Latest Updates
-
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!
தனுசு ராசியில் உருவான லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
தனுசு ராசியில் புதன், சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகத்தை உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோக காலமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, அது அனைத்து ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகத்தை உருவாக்கும். அந்த வகையில் 2022 டிசம்பர் 03 ஆம் தேதி புத்திகாரகனான புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சென்றார்.

அதன் பின்னர் செல்வம், ஆடம்பரம் மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் 2022 டிசம்பர் 05 ஆம் தேத தனுசு ராசிக்குள் நுழைந்தார். இதனால் தனுசு ராசியில் புதன், சுக்கிரன் சேர்க்கையால், லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இது ஒரு சுப யோகம் என்பதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், லட்சுமி நாராயண யோக காலமானது 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்
லட்சுமி நாராயண யோகமானது கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பைத் தரும். ஏனெனின் இந்த யோகம் கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் புதிய வழிகளில் பணத்தை சம்பாதிப்பீர்கள். வருமானத்தில் பெரிய உணர்வைக் காண்பீர்கள். இக்காலத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தைத் தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் நற்பலன்கள் கிடைக்கும். ஏனெனில் இந்த யோகமானது விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இக்காலத்தில் பல வழிகளில் இருந்து எளிதில் பணத்தைப் பெறுவீர்கள். மார்கெட்டிங், ஊடகம் போன்ற பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கும் லட்சுமி நாராயண யோகம் நல்ல பலனைத் தரும். ஏனென்றால் இந்த யோகம் மீன ராசியின் 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது பணியிடத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடனான உறவுகள் மேம்படும். பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரனின் அருளால், நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
லட்சுமி நாராயண யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். மாணவர்களுக்கு இது வெற்றியைத் தரும் காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
