For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

37 முறை குத்திக்கொன்றது முதல் கணவரின் ஆணுறுப்பை கடித்து துப்பியது வரை உலகையே நடுங்கவைத்த கொடூர மனைவிகள்...!

|

இந்த உலகம் தொடர்ந்து விரிவடைந்தும், முன்னேறிக் கொண்டும் இருப்பதற்கு ஆண், பெண் உறவு என்பது மிகவும் முக்கியமானது. எந்தவொரு ஆண், பெண் உறவையும் முழுமையாக்குவது அவர்களுக்குள் ஏற்படும் திருமணம் என்னும் பந்தம்தான். இந்த உறவுதான் அனைத்து உறவுகளுக்கும் அடித்தளமாக அமைகிறது.

Most Cruel Wives Who Killed Their Husbands For Rage in Tamil

இன்று தினந்தோறும் கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்படுவது, ஒருவரையொருவர் கொல்ல முயற்சி செய்வது போன்ற செய்திகளை தினமும் நாளிதழ்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது இதற்கு ஒருபடி மேலே சென்று கோபம், பொறாமை போன்றவற்றிற்காக தனது கணவரை கொடூரமாகக் கொன்ற மனைவிகள் சிலரைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேத்தரின் நைட்

கேத்தரின் நைட்

இந்த சம்பவம் 2000 ஆம் ஆண்டு நடந்தது. கேத்தரின் நைட் தனது கணவரை கசாப்பு கத்தியால் 37 முறை குத்திக் கொன்றார். பின்னர் அவரைத் தோலுரித்து, அவரது லவுஞ்ச் அறையில் இறைச்சி கொக்கி வைத்து அவரது உடலைத் தூக்கிலிட்டார். பரோல் இல்லாமல் முழுமையான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முதல் ஆஸ்திரேலிய பெண் இவர்தான். இவருக்கு ஏற்கனவே கடந்தகால வன்முறை வரலாறு இருந்தது. தன்னுடைய முன்னாள் காதலனின் பற்களை உடைத்திருந்தார், மேலும் தனது முன்னாள் கணவரின் எட்டு வார நாய்க்குட்டியின் கழுத்தை அவர் கண் முன்னாடியே வெட்டினார். தனது கணவரான ஜான் சார்லஸ் தாமஸை 37 முறை கத்தியால் குத்தி மறைவான அறையில் தொங்கவிட்டார். அதன்பின் அவரது தலையை வெட்டி ஒரு பாத்திரத்தில் மூடி வைத்த கேத்தரின், அவரது பின்பக்க சதையை வெட்டி காய்கறிகளுடன் சேர்த்து அவரின் குழந்தைகளுக்காக கிரேவி தயாரித்தார். குழந்தைகள் வீட்டுக்கு வருவதற்கு முன்பே போலீசார் இதனை கண்டறிந்தனர்.

 மரியா சாவேஸ்

மரியா சாவேஸ்

மரியா சாவேஸ் என்ற பெண் தனது பிரிந்த கணவரை வீட்டு வேலைக்காரியுடன் ஒரே படுக்கையில் கண்டவுடன் ஆத்திரத்தில் கேரேஜுக்கு சென்று மரம் வெட்டும் கோடரியை எடுத்து வந்து கணவரின் தலையில் வெட்டினார். சம்பவம் நடந்த உடனேயே அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது தலையில் இருந்து கோடரியை அகற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆறு மணி நேரம் செலவிட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் பிழைத்து, குணமடைந்த பிறகு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ தொடங்கினார்.

 ஸ்டேசி கேஸ்டர்

ஸ்டேசி கேஸ்டர்

ஸ்டேசி காஸ்டர் தனது இறந்த கணவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தோன்றும் வகையில் ஒரு காட்சியை அரங்கேற்றினார். ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரின் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்ந்த போதுதான் அவரின் முன்னாள் கணவரும் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டதை கண்டறிந்தனர். எனவே அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை படித்தபோது இரண்டாவது கணவரின் உடலில் இருந்தது போன்றே அவரின் உடலிலும் எத்திலீன் கிளைகோல் என்ற பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே தன்னுடைய இன்னொரு திட்டத்தை ஸ்டேசி செயல்படுத்தினார், தனது சொந்த மகள் ஆஷ்லியை இந்த பழியில் சிக்க வைக்க நினைத்தார். ஆஷ்லே தனது முதல் கணவர் (ஆஷ்லேயின் அப்பா) இறந்தபோது ஏழு வயதுதான் என்ற போதிலும். 2007 ஆம் ஆண்டில், ஆஷ்லே மாத்திரைகள் மற்றும் ஓட்காவிற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவள் மாற்றாந்தாயைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட ஒரு எழுதப்பட்ட குறிப்பு கூட இருந்தது. 2009 ஆம் ஆண்டில் தனது தாயின் வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க ஆஷ்லே உயிர் தப்பினார். இப்போது சிறையில் இருக்கும் இந்த பெண் தனது 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டுள்ளார். கணவனைக் கொன்றதற்காகவும், மகளை கொலை செய்ய முயன்றதற்காகவும் இந்த தண்டனை அளிக்கப்பட்டது.

MOST READ:நம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா? ஷாக் ஆகாம படிங்க...!

ஒமைமா ஆரி நெல்சன்

ஒமைமா ஆரி நெல்சன்

மாடல் ஒமைமா ஆரி நெல்சன் தனது கணவரை குப்பை அகற்றும் இயந்திரத்தில் அரைக்க முயன்றார். ஆனால் அவரால் 6 அடி 4 அங்குலம் இருந்த, 230 பவுண்ட் உடலை முற்றிலுமாக அகற்ற முடியவில்லை. அதனால் அந்த உடலை வேகவைத்து நன்கு வறுத்து உடல் பாகங்களை சாப்பிட்டார்.

 சீனப் பெண் லீ

சீனப் பெண் லீ

இவர் செய்தது கொலைக்கும் மேலான காரியமாகும். சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சியாஆக்ஸியனில் கோபமடைந்த சீனப் பெண் ஒருவர் தனது கணவரின் தூக்கத்தில் இருந்தபோது அவரின் விதைப்பந்துகளை வெட்டினார். தனது திருமண வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்காக இதனை செய்ததாக கூறினார். சீன பெண் லி ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் ஒரு நல்ல தாய். அவர் தங்கள் குழந்தைகளையும் கணவர் ஹுவாங்கையும் நன்றாக கவனித்துக்கொள்கிறார். லி விவாகரத்து கேட்டார், ஆனால் ஹுவாங் மறுத்துவிட்டார். அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்ட போது லீ அதற்கான மாத்திரைக்கு பதிலாக தூக்க மாத்திரையைக் கொடுத்தார். அவர் தூங்கிக்கொண்டிருந்த போது பழம் வெட்டும் கத்தியால் அவரின் விதைப்பந்துகளை லீ வெட்டினார்.

கேத்யா கரிட்டோவோனோவா

கேத்யா கரிட்டோவோனோவா

36 வயதான கேத்யா கரிட்டோவோனோவா, கணவனான மைக்கேல், 40, மற்றும் அவரது காதலி லிசா டிமிட்ரியேவா, 33 ஆகியோருக்கு ஏற்படுத்திய காயங்களுக்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். லிசா கேத்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கப்பட்டார், உணவிற்கு பிறகு அவர்கள் அனைவரும் படம் பார்க்க அமர்ந்தனர். ஆனால் கேத்யா தூங்கிவிட்டார். கேத்யா கண்விழித்து பார்த்தபோது தனது கணவர் அரை நிர்வாணமாக லிசாவுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரப்பட்டார். உடனே ஒரு விளக்கை எடுத்து லிசாவின் தலையில் அடித்துத் தள்ளினார். அதன்பின் தனது கணவரின் ஆணுறுப்பை வெறித்தனமாக கடித்து துண்டித்தார். அவர் ஏற்படுத்திய காயங்களின் தீவிரத்தை உணர்ந்த கேத்யா ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்தார், மேலும் அந்த ஜோடி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். லிசா கடுமையான மூளை அதிர்ச்சிக்கு ஆளானார், மைக்கேல் அவர் ஆணுறுப்பை அறுவைசிகிச்சை மூலம் இணைக்கும் நிலைக்கு ஆளானார்.

விக்கி லோவிங்

விக்கி லோவிங்

விக்கி லோவிங் என்ற ஆஸ்திரேலிய பெண்மணி தனது கணவனை விவாகரத்து செய்தார். அதற்கு காரணம் அவர் விக்கியின் குழந்தை போல இருந்த அவரின் செல்ல முதலையை விட்டு விடுமாறு கூறியதுதான். பல ஆண்டுகளாக ஒன்றரை மீட்டர் ஊர்வனத்தை கையால் வளர்த்த 52 வயதான திருமதி லோவிங், அதை வீட்டின் தங்க வைத்தார், மேலும் தனது மகன் ஆண்ட்ரூவுடன் படுக்கையில் தூங்க அனுமதித்தார். விக்கி 1996-ல் அவரின் வீட்டு வாசலில் யாரோ ஒருவரால் வைக்கப்பட்ட முதலையை தத்தெடுத்துக் கொண்டார். அவரது கணவர் கிரெக், செல்லப்பிராணியுடன் அதிக நேரம் செலவிடுவதாகவும், அவர்களது திருமணத்தை காப்பாற்றுவதற்காக அதை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டார், எனவே அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். விக்கி இதைப்பற்றி கூறுகையில் " எனது கணவர் அவரின் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வார், ஆனால் என் முதலைக்கு யார் உணவு வைப்பார்கள் " என்று கூறினாராம்.

MOST READ:அப்பா, கணவர், மகன் என அனைவராலும் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட மகாராணி யார் தெரியுமா?

76 வயது பெட்டி நியூமர்

76 வயது பெட்டி நியூமர்

ஜெஃப் கார்ஸ்டென்சன் தனது பாட்டி 100,000 டாலர் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கத் திட்டமிட்டதை அறிந்தபோது, ​​அவர் தன்னை பயனாளி என்று பெயரிட்டார். பெட்டி நியூமரின் வாழ்க்கை வட்டத்தில் வந்த அனைவருக்கும் கெட்ட விஷயங்களே நடந்தது. 76 வயதான ஜார்ஜியா பெண் வட கரோலினா சிறையில் உள்ளார், தனது நான்காவது கணவர் ஹரோல்ட் ஜென்ட்ரியைக் கொல்ல ஒரு கூலியாளை ஏவியதாக அவரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது முதல் குழந்தை மற்றும் ஜென்ட்ரி உட்பட அவர் திருமணம் செய்த ஐந்து ஆண்களில் நான்கு பேர் இறந்ததை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். இவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவருக்கு பணத்தின் மீது அதிக ஆசை இருந்தது தெஇர்ய வந்தது. 1986 ஆம் ஆண்டில் ஹரோல்ட் ஜென்ட்ரி அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் குறைந்தது $ 20,000 சேகரித்தார். ஒரு வருடம் முன்னதாக, அவரது மகன் இறந்தபோது அவர் $ 10,000 ஆயுள் காப்பீட்டில் வசூலித்திருந்தார். 2008 ஆம் ஆண்டில் இறந்த ஐந்தாவது கணவர் ஜான் நியூமருக்கு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையும் இருந்தது. அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Cruel Wives Who Killed Their Husbands For Rage in Tamil

Here is the list most cruel wives who killed their husbands for rage.
Desktop Bottom Promotion