For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?

சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர். தீப திருநாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் என்பதற்கான

|

அக்னியை கடவுளாக வழிபடும் வழக்கம் காலம் காலமாக உள்ளது. பஞ்ச பூதங்களில் அக்னியை வணங்குவது தனி சிறப்பு. தீபமாக ஏற்றி வணங்கி அதில் இறைவனை காண்கின்றனர். கார்த்திகை திருவிழா கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளில் விளக்கேற்றுவதுதான். தீப திருவிழாவின் முக்கிய அம்சமாக சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள். அந்த சொக்கப்பனையை இறைவனாக வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது.

MOST READ: கார்த்திகை தீபம் : 27 தீபங்களும்... அதன் பயன்களும்...

சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.

MOST READ: இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...

பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பனை மரம்

பனை மரம்

கார்த்திகை தீப விழாவிற்கும் பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக் காம்புகள் நார் எடுக்க, நுங்கு உணவாக, பனையின் பாளை பதநீர் தயாரிக்க, மரக்கட்டை அடுப்பு எரிக்க... என்று பனையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால்தான் எனவேதான் இதனை பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கின்றனர். பல்வேறு தலங்களில் பனைமரம் தலமரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சொக்கப்பனை

சொக்கப்பனை

பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

Picture Courtesy

சொர்க்கப்பனை

சொர்க்கப்பனை

ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே சொக்கப்பனை எரிப்பதன் தத்துவம். சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் பனை என்பனவற்றின் பொருளாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

விளைச்சல் அதிகரிக்கும்

விளைச்சல் அதிகரிக்கும்

விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது. சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது ஐதீகம்!

மகிழும் மகாபலி

மகிழும் மகாபலி

கார்த்திகைத் தீப நாளில் மாவலி சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பாதாளத்தில் வசிக்கும் மாவலி, தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கிறார் என்கிற ஐதீகத்தால் அவர் பெயரால் இது மாவலி ஆனது என்றும் கூறுகின்றனர். கார்த்திகை தீப திருநாளில் நாமும் ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karthigai Deepam 2019: Story Behind Chokka Panai

During karthigai deepam mostly chokka panai will be performed. Chokka Panai is the lighting of the bonfire in temples, houses and streets during the Karthigai Deepam festival. Here is a story behind chokka panai. Read on...
Story first published: Monday, December 9, 2019, 14:20 [IST]
Desktop Bottom Promotion