Just In
- 3 hrs ago
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- 3 hrs ago
புதினா சட்னி
- 4 hrs ago
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- 4 hrs ago
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
Don't Miss
- News
நெஞ்சுக்குநீதி ரிலீஸ், மாமன்னன் சூட்டிங்.. சேலத்தில் உதயநிதிக்கு நன்றி சொன்ன பேரறிவாளன்,அற்புதம்மாள்
- Sports
"இப்ப செஞ்சி என்ன பயன்" சிஎஸ்கேவுக்காக மொயீன் அலி காட்டடி.. அதுவும் எப்படி தெரியுமா??
- Finance
குஜராத்தின் கிப்ட் சிட்டியில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!
- Movies
வருண் அக்ஷராவுக்கு திருமணமா ?... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதன் வக்ர பெயர்ச்சி: மே 10 முதல் இந்த ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களில் புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 23 நாட்கள் ஆகும். ஆனால் இந்த முறை புதன் ஒரே ராசியில் 2 மாதங்கள் வரை தொடர்ந்து பயணிக்கிறார். இந்த காலத்தில் புதன் வக்ர நிலையில் அதாவது பிற்போக்கு நிலையில் இருக்கும். கிரகங்கள் பிற்போக்கு நிலையில் இருக்கும் போது சற்று பலன்கள் மோசமானதாகவே இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில், அதாவது மே மாதத்தில் புதன் ரிஷப ராசியில் வக்ர நிலையில் இருக்கும். பின் அது அந்த ராசியில் அஸ்தமனமாகி நேர் பாதையில் பயணிக்கும். இறுதியாக அது மிதுன ராசிக்கு செல்லும்.

2022 புதன் பெயர்ச்சி
புதன் வக்ர பெயர்ச்சியானது 2022 மே 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 05.16 மணிக்கு நிகழ்கிறது. அதன் பின் 2022 மே 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு அஸ்தமனமாகிறது. பின்னர் 2022 ஜூன் 03 ஆம் தேதி வெள்ளிகிழமை மதியம் 1.07 மணிக்கு புதன் நேர் பாதையில் பயணிக்கத் தொடங்கும். பின் 2022 ஜூலை 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.40 மணிக்கு புதன் மிதுன ராசிக்கு செல்லும். இப்போது 2022 புதன் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்

ரிஷபம்
புதன் வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். மேலும் இக்காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும் மற்றும் நிதி நெருக்கடியை சந்திக்கலாம். அதே வேளையில் அலுவலகத்தில் சில சவால்களை சந்திப்பீர்கள். மொத்தத்தில் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பகிறது. பணத்தை சம்பாதிக்கும் போது , யாரையும் அதிகம் நம்பாதீர்கள். இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். குறிப்பாக சிலர் தலைவலியால் அவதிப்படுவார்கள். இந்த காலத்தில் உங்களின் சில உடைமைகள் இழக்கப்படலாம், எனவே கவனமாக இருங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! புதன் வக்ர பெயர்ச்சியால் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அதே வேளையில் குடும்பத்திலும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், இக்காலத்தில் மிகப்பெரிய பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி காலமானது தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இக்காலத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புளளது. வியாபாரத்தில் தடைகள் ஏற்படலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் புதன் வக்ர பெயர்ச்சியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அதோடு நிதி பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். எனவே இக்காலத்தில் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.