For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியில் ஒன்பது நாள் எரியும் விளக்கு பத்தி உங்களுக்கு தெரியுமா? நீங்க என்ன பண்ணும் தெரியுமா?

துர்கா தேவியின் பக்தர்கள் நவராத்திரியின் போது ஒரு விரதத்தை அனுஷ்டிக்கும் போது அகந்த் ஜோதியின் நித்திய விளக்கை ஏற்றி வைக்கின்றனர். இந்த ஜோதி நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.

|

வீடுகளிலும் கோவில்களிலும் பூஜை செய்யும்போது விளக்கு அல்லது தீபம் இல்லாமல் அந்த பூஜை முழுமையடையாது. பண்டிகை மற்றும் பூஜையில் தீபம் முக்கிய பங்கு வகிக்கிறது. துர்கா தேவியின் பக்தர்கள் நவராத்திரியின் போது ஒரு விரதத்தை அனுஷ்டிக்கும் போது அகந்த் ஜோதியின் நித்திய விளக்கை ஏற்றி வைக்கின்றனர். இந்த ஜோதி நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. இந்தியாவில் கோவில்கள் மற்றும் வீடுகளில் எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைக்கும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகள் பழமையானது.

Navratri Akhand Jyoti : Know the rules and how to keep the lamp lit for nine days in tamil

இது இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் வைத்திருக்கின்றனர். பொதுவாக, மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை எண்ணெய் விளக்கை ஏற்றுவார்கள். காலையில் ஒரு முறை குளித்தபின் மற்றும் மாலையில் ஒருமுறை. மேலும் பல நாட்கள் எரியும் விளக்கு அகண்ட ஜோதி என குறிப்பிடப்படுகிறது. எனவே, நவராத்திரியின் போது பக்தர்கள் அகந்த் ஜோதியை (நித்திய விளக்கு) ஏற்றி துர்கா தேவிக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒன்பது நாள் தீபம் எரிவது

ஒன்பது நாள் தீபம் எரிவது

இந்த நவராத்திரி திருவிழாவில், அகந்த் ஜோதி ஒன்பது நாட்களுக்கு எரியூட்டப்படுகிறது. ஒன்பது நாட்கள் விரதம் இருந்து அகண்ட தீபம் ஏற்றுவதற்கான விதிகள் உள்ளன. பக்தர்கள் எண்ணெய் விளக்கை ஏற்றி, இந்த நவராத்திரி திருவிழாவின்போது அதை அணைக்க விடாமல் ஒன்பது நாட்கள் எரிய வைக்கிறார்கள். அதுவே ஒரு தனித்துவமான சடங்காகும். அகண்ட ஜோதி, நியம் (விதிகள்) மற்றும் உதய் (தீர்வுகள்) ஆகியவற்றை எவ்வாறு ஒளிரச் செய்வது என்பதை அறிய இக்கட்டுரையை படிக்கவும்.

MOST READ: இந்த 5 ராசிக்காரர்கள சமாளிக்கிறதுக்குள்ள உயிரே போய்ருமாம்! அவ்ளோ தொல்லை பண்ணுவாங்களாம்!

நவராத்திரிக்கு அகண்ட ஜோதி ஏற்றுவது

நவராத்திரிக்கு அகண்ட ஜோதி ஏற்றுவது

விளக்கேற்ற பித்தளை, வெள்ளி அல்லது மண் விளக்கைப் பயன்படுத்துங்கள். தீபம் ஏற்ற நீங்கள் மண் விளக்கை தேர்ந்தெடுத்தால், தீபம் எரியும்போது அனைத்து எண்ணெயையும் உறிஞ்சுவதைத் தடுக்க அதை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

தீபம் ஏற்றுவதற்கு எண்ணெய்

தீபம் ஏற்றுவதற்கு எண்ணெய்

சிறிய மேசையின் மீது எண்ணெய் விளக்கை வைக்க வேண்டும். அன்னை தேவியின் வலதுபுறத்தில் விளக்கை வைக்க வேண்டும். திருவிழாவின் ஒன்பதாவது நாள் முடியும் வரை தீபத்தை பற்றவைக்க ஒரு நீண்ட மற்றும் அடர்த்தியான பருத்தி திரியைப் பயன்படுத்தவும். தீபம் நன்றாக எரிவதற்கு தூய எள் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்தவும்.

MOST READ: சமையலுக்கு பயன்படுத்தும் 'இந்த' ஒரு பொருள்... உங்க எடை குறைப்பில் அதிசியங்களை செய்யுமாம் தெரியுமா?

காற்றில் அணையாமல் பார்த்துக்கொள்ளவும்

காற்றில் அணையாமல் பார்த்துக்கொள்ளவும்

விளக்கை ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றிற்கு அருகில் வைக்க வேண்டாம். ஏனெனில், திடீரென காற்று வீசும்போதுஅணையாமல் இருக்கும். நீங்களும் தீபம் அணைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலிருந்து திறந்திருக்கும் ஒரு கண்ணாடிப் பெட்டியையோ அல்லது திறந்த டாப் கொண்ட கண்ணாடி பெட்டியினுள் தீபத்தை வைத்து காற்றில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தலாம்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

விளக்கின் எண்ணெயின் அளவை சரிபார்க்கவும். பின்னர், தீபம் நன்றாக எரிவதற்கு மெதுவாக எண்ணெயைச் சேர்க்கவும். தொடர்ந்து எரிவதால், விளக்கில் ஒரு புதிய திரியைச் சேர்த்து, அதை ஒளிரச் செய்யவும். விரதம் முடிவதற்குள் அகண்ட தீபம் அணைக்கப்படுவதைத் தடுக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய தேவை ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri Akhand Jyoti : Know the rules and how to keep the lamp lit for nine days in tamil

Here we are talking about the Navratri Akhand Jyoti : Know the rules and how to keep the lamp lit for nine days in tamil.
Desktop Bottom Promotion