For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திகை தீபத்தன்று விளக்கை எந்த திசையில் ஏற்ற வேண்டும்? அப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

கார்த்திகை திருநாளில் நீங்கள் தீபம் ஏற்றுவது உங்களுக்கு பல நன்மைகளை தருகிறது. துன்பம் என்ற இருளை நீக்கி மகிழ்ச்சி என்னும் தீபத்தை இந்நாளில் ஏறுங்கள். நீங்கள் நினைத்த செயல்கள் நடக்கும்.

|

தமிழ்நாட்டில் கார்த்திகை தீபம் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். கார்த்திகை நட்சத்திரம் நிலவும் போது, கார்த்திகை பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. வீடுகளிலும் கோயில்களிலும் மாலையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. இது உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்களை நீக்கி மகிழ்ச்சி என்னும் வெளிச்சத்தை கொடுக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வீடுகளில் தீபத்தை ஏற்றி கொண்டாடுவார்கள்.

Karthigai Deepam Date, Story, History, Rituals Nakshatra Timings, Importance and Significance in Tamil

பக்தர்கள் சிவபெருமானையும் அவரது மகனான முருகனையும் வழிபடுகின்றனர். சுவாரஸ்யமாக, தீபாவளியைப் போலவே, கார்த்திகை தீபமும் தீபங்களின் திருவிழாவாகும். ஏனெனில் தீபங்கள் அல்லது எண்ணெய் விளக்குகள் வீடுகளிலும் கோயில்களிலும் மாலையில் ஏற்றப்படுகின்றன. கார்த்திகை தீபம் 2022 தேதி, நட்சத்திர நேரம் மற்றும் பிற விவரங்களை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை தீபம் தேதி மற்றும் நட்சத்திர நேரங்கள்

கார்த்திகை தீபம் தேதி மற்றும் நட்சத்திர நேரங்கள்

கார்த்திகை பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் டிசம்பர் 6ஆம் தேதி காலை 8:35 மணிக்கு தொடங்கி டிசம்பர் 7ஆம் தேதி காலை 10:25 மணிக்கு முடிவடைகிறது. கார்த்திகை நட்சத்திரம் தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற தீபத்திருவிழா.

தீபம் ஏற்றி வழிபடுவார்

தீபம் ஏற்றி வழிபடுவார்

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் தமிழர்களால் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.

புராணத்தில் கூறப்படுவது

புராணத்தில் கூறப்படுவது

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். கார்த்திகை தீபம் இந்த புராணத்தின்படி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. முருகனை வைத்தும் ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை தீபம்

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர். இத்தீபம் ஏற்றச் சுமார் 3000 கிலோவிற்கு மேற்பட்ட நெய்யும்,1000 மீட்டர்காட்டன் துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

தீபம் ஏற்றும் முறை

தீபம் ஏற்றும் முறை

தீபத் திருநாளில் வடக்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது என்று கூறுவார்கள். மேலும், தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்களாவது ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.

தீபம் ஏற்றுவதால் பெறும் நன்மைகள்

தீபம் ஏற்றுவதால் பெறும் நன்மைகள்

கார்த்திகை திருநாளில் நீங்கள் தீபம் ஏற்றுவது உங்களுக்கு பல நன்மைகளை தருகிறது. துன்பம் என்ற இருளை நீக்கி மகிழ்ச்சி என்னும் தீபத்தை இந்நாளில் ஏறுங்கள். நீங்கள் நினைத்த செயல்கள் நடக்கும். திருமணம் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கும். வீட்டில் செல்வங்கள் பெருகும். சகல நன்மைகளை உண்டாகும். இந்த நல்ல நாளில் விளக்கை ஏற்றி இறைவனை வணங்கி வளம் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karthigai Deepam Date, Story, History, Rituals Nakshatra Timings, Importance and Significance in Tamil

Here we are talking about the Karthigai Deepam 2021 Date, Story, History, Rituals Nakshatra Timings, Importance and Significance in Tamil.
Desktop Bottom Promotion