மரம்

நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பிரஷ், கட்டிங் போர்டு, டேபிள்வேர், சமையலறை பாத்திரங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்றாக புதுப்பிக்கத்தக்க வளமான, நிலையான முறையில் நிர்வகிக்கப்படும் மரத்தால் ஆன தூரிகைகள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் கட்டிங் போர்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

மூங்கில்

மூங்கில்

பிளாஸ்டிக்கால் ஆன மேஜை பாத்திரங்கள் மற்றும் ஸ்ட்ரா போன்றவற்றிற்கு சிறந்த மாற்றாக மூங்கிலால் ஆன பொருட்கள் இருக்கும். கட்லரி, டிஷ்யூ பேப்பர், ஸ்டேஷனரி, பரிமாறும் தட்டுகள், உடற்பயிற்சி துண்டுகள், ஸ்ட்ராக்கள், பிளான்டர்கள் மற்றும் பல மூங்கில் பொருட்கள் உள்ளன. மூங்கில்கள் மக்கும் தன்மை கொண்டவை, எடை குறைவானவை மற்றும் நீண்ட காலம் நீடிக்கும், அவை சுற்றுச்சூழலுக்கும் நுகர்வோருக்கும் சிறந்த தேர்வாக அமைகின்றன.

காகிதம்

காகிதம்

தற்போது பல பொருட்கள் சாதாரண காகிதத்தால் பேக்கிங் செய்யப்படுகின்றன. காகிதம் பிளாஸ்டிக்கை விட சிறந்ததாக இருந்தாலும், காகிதத்தை முடிவில்லாமல் மறுசுழற்சி செய்ய முடியாது. ஏனெனில் இதை ஒவ்வொரு முறை மீண்டும் பயன்படுத்தும் போது, அதன் ஃபைபர்கள் குறுகியதாகி, அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.

அட்டை

அட்டை

அட்டை பெட்டிகள் கோட்டிங் கொடுக்காத வரை முழுமையாக மக்கும். தற்போது பல நிறுவனங்கள் தங்களின் கழிவுகளைக் குறைக்க தங்களின் தயாரிப்புகளை சாதாரண அட்டை பெட்டியில் பேக் செய்து வருகின்றன. எனவே உங்கள் வீட்டில் பொருட்களை பிளாஸ்டிக் கண்டெயினரில் வைப்பதற்கு பதிலாக அட்டை பெட்டிகளில் வைக்கலாம்.

எனவே நீங்கள் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தவிர்க்க நினைத்தால், மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அவற்றிற்கு சிறந்த மாற்றாக விளங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Plastic Ban From July 1: Eco-Friendly Alternatives To Plastics In Your Everyday Life in Tamil

India bans single-use plastic from July 1st. The best eco- friendly alternatives to plastic in your everyday life in tamil. Take a look.
Story first published: Thursday, June 30, 2022, 23:10 [IST]
Desktop Bottom Promotion